நிலக்கடலை வடை.
தேவையான பொருட்கள் -
நிலக்கடலை - கால் கிலோ,
வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் -10, இஞ்சி-சிறிய துண்டு,
கறிவேப்பிலை - 1 இணுக்கு (பொடியாக நறுக்கியது ),
பெருங்காயம் – சிறிதளவு, சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
.மிளகு - அரை டேபிள் ஸ்பூன், கடலை எண்ணெய் - கால் லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை-
நிலக்கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.
மறுநாள் ஊறிய நிலக்கடலையுடன் உப்பு. 6 பச்சை மிளகாய். இஞ்சி. சீரகம். மிளகு பெருங்காயம் சேர்த்து
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், மீதமுள்ள 4 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
இவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, வடை வடிவில் தட்டவும்.
வாணலியில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, வடைகளை மிதமான தீயில் பொன்னிறமாகவும்
மொறுமொறுப்பாகவும் பொரித்து எடுக்கவும்.
சுவையான, மொறுமொறுப்பான நிலக்கடலை வடை சூடாகப் பரிமாறினால் அனைவரும் விரும்பிச்
சாப்பிடுவார்கள்.
0
Leave a Reply