25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


புற்று நோயை தடுக்க மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்று நோயை தடுக்க மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.

 உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய்.அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமா னது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வுநடத்தப்பட்டது.ஒவ்வொருவருடையஉணவுப்பழக்கம்பற்றியும்கேட்டறியப்பட்டுஆவணப்படுத்தப்பட்டது.அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட் டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது ? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.

இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக் குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தின மும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும்.பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.அதேபோல இந்த ஆய் வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது. 

தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய்வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதி கரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News