இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா
புரோட்டின், இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.கண்பார்வையை அதிகரிக்கச்செய்வதோடு தோல் பாதிப்படையாமல்பாதுகாக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணமுடையவை. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்துக்கு உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் வைட்டமின்-சி அதிக அளவில் உள்ளது. 100 கிராம் பழத்தில் 24.5 சதவீதம் ‘வைட்டமின்-சி’ கிடைக்கிறது. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களை நீக்குவதிலும்,நோய்த் தொற்று ஏற்படாமல் காப்பதிலும் ‘வைட்டமின்-சி’ யின் பங்கு மகத்தானது. அத்தியாவசிய வைட்டமின் ஆன, வைட்டமின்-ஏ குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. இதுபோக பொட்டாசியம், தாமிரம், இரும்பு போன்ற தாதுக்களும், போலேட், நியாசின், பான்டோதெனிக் ஆசிட் போன்றவையும் உள்ளன.
சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
0
Leave a Reply