25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருச்சுழியில்  ரூ.29 இலட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop center) திறந்து வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், திருச்சுழியில் ரூ.29 இலட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One stop center) திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி  அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (30.07.2026)  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் ரூ.29 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்தார்.மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசால் 38 மாவட்டங்களிலும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டு, விருதுநகர் மாவட்டத்தில்  கடந்த ஜூன்"2025 முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து, அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை(UDID) மற்றும் மறுவாழ்வு சேவை வழங்குவதற்காக உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 32,696 மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு 6 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் (அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, இராஜபாளையம், விருதுநகர் - கன்னிசேரிபுதூர், வெம்பக்கோட்டை - கல்லமநாயக்கன்பட்டி) கடந்த மார்ச் 2026 ஆம் மாதம் முதல் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 13 வட்டார ஓரிட சேவை மையங்களில் திருச்சுழி ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.29 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு இன்று (30.07.2026)  சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில்   1 உளவியல் ஆலோசகர்(Counceller cum case worker),  1 தசைப்பயிற்சியாளர் (Physiotherapist), 2 சிறப்பு கல்வி பயிற்றுனர் (Special Educator - ID & Special Educator - HI),  3 சமூக ஒருங்கிணைப்பாளர் (Community Facilitators). 7 சமூக மறுவாழ்வு பணியாளர் (Community Rehabilitation Workers) மற்றும் இம்மையத்தின் பணியாளர்களை கண்காணிப்பதற்கு 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் என மொத்தம் 15 முன்களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மேலும் மையத்தில் சிறப்பு கல்வி, பிசியோ தெரபி, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு உதவிக்கான ஆலோசனை உள்ளிட்ட  சேவைகள் வழங்கப்பட உள்ளது.

இம்மையத்தின் இதர சேவைகளாக வாழ்க்கை திறன், கல்வி, பெற்றோர் /பாதுகாவலர்களுக்கான பயிற்சி, UDID அட்டை விண்ணப்பிக்க, அரசு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல், உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்தல், புகார்கள் பரிசீலித்து தீர்வு காண வழிகாட்டுதல் போன்றவைகள் வழங்கப்பட உள்ளது.

எனவே, அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சேவை மையத்தினை அனுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News