சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 6 புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ரூ.1.07 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 6 புதிய அங்கன்வாடி மையங்களை (30.07.2026) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.குழந்தைகளின் உடல், மன மற்றும் கல்வி வளர்ச்சிக்கு அங்கன்வாடி மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து உணவு, முன்பள்ளிக் கல்வி, சுகாதார பராமரிப்பு, வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு சேவைகள் ஆகியவை அங்கன்வாடி மையங்கள் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கட்டட வசதியும், காற்றோட்டத்துடன் கூடிய இடங்களில் கல்வி கற்பிக்கும் வகையில் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி விருதுநகர் நகராட்சியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் எஸ்.எம்.ஜி நகாராட்சி பள்ளி அருகில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் அ.ச.ப.சி.சி பள்ளி அருகில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆமணக்குநத்தம் அங்கன்வாடி மையம், திருச்சுழி ஊராட்சியில் தலா ரூ.16.45 இலட்சம் மதிப்பில் செங்குளம், புளியங்குளம், தொட்டியாங்குளம் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.இம்மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியான சூழலில் கலிவ கற்பதற்கான வசதிகள், சமையலறை, குடிநீர் வசதி, கழிப்பறை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியே நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் சேவைகளை அனைத்து தகுதியான பயனாளிகளும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணித்து, தரமான முன்பள்ளிக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை சிறப்பாக வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி ஷீலா, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply