பிரெட் அதிகம் -சாப்பிடக்கூடாது
பெரும்பாலானோர் காலை சிற்றுண்டி உணவுக்கு பிரெட் சாப்பிடுவது வழக்கம்ஆனால் மைதா மாவில் தயாரிக்கப்படும் பிரெட், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.மாறாக அதில் சேர்க்கப்படும் பொருட்களால் பிரெட் பல நாட்கள் கெடாமல் இருக்கும், ஆனால் பல்வேறு உடல் உபாதைகள், மற்றும் சில நோய்களுக்கு வழிவகுக்கும்.அதில் சேர்க்கப்படும் மூலப்பொருள் ஈஸ்ட் பூஸ்டர், சர்க்கரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.அதிகம் சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் செரிமான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.பிரெட் கெட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிபொருகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும், ஆனால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
0
Leave a Reply