கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவவி குணமாகும். இதனை அரைத்து சூடேற்றி அடிபட்ட இடத்தில் தடவினால், வலியும் வீக்கமும் குறையும் இதன் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்று வலியும், பாலில் கலந்து குடித்தால் இருமலும் தீரும் வியர்வைக் கட்டிகள் மறைய இதை வெங்காய சாற்றில் குழைத்து பூசலாம்.கஸ்தூரி மஞ்சள் அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்..
0
Leave a Reply