1. இந்திய தேசிய கீதத்தை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். 2. இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24-இல் 'ஜன கண மன...' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 3.தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழிபெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. 4.1911, டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது (மகாநாட்டின் இரண்டாம் தினம்). முதல்நாளில் வந்தே மாதரம் பாடலே பாடப்பட்டது. 5. 1912 -இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது. 6. 1919 - The Morning Song of India எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
70 வது வயதிற்கு மேற்பட்டோர் தங்களுடைய ஆதார் கார்டை, இ சேவை மையத்தில் காண்பித்து மத்திய அரசால் வழங்கப்படும். இது போன்ற அட்டையை பெற்றுக் கொண்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ரூபாய் 5 லட்சம் வரை இலவசமாக வைத்தியம் செய்து கொள்ளலாம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சித்தார்த் மண்டல், பாலியல் வன்கொடுமை போன்ற வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஒரு செருப்பைக் கண்டுபிடித்துள்ளார் கண்டு என்பது உங்களுக்குத் உங்களுக்குத் தெரியுமா? எலக்ட்ரோஷூ என்றுபெயரிடப்பட்ட இந்த ஸ்லிப்பரில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் உதவியுடன், சிறுமியின் சரியான *இருப்பிடம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கும். இதனுடன், அந்தப் பெண்ணைத் தொடும் எவருக்கும் கடுமையான மின்சார அதிர்ச்சி ஏற்படும். இந்த செருப்பு எந்த மின்சாரத்தாலும் சார்ஜ் ஆகாது, ஆனால் பெண் நடப்பதால் நடப்பதால் சார்ஜ் ஆகாது.
எனக்கு ஒரு அறக்கட்டளையத் தொடங்குவதற்கான விதை, ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சிவியின் இரத்த வங்கிக்கு சென்ற பின் தான் மனதிற்குள் முளைத்ததாக சூர்யா நிகழ்ச்சியில் தெரிவித்தார்தனது அறக்கட்டளைகான நன்கொடைகளில் பெரும் பகுதி தெலுங்கு பேசும் மக்களிடமிருந்து வருகிறது என்பதையும் சூர்யா வெளிப்படுத்தினார். ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அகரம் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தேன்.20 சதவீதத்துக்கும் அதிகமான நிதி அங்குள்ள தமிழ் மாணவர்களுக்கு தெலுங்கு பேசும் சமூகத்திட மிருந்து வந்தது.இப்போதும் தெலுங்கு மொழி பேசும் மக்களே மிகவும்கனிவான இதயம் கொண்ட எனது அற்புதமான மக்கள் இப்போதும், இன்றும், இன்றுவரை தமிழ் மாணவர்களின் கல்வியை ஆதரிக்கின்றனர் எனவே எனக்கு நிறைய நன்றியுணர்வு உள்ளது. என்று அவர் கூறினார்.
செனாப் நதியின் ஆற்றுப்படுகையில் இருந்து, 1,178 அடி உயரத்துக்கு மேலே ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ராவில், கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி 6 th JUNE திறந்து வைத்தார்.உலகின் மிக உயரமான இந்த பாலம், 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.. 1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியி யலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான மாதவி லதா.செனாப் ரயில் பாலத் தின் வெற்றிகரமான கட்டு மானத்திற்கு புவிதொழில் நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார் .முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர்.பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
இந்தியா உள்பட உலகின் சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய போவதாக அறிவித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் டிக்டாக் செயலிக்கு தடை என்று அறிவித்தது. ஆனால் சில மணி நேரங்களில் தடையை நீக்கி ,அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய டிரம்ப் கால அவகாசம் கொடுத்தார்.இந்த நிலையில் டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக எலான் மஸ்க் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் கேட்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, டிக் டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.டிக் நாக் நிறுவனம் கை மாறியவுடன் இந்தியாவில் அந்நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குமா அல்லது எலான் மஸ்க் நிறுவனம் வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வேலையில் இருப்பவர் 30,000 சம்பளம் வாங்குகிறார், 1 கோடி சம்பாதிக்க 30 ஆண்டுகள் ஆகும். ஆனால் வெறும் 250 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 40,000 பேருக்கு விற்றால், ஒரு வருடத்தில் 1 கோடி சம்பாதிப்பீர்கள். வித்தியாசம் சிந்தனையில் மட்டுமே உள்ளது ஒரு வேலை உங்களுக்கு பாதுகாப்பைத் தரும், ஆனால் வணிகம் உங்களுக்கு சுதந்திரத்தைத் தரும்.
குளிர்பானங்களில், அதிகம் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அது உடல்நலத்திற்கு கேடு என, எச்சரிக்கப்படுகிறது. இருப்பினும், அதன் சுவைக்கு அடிமையானவர்களால், அவற்றை விட முடியவில்லை.இந்நிலையில், சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான நிறுவனம், உலகிலேயே முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பானத்தை, பேரீச்சம்பழத்திலிருந்து தயார் செய்துள்ளது. இதற்கு, 'மிலாப் கோலா' என, பெயர் சூட்டியுள்ளது.பேரீச்சம்பழத்திலுள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாஷியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களுடன், செயற்கை இனிப்பூட்டிகள் இல்லாமல் ஆரோக்கிய பானமாகவும் திகழ்கிறது.சர்வதேச அளவில் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் அனைத்தையும்,'மிலாப் கோலா' கடந்து, தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த பானத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற பலரும், இதை அருந்திவிட்டு, அற்புதமான சுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தீவிரமாக விளம்பரப்படுத்தப் பட்டால், உலக சந்தையில் தற்போதைக்கு இதற்கு போட்டியில்லை என, கூறுகின்றனர்.
இளமையில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தும் சில குழந்தைகளில் ,ஒரு புத்திசாலி சிறுமி தான் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி சுரேஷ். 1998 பிப்ரவரி 5ஆம் தேதி பிறந்த ஸ்ரீ லட்சுமி, மூன்று வயதில் கணினி பயன்படுத்த தொடங்கி, ஆறாம் வயதில் தனது முதல் இணையதளத்தை வடிவமைத்தார். 11வது வயதில் eDesign Technologies என்ற இணைய வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கி உலகின் மிகவும் இளமையான CEOகளில் ஒருவராக விளங்கினார். ஸ்ரீலட்சுமி கோழிக்கோட்டில் உள்ள பிரெசென்டேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்து, பின்னர் சென்ட் ஜோசப் கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது eDesign Technologies நிறுவனத்தின் CEO ஆக செயல்பட்டு வருகிறார்8ஆம் வயதில் தனது பள்ளிக்காக இணையதளம் வடிவமைத்து தனது திறமையை நிரூபித்தார். இவர் நிறுவனம் SEO, கிராபிக் டிசைன், இணையதள மேம்பாடு உள்ளிட்ட சேவைகள் வழங்குகிறது. மைக்ரோசாஃப்ட், நோக்கியா, கோகா-கோலா போன்ற பெரிய நிறுவனங்களும் இவரது கிளையண்டுகளாக உள்ளனர். இணைய வடிவமைப்பில் தன்னுடைய சிறப்பான சேவைக்காக 2008 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் விருதும், Golden Web Award (USA), Sixty Plus Education Award (Canada) போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார். ஊடக இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.51 கோடி என்று கூறப்படுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு இவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
மைக்ரோசாப்ட்நிறுவனம், சமீபத்தில்முக்கியமுடிவொன்றைஎடுத்துள்ளது.உலகளவில்உள்ளதனதுஊழியர்களில் 3 சதவீதமானவர்கள், அதாவது 6,000-க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று நிறுவனத்தின்அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாகவும், மைக்ரோசாப்ட் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.28 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து விலக்கியது. அதேபோல, 2023-ஆம் ஆண்டிலும் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்ப்பை மீறி உயர்ந்திருந்தாலும், தொழில்நுட்ப துறையில் கடும் போட்டி நிலவுவதால், செயல்திறனை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.மேலும், செயற்கை நுண்ணறிவை மையமாக கொண்டு எதிர்கால வளர்ச்சிக்கான முயற்சிகளை மைக்ரோசாப்ட் மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றம் காரணமாக, நிறுவனத்துக்குள் சில வேலைகள் தேவையற்றதாகக் கருதப்பட்டு, அந்த இடங்கள் ரத்து செய்யப்படுகின்றன.பெரிய நிறுவனங்களும் கூட ஊழியர்களை குறைக்கும் நிலைக்கு சென்றுவிட்டன என்று தொழில்நுட்ப உலகில் நிலவும் நிலையினை வெளிப்படுத்துகிறது. இந்த நிலைமை, டெக் துறையில் வேலை பார்க்கும் பலரிடையே குழப்பம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.