வேர்க்கடலை கட்லட்.
தேவையான பொருட்கள் -
1/2 கப் வறுத்த வேர்க்கடலை,3வேக வைத்த உருளைக்கிழங்கு,
1பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகாய்,சிறிதளவு கொத்தமல்லி,
1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்,
சிறிதுகருவேப்பிலை,1/4 கப் பொரி கடலை மாவு,
1/4 கப்கடலை மாவு,2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு,
1டீஸ்பூன் வெல்லத்தூள்,தேவையான அளவு உப்பு,
தேவையான அளவு எண்ணை பொரிக்க.
செய்முறை -
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி ஒன்றிரண்டாக பொடி
செய்து கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி கருவேப்பிலை
சேர்த்து வதக்கவும்.
பிறகு வேர்க்கடலை பொடி கரம் மசாலா தூள் உப்பு மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வேண்டிய வடிவில் செய்து கொள்ளவும்.
கடலைமாவு பொரி கடலை மாவு அரிசி மாவு சிறிது வெல்லம் சேர்த்துபஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்
கொள்ளவும்.
காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் கட்லட்டை கடலை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில்
சேர்த்துஇருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
சுடச்சுட சாப்பிட சுவையான வேர்க்கடலை கட்லெட் தயார். இதை தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து செய்த இந்த கட்லட் மிகவும்
அருமையாக இருக்கும்.
0
Leave a Reply