25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (16.03.2026) சட்டமன்றத் தேர்தல்-2026 தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் வேட்பாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பதற்கும் காசோலை புத்தகங்கள் வழங்குவதற்கும் சுமூகமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.10 இலட்சத்திற்கு மேல் சந்தேகத்திற்குரிய வங்கி பணப்பறிமாற்றம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்கும்படியும், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் பணப்பரிமாற்றம் செய்யும்படியும், பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உள்ள பணியாளர்களுக்கு அவர்களுடைய அமைப்புகள் / நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை கண்டிப்பாக எடுத்துச் செல்லும்படியும், வேட்பாளர் வங்கி கணக்கில் நடைபெறும் அனைத்து பணப்பறிமாற்றத்தினை கண்காணிக்கும்படியும், தேர்தல் பணிக்காக பணப்பறிவர்த்தனைகளை கண்காணிக்க போதுமான அலுவலர்களை நியமிக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பணப்பறிமாற்றம் நடைபெற்றால் உடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
 
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News