கடல் ஓநாய்கள்.
கனடாவில் தென்கிழக்கு அலாஸ்காவில் காணப்படும் கடல் ஓநாய்கள் இனம் தனித்துவமான ஒன்றாகும்.
நிலப்பரப்பில் காடுகளில் காணப்படும் காட்டு ஓநாய் களும், கடலோரத்தில் காணப்படும் கடல் ஓநாய்களும் ஒரே மாதிரியாக காட்சியளித்தால்கூட கடல் ஓநாய்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவை.
பொதுவாக, காட்டு ஓநாய்கள் சிறு விலங்குகளை வேட் டையாடி உணவாக உட்கொள்ளும். ஆனால், கடல் ஓநாய் கள் நீண்ட தொலைவுக்கு தண்ணீரில் நீந்தும் திறன்கொண் டவை. இவை கடலில் தீவுகளுக்கு இடையில் நீந்தி மீன்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடுகின்றன.
இரையை தந்திரமாக வேட்டையாடுவதில் திறன் வாய்ந் தவை. உயிரினங்களுக்கு எந்த சந்தேகமும் வராத அள வுக்கு திருட்டுத்தனமாக நகரும். அவற்றின் முதுகு மற்றும் உடல் மட்டுமே நீரில் மூழ்கி இருக்கும்..அவற்றின் காதுகள், கண்கள் மற்றும் மூக்கு நீரின் மேற்பரப்பில் சிறிதளவு வெளியே தெரியும். இரையை நெருங்கியவுடன் ஒரே பாய்ச்சலில் பிடித்துவிடும்.
கடலில் சில நேரங்களில் மீன்கள் கிடைக்காதபோது இவை கடல் பகுதியை ஒட்டிய நிலப்பரப்புக்கு வந்து கருப்பு வால் மான் மற்றும் கடமான் இனங்களை வேட்டையாடி உண்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ள னர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கடல் ஓநாய் கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இடம் பெற் றுள்ளன.
0
Leave a Reply