25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் நொறுக்குத்தீனியாக இருக்கிறது. மக்காச்சோளத்தை வேகவைத்து சாப்பிடுவதும் சிறந்தது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 

செரிமானத்திற்கு உதவும்.

மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்துக் கள், செரிமான அமைப்பை சீராக இயங்கச் செய்து, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. வயிறு உப்புசத்தையும் கட்டுப்படுத்தும். குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளரவும் உதவிடும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மக்காச்சோளத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை தடுக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக் கியமான ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

கண் ஆரோக்கியத்தை காக்கும்.

மக்காச் சோளத்தில் லுடீன் மற்றும் ஜியா சாந்தின் போன்ற ஆன்டி ஆக் சிடென்டுகள்   அதிகம் உள்ளன. இவை கண் புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினைகளை தடுக்க வல்லவை.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

மக்காச்சோளத்தில் உள்ள நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக வெளியிட வழிவகை செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

நச்சுக்களை வெளியேற்றும்.

மக்காச்சோளத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், உடலில் உள்ள நச்சுக்களை வெளி யேற்ற ஊக்குவிக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News