25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


மின்சார சாப்ஸ்டிக்கை கொண்டு சாப்பிட்டால், உப்பு சப்பில்லாத சாப்பாடு. (நவீன கரண்டி)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்சார சாப்ஸ்டிக்கை கொண்டு சாப்பிட்டால், உப்பு சப்பில்லாத சாப்பாடு. (நவீன கரண்டி)

 அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும்என்று  உங்கள் மருத்துவர் அறிவு றுத்தி உள்ளாரா :உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று  வருத்தப்படுகிறீர்களா?  கவலை வேண்டாம். உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டி

மின்சாரத்தில் இயங்கும் இந்தக்கரண்டி  (Electric spoon) 2022 ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட் டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன் முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.

அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும் போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.

சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து,  பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்கி உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்ன வென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News