25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 06, 2025

தமிழ்நாடு நில அளவுகள்

1கிரவுண்ட் - 2400 சதுர அடி1சென்ட் - 435 சதுர அடி1ஹெக்டர் - 2 ஏக்கர் 47 சென்ட்1காணி - 132 ஏக்கர்1கீ.மீட்டர் - (1000 மீட்டர்1 மீட்டர் - 3281 அடி1 குழி - 44சென்ட்1 மா - 100 குழி1அடி - 12 இஞ்ச்1மைல் - 1.61 கீ. மீ 1ஏக்கர் - 100சென்ட்

Jun 05, 2025

கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு.

பச்சை நிறத்தில் பளபளப்பான தோலுடன் காணப்படும். இதனால் பச்சை மாப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு. கோலுகிர் நிறைந்தது.இது1.5 மீட்டர் வரை நீளமாக இருக்கும். மரங்களில் வாழும். உடல் மெலிந்து, செதில்கள் மென்மையாக இருப்பதால் மரங்களில் எளிதாக ஏற முடியும். பல்லி தவளை, சிறு பறவைகள், பூச்சிகளை உணவாக்கும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா கண்ட பகுதியில் இந்தியா இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இவை காணப்படுகிறது.விஷமற்ற இந்த பாம்பு இனம் மரங்களுக்கு இடையே பறக்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. உண்மையில் இது பறப்பதில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மாறாக, உடலை தட்டையாக்கி, காற்றில்100 மீட்டர் தூரம் வரை சறுக்கி செல்லும் திறன் உடையது. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.இந்த இனத்தில் கிரைசோபீலியா ஓர்னேட்டா என்ற வகையும் உள்ளது. இது, அலங்கார பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது. மஞ்சள் கோடுகளுடன் அழகிய தோற்றம் கொண்டது. இந்த பாம்பு இனம், மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பதுங்கி வாழும் தன்மை கொண்டது. இயற்கையின் அற்புத படைப்புகளில் இவையும் ஒன்றாக கருதப்படுகிறது.

Jun 05, 2025

92 வயதிலும் உழைத்து வரும் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி

அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தனது 92 வயதிலும் சொந்தமாக ,71 மருத்துவமனை 5000 மெடிக்கல்களும் வைத்து ,தினமும் காலை 16 மணி முதல் ஐந்து மணி வரை வேலையில் பணிபுரிகிறார்.

Jun 05, 2025

வல் கானிட்ரிஸ் க்ராடென்சிஸ் (Vulcanidris cratensis) எறும்பின் தொல்லெச்சம்

உலகின் மிகப் பழமையான வல் கானிட்ரிஸ் க்ராடென்சிஸ் (Vulcanidris cratensis)எனும் எறும்பு இனத்தைச் சேர்ந்த ஓர் எறும்பின் தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது 11.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

Jun 04, 2025

ரம்பூட்டான்

தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாக உடையது. ரம்பூட்டான் தாவரம். இந்தோனேஷிய மொழியில் ரம்பூட்டானுக்கு முடி அடர்ந்த எனப் பொருள். இப்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை உடையது. மேற்புறம் முள் காணப்படும். உடல் பருமனால் அவதிப்படுவோர் உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். உடலில் கெட்ட கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். இதனால் மாரடைப்பு அபாயம் குறைகிறது.ஆஸ்துமா, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். உடல் உறுப்புகள் சீராக இயங்க செய்யும்எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவும் கால்ஷியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளன. பழத்தில் உள்ள நீர்ச்சத்து, நா வறட்சியைத் தடுக்கும். உடல் உழைப்புக்கு ஆற்றலை தரும். உடல் சீரான வளர்ச்சிக்கு இப்பழம் முக்கிய பங்காற்றுகிறது.

Jun 04, 2025

சூரியனைப் போல 5,500 மடங்கு பெரிய ஹைட்ரஜன் மூலக்கூறுகளால்ஆன மேகக் கூட்டம்.

நமது சூரியக் குடும்பத்திலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில் பிரமாண்டமான மேகக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நமது சூரியனைப் போல 5,500 மடங்கு பெரியது. ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் ஆனது.

Jun 03, 2025

உலகின் மிகப் பெரிய காற்றாலை.

உலகின் மிகப் பெரிய காற்றாலையை நிறுவி சீன நாடு சாதனை செய்துள்ளது.டோங்பாங்  (Dongfang) எனும் நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு சீனா. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் உள்ளன. அதிகரித்து வரும் தன்னுடைய மின் தேவைகளை, சுற்றுச் சூழலைப் பெரிய அளவு பாதிக்காத வகையில் ஈடு செய்வதற்குச் சீனாமுயன்று வருகிறது. புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பூசௌ என்னும் இடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இதன்மொத்த உயரம் 1,115 அடி. அதாவது, இது பாரிஸ் ஈபில் கோபுரத்தை விட உயரமானது. இது எளிதில் துருப்பிடிக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது. சூறாவளிகள் வந்தாலும் கூட இது தாக்குப் பிடிக்கும். அந்தளவுக்கு வலுவானது என்று இதன்  வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.இந்தக் காற்றாலை மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றில் இருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இது 55,000 வீடுகளுக்குப் போதுமானது. இந்த ஒரு காற்றாலை 30,000 டன் நிலக்கரி பயன்பாட்டையும், 80,000 டன்கரியமில வாயு உமிழ்வையும் குறைக்கும்.

Jun 02, 2025

வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை

வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை நம் நாட்டில் தான் உள்ளது. இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.இதற்கு முன், இந்த பெருமையை தென் அமெரிக்க நாடான பொலிவியா தக்க வைத்திருந்தது. பொலிவியாவில், உட்டுருங்கு எரிமலையை இணைக்க, 18 ஆயிரத்து, 953 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இது உலக அளவில் தனித்துவ அடையாளத்தோடு விளங்கியது.தற்போது, காஷ்மீர், லடாக்கில் ,19 ஆயிரத்து, 24 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனப் போக்குவரத்தும் நடக்கிறது. தற்போது, காஷ்மீர், லடாக் சாலை தனித்தன்மை பெற்றதாக இருக்கிறது.உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Jun 02, 2025

'கூலிங் கிளாஸ்'

சூரிய ஒளியால் கண்கள் உலர்ந்து போகாமலும், சூரிய ஒளியில் எளிதாக பார்க்க உத வும் 'கூலிங் கிளாஸ்' என்ற கண்ணாடிகள் எப்போது கண்டறியப்பட்டது என்ற துல் லியமான தகவல் இல்லை.18-ம் நூற்றாண்டின் வெனிஸ் நகரில் சிலர் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்து கொண்டதாக ஆதாரங்கள் உள்ளன.இதற்கெல்லாம் முன்பே,ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் சூரியனின் உக்கிரமான வெளிச்சத்தில் இருந்து கண் களை தற்காத்துக்கொள்ள கண்களை சுற்றி மூலிகை சாறுகள், சாயங்களை பூசிக் கொண்டனர். அரசர்கள், தங்க ளின் கண்களின் முன் மெல் லிய கண்ணாடி ரத்தினங் களை அணிந்து கொண்ட தாக சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.ஆர்க்டிக் துருவ பகுதி களில் வாழ்ந்த மக்கள் எலும் புத்துண்டுகள், மரத்துண்டு களை வெட்டி தங்கள் கண்க ளின்மீது அணிந்து கொண்ட னர்.இப்படி பல பரிணாம வளர்ச் சிகளை கண்ட கண்ணாடி 19-ம் நூற்றாண்டில் விதவித மான நிறங்களை கொண்டு மக்களிடம் பரவலாக புழக்கத் தில் வந்தது.எட்வின் 1930- களில் லேண்ட் என்ற ராக் இசைக்க லைஞர் போலராய்டு என்ற வகை கூலிங் கிளாஸ்களை அறிமுகம் செய்தபின் மிகப்பெ ரிய அளவில் விற்பனையை எட்டியது.வழக்கமான 'கூலிங்கிளாஸ்'லென்ஸ்கள்மீதுஒருசிறப்புவடிகட்டியைவைப்பதுகண்ணைகூசுவதைகுறைத்து,பார்வைதிறனைஅதிகரிப்பதாக லேண்ட் கண் டறிந்தார். இதுவேபோலராய்டு கண் கண்ணாடிகள் என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமானது.இன்றைக்கு, சன் கிளாஸ் அல்லது கூலிங்கிளாஸ் என்ற கண்ணாடி தயாரிப்பு தொழில் நுட்பம் பல்வேறு நவீன அம்சங் களை கொண்டுள்ளன. குறிப் பாக, இன்றைய 'சன் கிளாஸ் கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா வய லட் கதிர்வீச்சுக்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதனால், கண் புரை, கண் விழிப்படல சிதைவு, கண் சார்ந்த தசைகளில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.தகிக்கும் வெயிலை  கண்கள் தாங்கிக்கொள்ள கூலிங் கிளாஸ் உதவுகிறது என்பதில் மாற்றமில்லை.

Jun 01, 2025

அலுவலகத்தில் கணினி திரை பார்த்து கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்.இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம். இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் ' இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது. கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப் பதம் இருக்காது.ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரண மாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கைத்  தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும். கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான  திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான. அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, பீச், வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும். 

1 2 ... 74 75 76 77 78 79 80 ... 103 104

AD's



More News