25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 04, 2025

ட்ரோன்கள் தடுமாறாமல் தரையிறங்க...

அதிவேகத்தில் இயங்கும் ட்ரோன்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை தரை யிறங்கும்போது ஏற்படும் தடுமாற்றம் தான். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பொஹாங் பல்கலை ஆய்வாளர்கள் பறக்கும் அணில்களைப் போல் இறக்கையுடன் கூடிய ட்ரோனை உருவாக்கி உள்ளனர். இவை தடுமாறாமல் தரையிறங்குகின்றன.

Aug 02, 2025

வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கிய ஐசக் சிங்கர் தையல்மெஷின்க்குகனவில் தீர்வு கிடைத்தது.

வணிகரீதியிலான தையல் இயந்திரத்தை 1850-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஐசக் சிங்கர். அவர் தையல் இயந்திரத்தை உருவாக்கிய போது ஒரு கட்டத்தில் ஒரு பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியாமல் தவித்தார்.நூல் அறுந்து போகாமலும், சிக்கிக் கொள்ளாமலும், தொடர்ச்சியாக ஊசியால் தைக்கச் செய்வது,? எப்படி என்பது குறித்து குழம்பிப் போய் இருந்தார். எப்போதும் அந்த நினைவாகவே இருந்தார்.ஒரு நாள் இரவில் தூங்கும் போது காட்டில் வேட்டையாடும் மக்கள் ,தன்னை துரத்துவது போல கனவுகண்டார். அந்த மக்கள் அவரை நெருங்கிய போது அவர்கள் வைத்திருந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருப்பதை கண்டார். திடுக்கிட்டு கண்விழித்தார்.  முன்பு ஊசியின் பின்பகுதியில் நூலை கோர்ப்பதற்கான முறையைக் கண்டறிந்திருந்தார். இந்தக் கனவுக்குப் பின் ஊசியின் நுனிப்பகுதியில் துளையிட்டு அதன்வழியாக நூலைக் கோர்த்து தைத்துப் பார்த்தார்.அது வெற்றிகரமாக அமைய சிங்கரின் முயற்சி வெற்றி அடைந்தது. அவரது தையல் இயந்திரங்கள் உலகில் அதிகமாக விற்பனையாகும் தையல் இயந்திரங்கள் என்ற பெருமையை பெற்றன. 

Aug 02, 2025

'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்” இந்தியாவின் முதல் சர்க்கஸ் கம்பெனி

சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. நகரங்களில் 100 நாட்களை கடந்தும் சர்க் கஸ் நிகழ்ச்சிகள் நடந்து, மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளன. குறிப்பாக குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். இந்தியாவின் முதல் சர்க்கஸ் கம்பெனியாக 'தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு பந்த் சத்ரே என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை நடத்தியது. நெருப்பை ஊடுருவி தாண்டுவது, அந்தரத்தில் மனிதர்கள் ஊசலாடுவது, விலங்குகளின் சாகசங்கள், பெண்களின் சாகச நிகழ்ச்சிகள் என பல இடம்பெற்று இருந்தன. இதனை தொடர்ந்து பேரி சர்க்கஸ், கிழக்கு சர்க்கஸ், ஓரியண்டல் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், கிரேட் பாம்பே சர்க்கஸ் உள் ளிட்ட சர்க்கஸ் கம்பெனிகள் உருப்பெற்றன.ஒவ்வொரு சர்க்கஸ் நிகழ்ச்சியிலும் நிறைய கலைஞர்கள் இருப்பார்கள். சர்க்கஸ் கூடாரத்தை காலிசெய்துவிட்டு மற் றொரு இடத்துக்கு செல்வது என்றால், ஓர் ஊரே காலி செய்துவிட்டு செல்வது போன்று இருக்கும். ஆனால்,இப்படி நிறைய பேருக்கு வாழ்வளித்து வந்த சர்க்கஸ் கலை,கால் மாற்றத்தால் சரிவை சந்தித்து வருவது வருந்தந்தக்கது. 

Aug 02, 2025

500 'ஸ்டார்ட்அப்'கள் ஓராண்டில் துவக்குவதை ஊக்குவிக்க  தமிழக அரசு திட்டம் .

சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் மட்டுமின்றி; அனைத்து நகரங்கள்,கிராமங்களிலும் தொழில் ஐடியா வைத்து உள்ளவர்களை கண்டறிந்து, ஸ்டார்ட்அப் நிறுவனம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மாநிலம் முழுதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்க, 'வெஞ்சர் பில்டர்' எனப்படும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது. இதற்கு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது20 புதியதொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் அமைப்புகள், இத்திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.அவை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நகரங்களில், தொழில் ஐடியா வைத்துள்ள நபர்களை சந்தித்து, தொழில் துவக்குவது முதல் அதன் வாயிலாக பொருட்களை உற்பத்தி செய்வது வரை உதவிகளை செய்ய வேண்டும்.ஒரு வெஞ்சர் பில்டர் களை ஊக்குவிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்படும்.ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனம், ஒப்பந்தம் செய்ததில் இருந்து, 12 மாதங்களுக்குள், 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவக்க உதவி செய்ய வேண்டும். இம்முயற்சியின் வாயிலாக ஆண்டுக்கு, 500 ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக ஒரு வெஞ்சர் பில்டர் நிறுவனத்துக்கு 2.50 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

Aug 02, 2025

இன்றைய கால குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது முக்கியமானது..

ஓவ்வொரு வார்த்தைக்கு பின்னும் ஓர் உணர்வு இருக்கிறது. நாம் மற்றவர்களிடம் பேசுகிற வார்த்தைகள் அவர்களை ஆற்றல் படுத்துவதாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. உயிர் இல்லாவிட்டாலும் உணர்வு மிக்கவையாக இருக்கின்றன. எனவே பிறரிடம் பேசுகிற போது அவர்களை காயப்படுத்தாத வண்ணம் பேச வேண்டும். ஒருவர் தவறு செய்து விட்டாலும் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வழி காட்ட  வேண்டும். இந்த வகையில் குழந்தைகளிடம் பேசுகிற போது மிக கவனமாக பேச வேண்டும். அவர்கள் மனது கண்ணாடி போன்றது. ஒரு முறை உடைந்து விட்டால் சேர்ப்பது கடினம். எனவே குழந்தைகளை வளப்படுத்துகிற வாக்கியங்கள்.இன்றைய கால குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது முக்கியமானது. பல குழந்தைகள் சிறிய தோல்விகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் கடினப்படுகிறார்கள்.அந்த நிலையில் குழந்தைகள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை கொள்ள வைத்திட வேண்டும்.அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளிடம் 'உன்னையே நீ நம்பு' என்ற வாக்கியத்தை சொல்ல வேண்டும். 'உன்னால் முடியும்' என்ற வாக்கியத்தை குழந்தைகளிடம் பெற்றோரும் உறவினர்களும் சொல்ல வேண்டும். குழந்தைகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் இந்த வார்த்தைகளை சொல்லி உற்சாகப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். நம் பெற்றோர் நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்வார்கள். 

Aug 01, 2025

நெஸ்லேக்கு புதிய தலைவர்.

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக மனீஷ் திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வரும் சுரேஷ் நாராயணன், பணி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்  மனீஷ் திவாரி . , வரும் 2030 ஜூலை மாதம் வரை நெஸ்லே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் மனீஷ் திவாரி,வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jul 30, 2025

எதை செய்ய வேண்டாம்.

நிறைய பணம் பர்சில் இருந்தால் அடிக்கடி அதைத் திறந்து பார்க்க வேண்டாம். எப்போதும் ஜன நடமாட்டம் இல்லாத குறுக்கு வழியில் போக - வேண்டாம். டாக்டரிடம் உடல் கோளாறுகள் சம்பந்தமான விவரம் எதையும் மறைக்க வேண்டாம். அந்த மருந்தை சாப்பிடலாமா, இந்த மருந்தை சாப்பிடலாமா என்று டாக்டரிடம் நீங்கள் யோசனை கேட்க வேண்டாம். பிறர் பேசும் போது அவரை உற்சாகப் படுத்துங்கள் தற்பெருமை பேச வேண்டாம். ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது இன்னொருவரிடம் கூற வேண்டாம் குழந்தைகளை பந்தியின் நடுவே உட்கார வைக்க வேண்டாம். பந்தியில் சாப்பிடும் போது இன்னொரு வீட்டில் சாப்பிட்ட விருந்தைப் பற்றி சாப்பிடும் போது பேச வேண்டாம்.

Jul 30, 2025

தன்னைத்தானே சாப்பிடும் மூளை .

அறிவியல் ஆராய்ச்சியில் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்தால் மூளை செல்கள் தாமாகவே சாப்பிடத் தொடங்குவதற்கு காரணமாகிறது என்று கண்டறிந்துள்ளனர். மூளை தன்னைத்தானே சாப்பிடுவது என்பது மூளையின் செல்கள் தேய்ந்து போனவற்றை அகற்றி, சேதமடைந்த பொருட்களை ஜீரணிக்கும் ஒரு செயல்முறையாகும். இதை மைகரோகலியா எனப்படும் செல்கள் செய்கின்றன. மூளையில் உள்ள மைக்ரோக்லியா செல்கள் ஃபாகோசைட்டோசிஸ் என்ற செயல்முறையின் மூலம் நியூரான்கள் அல்லது அவற்றின் இணைப்புகளை சாப்பிடுகின்றன அல்லது நீக்குகின்றன. எனவே தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருந்தால் மனநிலை பாதிப்பு, மறதி நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். நல்ல தூக்கம் ஆரோக்கியமானது.

Jul 29, 2025

தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்.

உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக தந்தையர் தினம்- ஜூன்-18அன்னையர் தினம்- பிப்ரவரி-22உலக பெண்கள் தினம்- மார்ச்-8உலக குடும்ப தினம்- மே-5உலக ஏழைகள் தினம் ஜூன்-28உலக தாய்ப்பால் தினம்- ஆகஸ்ட்-01உலக நண்பர்கள் தினம்-ஆகஸ்ட்-03உலக உணவு தினம்-அக்டோபர்-16உலக வறுமை ஒழிப்பு தினம்- அக்டோபர்-17உலக மனித உரிமைகள் தினம்-டிசம்பர்-10உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக ஆண்கள் தினம்-நவம்பர்-19உலக மருத்துவர் தினம்- ஜூலை-1உலக எழுத்தறிவு தினம்- செப்டம்பர்-8உலக தபால் தினம்-அக்டோபர்-9உலக மக்கள் தொகை தினம்- ஜூலை-11உலக மூத்தோர் தினம்- அக்டோபர்-1உலக செவிலியர் தினம்- மே-12உலக வன தினம்- மார்ச்-21உலக கால்நடை தினம்-மார்ச்-28உலக கடல் தினம்-ஏப்ரல்-5உலக விலங்குகள் தினம்-அக்டோபர்-4உலக அமைதி தினம் செப்டம்பர்-21

Jul 29, 2025

"மன்னர் ராஜேந்திர சோழன்-I இன் கடற்படைப் பயணத்தின் 1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை  பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை27,2025)"மன்னர் ராஜேந்திர சோழன்,I இன் கடற்படைப் பயணத்தின்1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.குதிரையில் சவாரி செய்யும் பேரரசர் கப்பலை பின்னணியாகக் கொண்டு இருப்பது போன்ற படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகன்ஒரு நாணயத்தை வடிவமைத்து ,நாணயத்தை வெளியிடுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாணயம் வெளியிடப்பட்டது. குதிரையில் சவாரி செய்யும் பேரரசரின் உருவம், கப்பலைபின்னணியாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.பிரதமரால் வெளியிடப்பட்ட₹1,000 நாணயம். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நாணயத்தைப் பெற்றுக்கொண்டனர்.

1 2 ... 109 110 111 112 113 114 115 ... 146 147

AD's



More News