நிலக்கடலை கத்லி.
தேவையான பொருட்கள் -
ஒரு கப் நிலக்கடலை
ஒரு கப் சர்க்கரை
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
செய்முறை-
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு தட்டில் நெய் சேர்த்து தடவி
எடுத்துக் கொள்ளவும்.
முதலில் நிலக்கடலையை மிதமான தீயில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின் நிலக்கடலை ஆறிய பிறகு
தோலை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தோல் நீக்கிய பிறகு நிலக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பண்ணி எடுத்து வைத்துக்
கொள்ளவும்.
ஒரு கடாயில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை மிதமான
தீயில் கொதிக்க வைக்கவும்.
கம்பி பதம் வந்த பிறகு பவுடர் பண்ணி எடுத்து வைத்த நிலக்கடலையை சேர்த்து பிறகு அதில் நெய்
ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
சேர்த்த பிறகு மிதமான தீயில் கட்டிகளில்லாமல் கைவிடாமல் நன்கு கிளறவும் ஐந்து நிமிடங்கள் மிதமான
தீயில் கிளறிய பிறகு பேனில் ஒட்டாமல் நன்றாக சுருண்டு வரும் வந்த பிறகு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.
பிறகு அதை ஒரே சீராக பரப்பி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும் சுவையான
நிலக்கடலை கத்லி தயார்.
0
Leave a Reply