தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி, வெங்காயம், தக்காளி, கொத்தம்மலி, புதினா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கரம் மசாலா பொருட்கள்,
செய்முறை:
1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கரம்மசாலா பொருட்கள் ( பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, அன்னாச்சி பூ) ஆகியவறை சேர்த்து தாளிக்க வேடும்.
2. பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
3. தக்காளி - வெங்காய குழைந்து வந்த பின்பு அதில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள வேண்டும்.
இப்போது ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
5. பின்பு அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான குக்கரில் தாளித்த தக்காளி சாதம் தயார்.
6. இதனுடன் தயிர் பச்சடி அல்லது பக்கோடா வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
0
Leave a Reply