அருஞ்சுவை கொண்ட மாம்பழம்..
சீஸனின் முதல் மாம்பழத்தைக் கையிலேந்தும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது. அந்த வருடத்தின் சீஸன் முடியும்போது ஏற்படும் வருத்தமும் விவரிக்க முடியாதது வருடம் முழுவதும் கிடைத்தால் என்னவென்று ஏங்க வைக்கும் அருஞ்சுவை கொண்டது மாம்பழம்..
பலருக்கும் நம் நாட்டின் தேசியப்பறவையில், தேசிய மலர் தாமரை என்பது போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும். மாம்பழம் நம்முடைய தேசியக்கனி என்பது எல்லோருக்கும் தெரியாது. அதேபோல் மாம்பழத்துக்காகவே ஜூலை 22ம் தேதி தேசியமாம்பழதினம் கொண்டாடப்படுகிறது என்பதும் தெரிந்திருக்கும் வாய்ப்புக் குறைவு.
இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மல்கோவா, கிளி மூக்கு,நடுசாலை, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மும்பை அல்போன்சா மாம்பழங்களுக்கும், ஐதராபாத் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாடு இமாம்பசந்த், மல்கோவா மற்றும் செந்தூரா மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜன் புரதத்தை உடலில் சுரக்கவும் உதவி புரிகிறது. ரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத்திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். இளமை இன்னும் சிறிது காலம் நீடிக்கும்.
.மாம்பழம் வாங்கும்போது தோல் பளபளவென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பளபளவென மினுக்கும் மாம்பழம் செயற்கை முறையில் ரசாயனத்தால் கனிய வைக்கப்பட்டதாக இருக்கலாம். கருப்புப் புள்ளிகள் உள்ள பழங்கள் இயற்கையாகப் பழுத்தவை. சுவையும் அதிகமாக இருக்கும்.
தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களைத் தட்டிப் பார்த்துவாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது என்றோ அல்லது அதிகம் கனிந்தது என்றோகண்டுகொள்ளலாம்.
மாம்பழத்தால் பாதிப்பு ஏதும் வருமோ என்ற அச்சம் இருந்தால் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு பயன்படுத்தலாம். இதன்மூலம் பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து போன்றவை நீங்கிவிடும்.
மாம்பழங்களைத் தோல் சீவி, வெட்டிச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமலும் இருக்கும். வயிற்று வலியும் ஏற்படாது. மாம்பழத்தில் புழுக்கள் இருக்கிறதா என்றும் கண்டறியவும் இந்த முறை உதவும்.
0
Leave a Reply