25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நலம் வாழ

Aug 20, 2025

முதுகு வலி வராமல் இருக்க….

அமரும்போது வலையாதீர்கள்.தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள். கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள்.தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.டூ வீலர் ஒட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள் .பலுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.காலை  20 முறை மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

Aug 19, 2025

வெறும் வயிற்றில் இளநீர்  குடித்தால்..

இளநீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும், அதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. தூங்கி எழுந்தவுடன் நம் வயிறு சற்று சூடாக இருக்கும், அந்த சமயத்தில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே இளநீரை உணவு இடைவேளையில் தான் அருந்த வேண்டும்.இளநீரில்94% நீர் உள்ளது மற்றும் முற்றிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது. இளநீரை பானமாக உட்கொள்ளும்போது பெரும்பாலான பெரியவர்களுக்கு பாதுகாப்பானது. இருப்பினும், அதிக அளவில் உட்கொண்டால், இளநீர் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கச் செய்யும்.

Aug 18, 2025

தினமும் தயிர் சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும் .

தினமும் தயிரை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. இதயம் வலுப்பெறும்.நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையின் வைக்க உதவுகிறது.இதனால் உடல் எடை குறைக்கிறது.தினமும் தயிர் சாப்பிடுவது உடலில்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக்  கொண்டுள்ளது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

Aug 15, 2025

துவைக்காத தலையணை உறை  நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

ஒரு வாரமாக உங்கள் தலையணை உறையை துவைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு கழிப்பறை இருக்கையை விட 17,000 மடங்கு அசுத்தமான ஒன்றின் மீது தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என National Sleep Foundation வெளியிட்ட ஆய்வு தகவல், இதில் முகப்பரு, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளும் அடங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Aug 11, 2025

கருப்பு மிளகுடன்தேன்சேர்த்துசாப்பிட...

கருப்பு மிளகுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் அழற்சி எதிர்ப்பு, மூட்டு விறைப்பு, கீல்வாதம் போன்ற பிற வலிகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. தேன் மற்றும் கருப்பு மிளகு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். தேன் இல்லாவிட்டாலும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.

Aug 06, 2025

உடல் வெப்பத்தை தணிக்கும் வெந்தயம். 

வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெரும் வயிற்றில் குடித்து வத்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் இதில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சந்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது

Aug 04, 2025

ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ள கடல்பாசி .

கடல்பாசி என்பது கடலில் வாழும் ஒரு வகை தாவரம். இது சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்களில் இருக்கும். கடல் பாசியை சமையலில் பயன்படுத்தலாம். கடல் பாசியில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன.கடல் பாசிஎலும்புகளை உறுதியாக்கும்.தைராய்டை சரிசெய்யும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எடை குறைக்க உதவும்.வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.

Jul 29, 2025

பசி உணர்வை தூண்டும் சோம்பு தண்ணீர்.

 டீ. காபிக்கு பதில் நாள்தோறும் சோம்பு தண்ணீர் அருந்துவதால் ,பசி உணர்வை தூண்டும்.செரிமானப் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு.சிறுநீரகப் பிரச்னைகளை தடுக்கும்.கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.

Jul 29, 2025

மயிர் முளைச்சான்  ''ரம்புட்டான்'

மலேசியா மற்றும் இந்தோனேசியாலை தாயிடமாகக் கொண்டுள்ள இப்பழத்தை ''ரம்புட்டான்' என்பார்கள். இது நீர்ச்சத்து வழங்கி, தோல் பொலிவாகவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுகிறது.

Jul 28, 2025

உணவில் அதிக உப்பை உட்கொள்வது, உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம், இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கண் பார்வையை குறைக்கும். உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உணவின் சுவையை முழுமையாக வைத்திருக்கிறது.அத்துடன் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 48 49

AD's



More News