ஆப்பிள் அப்பம்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 2
பச்சரிசி – 2 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
.
ஆப்பிளை தோல் சீவி, சிறிதுசிறிதாக நறுக்கிவைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து,நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு பத்துநிமிடம் வேகவிட்டு மசித்து வைக்கவும்.
பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அதோடு, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த மாவில் வேக வைத்து மசித்த ஆப்பிளை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.
இப்பொழுது பணியாரக் கல்லில் நெய் விட்டு, மாவை ஊற்றி அப்பமாக சுட்டுஎடுக்கவும்.
சுவையான ஆப்பிள் அப்பம் தயார்.
0
Leave a Reply