25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (2026-27)-ம் ஆண்டிற்கான காரீப் பருவப் பயிர்கள்  மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள்  உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (2026-27)-ம் ஆண்டிற்கான காரீப் பருவப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை விவசாயிகள் உடனடியாக காப்பீடு செய்ய வேண்டும்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 466/-, சோளம் பயிருக்கு  ரூ. 192/-, பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.370/-, பருத்தி பயிருக்கு ரூ.409/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.431/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான  வெங்காயம் பயிருக்கு ரூ.1591/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3997/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2026-27 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நிலக்கடலை பயிருக்கு (31.08.2026), உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு (16.09.2026)  மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு (30.09.2026) வரையிலும்,   தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு (31.08.2026)  மற்றும் வாழை பயிர்களுக்கு (15.09.2026)  காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

ஆகையால், விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலம், விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News