மாற்றுத்திறனாளிகளுக் கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்இந்தியாவில் நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 46 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் ரிங்கு சிங், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 66.37 மீ., எறிந்து, சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.இப்பிரிவில் உலக சாதனை (2023ல்) படைத்த இந்தியாவின் சுந்தர் சிங் குர் ஜார், ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 64.76 மீ., துாரம் எறிந்தார். இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிவென்றார். இந்தியாவின் தயவந்தி.பெண்களுக்கான 64 வட்டு எறிதலில் 27.94 துாரம் எறிந்துநான்காவது இடம் பெற, வெண்கல வாய்ப்பு நழுவி, ஆசிய அளவில் இது சிறந்த தூரம் ஆனது. ஆண்கள் குண்டு எறிதல் (எப் 40) போட்டியில் ரஷ்யாவின் டெனிஸ் ஜினெஸ்டிலவ், 3, 4வது வாய்ப்பில் 11.85, 11.92 மீ., துாரம் எறிந்து அடுத்தடுத்து புதிய உலக சாதனை படைத்து, தங்கம் வென்றார்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் பவித்ரா, நந்தினி, அக்சயா, ஏஞ்சல் சில்வியா அடங்கிய தமிழக பெண்கள் அணி (45.76 வினாடி) வெண்கலம் வென்றது. ஜூனியர் பெண்கள் ஹாக்கி 3வது போட்டிகான்பெராவில், இந்திய அணி 1-0 என ஆஸ்திரேலியாவை (21 வயது) வீழ்த்தி, முதல் வெற்றி பெற்றது. இந்திய அணிக்குசிவாச் (32வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகேரு யூஜுகி ஜோடி ஜப்பான் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4-6, 6-3, 18–16 என அமெரிக்காவின் கிறிஸ்டியன் ஹாரிசன், இவான் கிங் ஜோடியை வீழ்த்தியது. இந்தியாவின் அபய் சிங் ,கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் 'ரவுண்டு - 16' போட்டியில் 2-3 (13-11, 5-11, 11-5, 3-11, 3-11) என எகிப்தின் பேர்ஸ் டெசவுகியிடம் போராடி தோல்வியடைந்தார். டென்னிஸ் 'பிளே-ஆப்'.'பில்லி ஜீன் கிங்' கோப்பை போட்டியில் (நவ.14-16, பெங்களூரு) பங்கேற்கும் இந்திய அணிக்கு சஹாஜா, ஸ்ரீவள்ளி, அங்கிதா ரெய்னா, ரியா பாட்யா, பிரார்த்தனா தேர்வாகினர். வைதேகி சவுத்ரி மாற்று வீராங்கனையாக இடம் பிடித்தார்.
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், 10 மீ., ''ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா சாகல் - கபில் (582.15 புள்ளி), வன்ஷிகா சவுத்ரி - ஜோனாதன் கவின் ஆண்டனி (578.20) ஜோடிகள்முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.பைனலில் ராஷ்மிகா -கபில் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம், வன்ஷிகா - ஜோனா தன் ஜோடி வெள்ளி வென்றனர். இந்தியாவின் பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் மான்சி ரகுவன்ஷி (117 புள்ளி), தில்லான் ரைசா (112.6), அக்ரிமா கன்வார் (111) முறையே 1, 3, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் தில் லான் ரைசா, 51 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.மான்சி (41) வெண்கலம் கைப்பற்றினார்.இந்தியா இதுவரை 3 தங்கம்,5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிமுதலிடத்தில் நீடிக்கிறது.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் 64வது சீசன் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில், ஹரியானாவின் சீமா, 55.26 மீ., எறிந்து தங்கத்தை வென்றார். ரயில்வேயின் நிதி (53.71 மீ.,), ஹரியானாவின் சன்யா யாதவ் (52.05 மீ.,) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். ரயில்வே அணியின் கவுதம், சர்வீசஸ் அணியின் ராம்பீர், மத்திய பிரதேசத்தின்தேவ் மீனா தலா 5.10 மீ., தாண்டி, ஆண்களுக்கான 'போல் வால்ட்' பைனலில் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.ரயில்வே அணியின் பைரபி ராய் (13.10 மீ.,) தங்கம் வென்றார். மகாராஷ்டிராவின் பூர்வா சவந்த் (13.05 மீ.,), மத்திய பிரதேசத்தின் நிமிஷா (12.96 மீ.,) பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' பைனலில்வெள்ளி, வெண்கலம் வென்றனர். ஹிமாச்சல பிரதேசத்தின் சீமா, இலக்கை 16 நிமி டம், 01.27 வினாடியில் கடந்து பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் தங்கத்தை கைப்பற்றினார்.அனைத்து இந்திய போலீஸ் அணியின் பிரின்ஸ் குமார் 14 நிமிடம், 06.57 வினாடியில் ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தின் பைனலில் கடந்துமுதலிடம் பிடித்தார். சர்வீசஸ் அணியின் தன்வார் (14:14.88), ரயில்வேயின்அபிஷேக்(14:19.16) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
சர்வதேச கிளாசிக் ஸ்குவாஷ் தொடர் கத்தாரில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 35 வது இடத்திலுள்ள இந்தியாவின் 'நம்பர்-1’ வீரர் அபே சிங், உலகின் 'நம்பர்-5' வீரர், முன்னாள் உலக சாம்பியன், எகிப்தின் கரிம் கவாத்தை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-6 என கைப்பற்றிய அபே சிங், அடுத்த செட்டையும் 11-4 என எளிதாக வென்று வசப்படுத்தினார்.முடிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அபே சிங் 3-1 (11-6, 11-4, 1-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முன்னேறினார்.
துபாயில் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் ,நேற்றிரவுஅரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும்மோதின. 41 ஆண்டுகால ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகள் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக மல்லுகட்டியதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. முதலில் பந்து வீச்சை 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்தார் பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தக்க வைத்தது. இத்தொடரில் தோல்வியே சந்திக்காத இந்தியா 7 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று கோப்பையை முத்தமிட்டு இருக்கிறது. பாகிஸ்தானையும் 3 முறை போட்டுத் தாக்கி இருக்கிறது.இந்தியஅணி ஆசிய கோப்பையை வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
உலக 'பாரா' தடகள சாம்பியன் ஷிப் இந்தியாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது சீசன் ,நேற்று ஆண்களுக் கான ஈட்டி எறிதல் எப். 57 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார் கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 41.92 மீ., எறிந்து, 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹேம் சந்திரா (41.17 மீ.,) கடைசி இடம் (10) பெற்றார்.இந்தியாவின் விகாஷ், 6.96 மீ., மட்டும் தாண்டி, 6வது இடம் பெற்று, ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி 47) பதக்க வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீரர்அஜய் சிங் (6.31 மீ.,) 10 வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர்கள். ராகேஷ்பாய் (11.88 வினாடி), ஷ்ரேயான்ஸ் (12.18) கடைசி இரு இடம் (7,8) பெற்றனர். இந்தியா, இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்ற பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ் டல்' / 'ஷாட்கன்') தொடர் டில்லியில், ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜோனாதன் கவின் ஆண்டனி (586.19 புள்ளி), சிராக் சர்மா (578.15) முத லிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். இதில் ஜோனாதன்,244.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் (576.19 புள்ளி), மோஹினி சிங் (576.12), ராஷ்மிகா சாகல்(573.17) முறையே 1, 2, 5வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.பைனலில் ராஷ்மிகா, 236.1 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இந்திய வீராங்கனைகளான (174.2), மோஹினி (153.7) முறையே 5, 6வது இடம் பிடித்தனர்.இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கைப்பற்றி முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.
உலக பாரா தடகளசாம்பியன்ஷிப் டில்லியில் இன்று துவங்குகிறது சொந்த மண்ணில் பதக்க வேட்டை நடத்த இந்திய நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில், நடத்தப்படுகிறது. இதன் 12வது சீசன் டில்லி, நேரு மைதானத்தில் இன்று துவங்குகிறது. வரும் அக். 5 வரை நடக்கும். 104 நாடு களில் இருந்து 1500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.101 ஆண்கள், 84 பெண்கள், ஒரு கலப்பு போட்டி என மொத்தம் 186 பிரிவு களில் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. ஈட்டி எறிதலில் பாராலிம்பிக் சாம்பியன், நடப்பு உலக சாம்பியன் சுமித் அன்டில், பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்) இந் தியாவுக்கு தங்கம் வென்று தரலாம். இந்தியா சார்பில் 74 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட் சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. இதன் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று முன் தினம், துபாயில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 135/8 ரன் எடுத்தது. வங்கதேச அணி 20 ஓவரில் 124/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நாளை நடக்கும் பைனலில் மோதுகின்றன.