25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 29, 2025

தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்.

உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக தந்தையர் தினம்- ஜூன்-18அன்னையர் தினம்- பிப்ரவரி-22உலக பெண்கள் தினம்- மார்ச்-8உலக குடும்ப தினம்- மே-5உலக ஏழைகள் தினம் ஜூன்-28உலக தாய்ப்பால் தினம்- ஆகஸ்ட்-01உலக நண்பர்கள் தினம்-ஆகஸ்ட்-03உலக உணவு தினம்-அக்டோபர்-16உலக வறுமை ஒழிப்பு தினம்- அக்டோபர்-17உலக மனித உரிமைகள் தினம்-டிசம்பர்-10உலக பூமி தினம்- ஏப்ரல்-22உலக ஆண்கள் தினம்-நவம்பர்-19உலக மருத்துவர் தினம்- ஜூலை-1உலக எழுத்தறிவு தினம்- செப்டம்பர்-8உலக தபால் தினம்-அக்டோபர்-9உலக மக்கள் தொகை தினம்- ஜூலை-11உலக மூத்தோர் தினம்- அக்டோபர்-1உலக செவிலியர் தினம்- மே-12உலக வன தினம்- மார்ச்-21உலக கால்நடை தினம்-மார்ச்-28உலக கடல் தினம்-ஏப்ரல்-5உலக விலங்குகள் தினம்-அக்டோபர்-4உலக அமைதி தினம் செப்டம்பர்-21

Jul 29, 2025

"மன்னர் ராஜேந்திர சோழன்-I இன் கடற்படைப் பயணத்தின் 1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை  பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை27,2025)"மன்னர் ராஜேந்திர சோழன்,I இன் கடற்படைப் பயணத்தின்1,000வது ஆண்டு நிறைவை" குறிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.குதிரையில் சவாரி செய்யும் பேரரசர் கப்பலை பின்னணியாகக் கொண்டு இருப்பது போன்ற படம் நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு கவுன்சில் அறக்கட்டளையின் தலைவர் ஆர். கோமகன்ஒரு நாணயத்தை வடிவமைத்து ,நாணயத்தை வெளியிடுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாணயம் வெளியிடப்பட்டது. குதிரையில் சவாரி செய்யும் பேரரசரின் உருவம், கப்பலைபின்னணியாகக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ளது.பிரதமரால் வெளியிடப்பட்ட₹1,000 நாணயம். தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நாணயத்தைப் பெற்றுக்கொண்டனர்.

Jul 29, 2025

'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. 

 அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா''இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோ'  உடன் இணைந்து, 'நிசார்' என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது பூமியை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து, 12 நாட்களுக்கு ஒரு முறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து ,இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ். எல்.வி., - எப் 16 ராக்கெட், நாளை மாலை 5:40 மணிக்கு ராக்கெட் எரிபொருள், செயற்கைக்கோள் என, மொத்தம், எடையை 420.50 டன்சுமந்தபடிவிண்ணில்ஏவப்படுகிறது.இதற்கான,27 மணிநேரம் 30 நிமிடங்களுக்கான, 'கவுன்ட்டவுன்' இன்று மதியம் 2:25 மணிக்கு துவங்குகிறது.

Jul 28, 2025

இண்டெல் நிறுவனத்தின்  529 ஊழியர்களை வேலை நீக்கம் அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை15ஆம் தேதி529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்டெல் நிறுவனம் செலவை குறைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், முதல் கட்டமாக 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் சிக்கல்களை அகற்றுவது,  செயல்திறனை வலுப்படுத்துவது, லாபத்தை நோக்கி நிறுவனத்தை கொண்டு செல்வது ஆகியவற்றிற்காக செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக இன்டெல் நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.  இந்தவேலைநீக்கநடவடிக்கையால்சிப்தயாரிப்புவல்லுநர்கள், கிளவுட்மென்பொருள்வல்லுநர்கள், பொறியாளர்கள்உட்படசில முக்கியபதவிகள்காலியாகும்என்றும்கூறப்பட்டுவருகிறது. வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு60 நாள் நோட்டீஸ் அல்லது குறைந்த நான்கு வார நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், ஒன்பது வார ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jul 26, 2025

ஆதாரைமிகஎளிதாகமின்னணுமுறையில்சமர்ப்பிக்க UIDAI இன் புதிய செயலி.

இந்தியாவில் எந்த சேவைக்குச் சென்றாலும், அது ரயில் டிக்கெட் முன்பதிவாக இருக்கட்டும், அல்லது வங்கி கணக்குதொடங்குவதாக இருக்கட்டும், முதன்முதலில் கேட்கப்படுவது ஆதார் அட்டை. எப்போதும் நம் ஆதார் அட்டையை கையில் எடுத்து செல்வது சில சமயங்களில் சாத்தியப்படாமல் போகலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளது.வரும் காலங்களில்UIDAI ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி உங்கள் போனில் இருந்தால், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் ஆதாரை மிக எளிதாக மின்னணு முறையில் சமர்ப்பிக்க முடியும். இனி ஆதார் ஜெராக்ஸ் எடுக்க கடைகளை தேடி அலைந்து நேரம் விரயமாக்க தேவையில்லை. இந்த செயலியில், உங்கள் ஆதார் தகவல்கள் கியூ.ஆர். கோடு வடிவில் இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், உங்கள் ஆதார் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். மேலும், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும்போது, முழுமையான விவரங்கள் தெரியும்படி வேண்டுமா, அல்லது சில தகவல்கள் மறைக்கப்பட்ட வடிவில் வேண்டுமா என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. இது உங்கள் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு உதவும்.இந்த புதிய வசதி மூலம், ஆதார் தொடர்பான சேவைகளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், வீணாக அலைந்து திரிவதும் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jul 26, 2025

'பைட்சாட்' (BITCHAT) புதிய செயலி  அறிமுகம் இண்டர்நெட் இல்லாமல் CHAT செய்ய முடியும்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உட்படப் பல சாட்டிங் மற்றும் சமூக வலைதளங்கள் இருந்தாலும், அவை செயல்படுவதற்கு இன்டர்நெட் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இன்டர்நெட் இல்லாமல் தகவல்களை பகிர முடியும் என்ற வகையில் ஒரு செயலியை, ட்விட்டர் வலைதளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். இதனால், இனிமேல் இன்டர்நெட் இல்லாமலேயே சாட் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இன்டர்நெட் சேவை இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில்'பைட்சாட்'(BITCHAT) என்ற புதிய செயலியை ஜாக் டோர்சி அறிமுகம் செய்துள்ளார். ப்ளூடூத் தொழில்நுட்பத்தை சங்கிலி தொடர் போல பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இயங்குவதற்கு இன்டர்நெட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இன்டர்நெட் கிடைக்காத நேரங்களில் அல்லது இன்டர்நெட் செயல்படாத நேரங்களில் பயன்படுத்த ஏற்ற வகையில் இருப்பதால், இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 'பைட்சாட்' என்ற புதிய செயலி தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Jul 26, 2025

சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI!

தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே AIதொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராகியுள்ளது ஓபன் AI நிறுவனம்.சாட் ஜிபிடி (Chat GPT) மூலம் உலகில்AI தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுOpenAI. சாட் ஜிபிடி வருகையை தொடர்ந்து கூகிளும்GEMINI,AI உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய நிலையில் சீனாவின்DeepSeek,GWEN,AI என பல  AI கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் ஆட்டோமேஷன் நடவடிக்கைகளும் பல துறைகளில் வேகமாக அதிகரித்து வருகிறது.சாட்ஜிபிடியால் ஏற்கனவே கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கூகிள் தேடுபொறியை விட பலரும் சாட் ஜிபிடியில் வெறும் வாய்ஸ் கமெண்டில் கேட்டாலே அது தகவல்களை அள்ளி வழங்குவதால் அதற்கு மவுசு கூடியுள்ளது. மேலும் AI திரட்டி தரும் தகவல்களில் ஏற்படும் தகவல் பிழையை ப்ரவுசர்கள் சுட்டிக்காட்டும் நிலையில் Deep Search மூலமாக தளங்களின் தரவுகளையும் AI க்கள் வழங்கத் தொடங்கிவிட்டன.இந்நிலையில்தான் அடுத்த கட்டமாகAI தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வெப் ப்ரவுசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது ஓபன் AI நிறுவனம். அதற்கான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய AI ப்ரவுசர் பயன்பாட்டிற்கு வரும் என பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் கூகிள் ப்ரவுசர் பெரும் பின்னடைவை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது.இதனால் கூகிள் சூதானமாக செயல்பட்டு தனது ப்ரவுசருடனே ஜெமினியை Integrate செய்துள்ளது. ப்ரவுசரிலேயே DiveDeeperinAI,Mode மூலமாக ஜெமினிக்கு மாறி ப்ரவுசர் போல அல்லாமல் AI எக்ஸ்பீரியன்ஸில் தகவல்களை பெற முடியும். ஆனால் அதையும் ஓபன் AI சிந்தித்தே பல புதிய அம்சங்களை தனது ப்ரவுசரில் அமைத்திருக்கும் என்கிறார்கள் AI தொழில்நுட்ப ஆர்வலர்கள்.

Jul 25, 2025

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மதுரையைச் சேர்ந்த விஜய் குமார்.

மதுரையைச் சேர்ந்த விஜய் குமார், நியூயார்க்கில் "ஜேம்ஸ் பியர்ட் விருதை - உணவு உலகின் ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்திய உணவக சமையல்காரர் ஆவார். அவர் நியூயார்க்கின் செம்மாலில் தலைமை சமையல்காரர்.

Jul 25, 2025

குரங்கு பொம்மைகளின் பெயர்கள்.

தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்கிற கருத்துக்களை வலியுறுத்துகிற 3 குரங்கு பொம்மைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த பொம்மைகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கக் கூடிய பெயர்களை அறிந்து கொள்வோம்!தீயதை பார்க்காதே என்று கண்களை மூடியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிசாரு. தீயதை கேட்காதே என்று காதுகளை மூடிக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிகாசாரு. தீயதை பேசாதே என்று வாயை பொத்தியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மசாரு. 

Jul 24, 2025

நல்லெண்ணெய், வெண்ணெய் எது நல்லது ?

நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே பிரதானமாக இருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைஉள்ளிட்ட சர்வதேச பல் கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை  மேற்கொண்டன.2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோ திக்கப்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தியது வெண்ணெயா , எண்ணெயா என்பதும் கேட்டு அறியப்பட்டது.தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் ணந்து குறைவாக இருப்பது தெரிய வந்தது.அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன் படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு  12 சதவீதம் அதிகமாக  இருப்பது தெரிய வந்தது.எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதி லாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவிதநோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்றகொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட் ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

1 2 ... 110 111 112 113 114 115 116 ... 146 147

AD's



More News