இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பெங்களூரு ஐஐஎஸ்சியின் பேராசிரியரான பேராசிரியர் மயங்க் ஸ்ரீவாஸ்தவாகேட்கிறார்:"இந்தியாவிற்கு பணப் பற்றாக்குறை இல்லை. இந்தியர்களுக்கு பணப் பற்றாக்குறை இல்லை. எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான தொலைநோக்குப் பார்வை நமக்கு இல்லை."ஐபிஎல் 2023 வருவாய்: ₹11,770 கோடி,பிசிசிஐ உபரி: ₹5,120 கோடி3 ஆண்டு ஐபிஎல் லாபம்: ₹15,000 கோடி,சாத்தியமான வரி (40%): 10 புதிய ஐஐடிகளைக் கட்ட போதுமானது. உரிமையாளர் லாபம்: ₹800–1,200 கோடி/ஆண்டு → வரி சாத்தியம்: ஆராய்ச்சிக்கு ₹6,000 கோடி/ஆண்டுஆனால் இங்கே முரண்பாடு:பிசிசிஐ வருமான வரி செலுத்துவதில்லை (தொண்டு நிலை),ஆராய்ச்சி ஆய்வகங்கள் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துகின்றன. பாலிவுட், மத அறக்கட்டளைகள், விளையாட்டு லீக்குகள் = வரிச் சலுகைகள்டாக்டர் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்: “பொழுதுபோக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிக்கு வரி விதிக்கப்படுகிறது.”ஆராய்ச்சி நிறுவனங்கள் நிதிக்காக போராடும் போது,கிரிக்கெட் வாரியம் ஏன் வரி விலக்கு பெறுகிறது? நாம் ஏன் நுண்ணோக்கிகளுக்கு வரி விதிக்கிறோம், ஆனால் போட்டி டிக்கெட்டுகளை ஏன் செலுத்துவதில்லை?இந்தியா உண்மையிலேயே ஒரு தொழில்நுட்ப சக்தியாக மாற வேண்டும் என்று கனவு கண்டால், நமது பணம் இங்குதான் செல்ல வேண்டுமா?நாம் சிக்ஸர்களுக்கு ஆரவாரம் செய்கிறோம், ஆனால் அறிவியலுக்கு ஆரவாரம் செய்கிறோம்?இந்தியா தனது முன்னுரிமைகளை நிர்ணயிக்க வேண்டிய நேரம்..
கனடாவில் தென்கிழக்கு அலாஸ்காவில் காணப்படும் கடல் ஓநாய்கள் இனம் தனித்துவமான ஒன்றாகும்.நிலப்பரப்பில் காடுகளில் காணப்படும் காட்டு ஓநாய் களும், கடலோரத்தில் காணப்படும் கடல் ஓநாய்களும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால்கூட கடல் ஓநாய்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவை.பொதுவாக, காட்டு ஓநாய்கள் சிறு விலங்குகளை வேட் டையாடி உணவாக உட்கொள்ளும். ஆனால், கடல் ஓநாய் கள் நீண்ட தொலைவுக்கு தண்ணீரில் நீந்தும் திறன்கொண் டவை. இவை கடலில் தீவுகளுக்கு இடையில் நீந்தி மீன்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றன.இரையை தந்திரமாக வேட்டையாடுவதில் திறன் வாய்ந் தவை. உயிரினங்களுக்கு எந்த சந்தேகமும் வராத அள வுக்கு திருட்டுத்தனமாக நகரும். அவற்றின் முதுகு மற்றும் உடல் மட்டுமே நீரில் மூழ்கி இருக்கும்..அவற்றின் காதுகள், கண்கள் மற்றும் மூக்கு நீரின் மேற்பரப்பில் சிறிதளவு வெளியே தெரியும். இரையை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலில் பிடித்துவிடும்.கடலில் சில நேரங்களில் மீன்கள் கிடைக்காதபோது இவை கடல் பகுதியை ஒட்டிய நிலப்பரப்புக்கு வந்து கருப்பு வால் மான் மற்றும் கடமான் இனங்களை வேட்டையாடி உண்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ள னர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கடல் ஓநாய் கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம் பெற் றுள்ளன.
உலக அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.நாம் மூச்சை வெளிவிடும் போது அதில் வெளிப்படுகிற ஒருவித வேதிப்பொருளை வைத்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சீனாவைச் சேர்ந்த ஜிஜி யாங் பல்கலை கூறியுள்ளது.நம் உடலில் கொழுப்பானது உடைக் கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது, ஐசோப்ரின் என்னும் வேதிப் பொருள் வெளியாகும். இது நாம் விடும் மூச்சில் கலந்து உடலை விட்டு வெளி யேறி விடும். இதனுடைய அளவு குறை வாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புஉண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் களைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. இது தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடைசியில் பிளாட்டினம், இண்டியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த ஒரு சென்சாரை உருவாக்கினர். இது மிகக் குறைந்த அளவு வெளியேறுகின்ற ஐசோப்ரினைக் கூடக் கண்டறிந்து விடும்.விஞ்ஞானிகள் 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் ஐந்து பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்கள். இவர்களின் வெளியிடும் போது, நுரையீரல் புற்றுநோய் உள்ள மூச்சை சென்சார் கொண்டு ஆராய்ந்தபோது நுரையீரல் புற்றுநோய் உள்ள வர்களை விட இல்லாதவர்களுக்கு அதிகமான ஐசோப்ரின் வெளியாவது தெரிந்தது.இந்த சென்சாரை மேலும் செம்மைப் படுத்தி, நவீனமயமாக்கி, எளிமையான ஒரு கருவியாக வடிவமைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.அவ்வாறு உருவாக்கப்பட்டு விட்டால் நுரையீரல் புற்றுநோயை, பெரிய பொருட் செலவு இல்லாமல், நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்மிகச் சுலபமாக கண்டறிந்து விடலாம்.
,, முக்கிய அறிவிப்பு. ,, மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும். திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும். லாட்லி அறக்கட்டளை 9871727415, 9873182468 9717231663 இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்கள் உதவலாம். கேலி செய்வதற்கு பதிலாக மக்களுக்கு செய்தியை அனுப்புங்கள். தெரிந்து கொள்ள பள்ளி புத்தகம் விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும் 9460031554 8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 9001236414 9549677770 9314459474 9828926151 9328620003 9826267649 9888989746 9653150004 8889712233 9926311234 8889995733 8889995731 9826813756 9752033255 9826858785 7489587851 9098321420 9879537809 9825700070 9727215130 9879200245 8107371224 7746851284 உங்களால் முடிந்தவரை இந்த செய்தியை அனுப்பவும். உங்கள் உதவி குழந்தையின் வாழ்க்கையை மாற்றும். அவசியம் படித்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்..... ஆனால் நீங்கள் ஒரு msg ஐ அனுப்பினால் அது மிகவும் நல்லது...!!!மணிராமன்.
தகுதி:மாணவர்கள் 2025 இல் +2 முடித்து பட்டப்படிப்பில் சேர்பவராக இருத்தல் வேண்டும்.+2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் 70 % பெற்றிருத்தல் வேண்டும்.பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை.தமிழ் நாடு / ஆந்திரா / தெலுங்கானா / கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க: https://www.grtendowment.comமேலும் விவரங்களுக்கு: Mobile : 91501 10384.: மின்னஞ்சல்: grtjewellersendowment@gmail.comதொடர்பு கொள்ள வேண்டிய நேரம் - 10:30 AM மற்றும் 3:30 PM.தகுதிவாய்ந்த மாணவர்கள் GRT இலவச மாணவர் விடுதிக்கும் விண்ணப்பிக்கலாம்.
முயல் குட்டிகள் பிறக்கும்போது அவற்றின்உடலில் ரோமங்கள் இருப்பதில்லை. அவற்றுக்கு காதும் கேட்காது, அவைகளால் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவைகளின் காதுகளும், கண்களும் மூடிய நிலையிலேயே இருக்கும். அவை பிறந்து மூன்று வாரங்கள் வரை ,தாய் முயலின் நெருக்கமான அரவணைப்பிலேயே வாழும். அதுவும் மறைவான பகுதியில் குட்டிகளை பாதுகாப்பாக வளர்க்கும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ட்யுலேன் பல் கலை மேற்கொண்ட ஆய்வில், மாலை வேளைகளை விட காலை வேளைகளில் காபி குடிப்பது, உட லுக்கு பல வகைகளில் நன்மை தரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபொரா /பேன் (Sulforaphane) எனும் சேர்மம் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை உடைய துரித உணவுகளை உண்பது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் . சமீபத்திய ஓர் ஆய்வில் துரித உணவுகள் வயதாவதை விரைவுப்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.
குடை என்ற சொல் பிரெஞ்சு வார்த்தையான 'பாராபுலி' என்ற சொல்லில் இருந்து வந்தது. பிரெஞ்சுமொழியில் 'பாரா' என்பது பாதுகாப்பு என்பதைக் குறிக்கிறது. 'அம்ப்ரலா என்ற ஆங்கில வார்த்தை நிழல் என்று பொருள் படும். இது லத்தீன் வார்த்தையான 'அம்ப்ரா' என்பதிலிருந்து உருவானது. குடை என்பது கி.மு.3500-ம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில் இருந்து மனித இனம் பயன்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாப்பாக வெளியில் சென்று வர உதவுபவை குடைகள், இந்த குடைகள் ஜப்பானில் தான் முதன்முதலில் பயன்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே சீனர்கள் குடையை பயன்படுத்தியதாக கதைகள் உள்ளன. குடை ஆரம்ப காலத்தில் மூங்கில் குச்சிகளை கொண்டு செய்யப்பட்டன. அவற்றின் மீது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் பொருத்தப்பட்டது. இந்த குடைகளை பண்டைய மனிதர்கள் வெயில் மற்றும் மழையில் இருந்து தங்களைப் பாதுகாக்க பயன்படுத்தினார் .திமிங்கலங்களின் வலுவான எலும்புகளை பயன்படுத்தி ஐரோப்பியர்கள் தங்கள் குடைகளை உருவாக்கி னர்.19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இன்று இருக்கும் நீட்டி மடக்கும், சிறிய பையில் அடைக்கும் குடைகள் விற்பனைக்கு வந்தன.குடைகளுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது மற்ற கண்டுபிடிப்புகள் போல குடைகளும் நவீனம் ஆகி வருகின்றன. இன்று மணிக்கு 120 கி.மீ. வரை காற்றின் வேகத்தைத் தாங்கக்கூடிய குடைகள், சூரிய கதிர்வீச்சு, பாது காப்பு தொழில்நுட்பம் கொண்ட குடைகள் உருவாகியுள்ளன
வியோமிகா சிங்என்.சி.சி.,யில் சேர்ந்த வியோமிகா சிங், பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். விமானப் படையில் பணியமர்த்தப்பட்ட வியோமிகா சிங், 2019 டிச., 18ல் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட்டார். . 'வியோமிகா' ('வானத்தின் மகள்') என பொருள்.சேடக், சீட்டா போன்ற விமானங்களை ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற மிகவும் சிரமமான நிலப்பரப்பு கொண்ட இடங்களில் இயக்கியுள்ளார். சோபியா குரேஷிநம் ராணுவத்தின், 'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்' என்ற பிரிவில் அதிகாரியாக உள்ள சோபியா குரேஷி, குஜராத்தைச் சேர்ந்தவர். உயிரி வேதி யியலில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1999ல் ராணுவத்தில் சேர்ந்தார். கணவரும் ராணுவ அதிகாரி.. 2016ல் 18 நாடுகள் பங்கேற்ற'எக்சசைஸ் போர்ஸ் 18' அணிவகுப்பு ஒத்திகையில் நம் ராணுவத்தை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி சோபியா குரேஷி ஆவார்.எல்லைக்கோட்டை தாண்டாமலே ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தி அதை இரு ஜூனியர் பெண்' ராணுவ அதிகாரிகள் மூலம் விளக்கம் அளித்து உலக நாடுகளை அசர வைத்துள்ளது. பயங்கரவாதிகளை வளர்த்து விட்டு நமக்கு தொல்லை தந்து வந்த பாகிஸ்தானை நேற்று 'ஓங்கி அடித்து தண்டனை வழங்கியது இந்தியா. ஏப். 22ல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன்பே சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ளாத காஷ்மீர் முஸ்லிம்கள் கூட இந்த சம்பவத்தால் பொங்கி எழுந்தனர். பாகிஸ்தான் பயங்கர வாதிகளுக்கும் அவர்களை வளர்த்து விடும் பாகிஸ்தான் அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நாடெங்கும் குரல் எழுந்தது.நதி நீர் ஒப்பந்தம் ரத்து, விசா ரத்து, இறக்குமதி நிறுத்தம், துாதரக உறவு துண்டிப்பு என, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை தேவை என்ற குரல் தணிய வில்லை. இதை தொடர்ந்து புதன் அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை 25 நிமிடங்களில் யாரும் எதிர்பாராத தாக்குதலை இந்தியா நடத்தியது. புதன்கிழமையன்று நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதை அறிந்து பாகிஸ்தான் அரசும் மெத்தனமாக இருந்தது. அதை பயன்படுத்தி, புதன்கிழமை விடிவதற்குள் தாக்குதலை அரங்கேற்றியது இந்தியா. பாகிஸ்தான் சுதாகரிப்பதற்குள், 25 நிமிடத்தில் இந்த துல்லிய தாக்குதல் நடந்து முடிந்தது. பொறுமை யாக, துல்லியமாக திட் டமிட்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை, 24 ஏவு கணைகள் செலுத்தி தகர்த்தது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலை நகரமான முசாபராபாத், கோட்லி, பஹவால்புர், ராவலகோடி, சக்ஸ்வாரி, பிம்பர், நீலம் பள்ளத் தாக்கு, ஜீலம், சக்வால் ஆகிய இடங்களில் செயல் பட்டுவந்த பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், தலைமை நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. ஐந்து இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் உள்ளன. தாக்குதலில் 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது. அவர்களில் 3 பேர் மட்டுமே பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்கள். ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடிகளான அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட இவ்வளவு குறைந்த சிவிலியன் பலிகளுடன் தாக்குதல் நடத்தியது இல்லை என்பதால்,இந்தியாவின் நடவடிக்கை உலகம் முழுவதும் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.