பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடந்தது. நேற்று நடந்த பைனலில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள, நடப்பு சாம்பியன் இந்திய அணி, 6வது இடத்திலுள்ள சீனாவை எதிர்கொண்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணி, இத்தியாவுக்கு கடும் சவால் கொடுத்தது.முதல் பாதியில் இந்திய அணிக்கு கிடைத்த நான்கு பெனால்டி கார்னர், வாய்ப்புகளும் வீணாகின. இரண்டாவது பாதி துவங்கிய முதல் நிமிடத்தில் (31-வது இந்தியாவுக்கு ஐந்தாவது பெனால்டி கார்னர், கிடைத்தது. இம்முறை தீபிகா, ரிவர்ஸ் ஹிட் அடித்து பந்தை கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2023, 2024 சாம்பியன் ஆனது ஆசிய சாம்பியன் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு தலா, ரூ.3,00,000/- பரிசு அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் தரப்பட்டது.
சீனாவில் சூப்பர் 750 அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து தாய்லாந்தின் புசானன் மோதினர். மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய சிந்து 21-17, 21-19, என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது புசாசனுக்கு எதிராக சிந்து பெற்ற 20-வது வெற்றி இதுவரை 21 போட்டியில் மோதினர் .இதில் ஒரு முறை மட்டும் சிந்து தோல்வியடைந்தார். சீன பாட்மின்டன் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, 244 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து மீண்டும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறினார். இதற்கு முன், இந்த ஆண்டு நடந்த T20 உலக கோப்பை தொடருக்கு பின் வெளியான தரவரிசையில் முதன்முறையாக நம்பர் 1 இடம் பிடித்திருந்தார்.பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் திலக்வர்மா, 806 புள்ளிகளுடன் 72-வது இடத்தில் இருந்து நம்பர் 3 இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச T20 போட்டியில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. துபாயில் வெளியிட்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட, பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஎஸ்ட் நாளை பெர்த்தில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணியினர், பெர்த்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். பீல்டிங் பயிற்சியாளர் திலிப் முன்னிலையில் இந்திய வீரர்கள் இரு பிரிவுகளாக பயிற்சி மேற்கொண்டனர்.பீல்டிங் பயிற்சியாளர் திலிப் கூறுகையில், டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர் பீல்டிங் பயிற்சியை, ஒரு போட்டி போல நடத்தியதால் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஒவ்வொரு வீரரும், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்திய தடகள வீராங்கனை விஸ்மாயா வயது 27 கடந்த 2018 ஆசிய விளையாட்டு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஆகஸ்ட் 15-ல் கொச்சியில் உள்ள விஸ்மாயா வீட்டில், போட்டி இல்லாத நாளில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் (NADA) சார்பில் நடந்த இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட மருந்து, இவரது சிறுநீர் மாதிரியில் கலந்திருந்தது. உறுதியானது. இதனால் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
.சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தர வரிசையில் 50வது இடத்திலுள்ள இந்தியாவி்ன் இளம் வீராங்கனை அனுபமா, நம்பர் 12 ஆக உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஐங்கை எதிர்கொண்டார்.முதல் செட்டில் 10-3. 18-11, என முந்திய அனுபமா, 21-17 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பதிலடி தந்த பெய்வென் 21-8 என எளிதாக வசப்படுத்தினார். மூன்றாவது கடைசி செட்டில் 2-5 என பின்தங்கிய போதும், பின் 18-14 என அனுபமா முந்தினார். கடைசியில் 22-20 என வசப்படுத்தினார். முடிவில் அனுபமா 21-17, 8-21, 22-20 என வென்றார்.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7-வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியா (நம்பர் 9) 4-வது இடம் பிடித்த ஐப்பானை (நம்பர் 11) எதிர்கொண்டது. ஏற்கனவே லீக் சுற்றில் இந்தியா 3-0 என வீழ்த்தியதால், மீண்டும் எளிதாக வெல்லும் என நம்பப்பட்டது.முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை, போட்டியின் 48 வது நிமிடத்தில் தீபிகாவை ஐப்பான் அணியினர் பவுல் செய்ய, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதில் துல்லியமாக கோல் அடித்து அசத்தினார். துணைக் கேப்டன் நவ்னீத் கவுர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இப்போட்டியில் இந்தியாவுக்கு 13 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்த போதும். ஒன்றில் கூட கோல் அடிக்கவில்லை. முடிவில் இந்திய பெண்கள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
ஜூனியர் ஆசிய ஹாக்கி தொடருக்கான (நவ. 26 டிச. 4, ஓமன்) 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமிர் அலி, துணை கேப்டனாக ரோகித் நியமனம். சீனாவில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இன்று துவங்குகிறது. இதில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது.
இந்தியா (125 வது இடம்) வந்த மலேசிய (133) கால்பந்து அணி நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்றது. நேற்று ஐதராபாத்தில இப்போட்டி நடந்தது. காயத்தில் இருந்து 10 மாதத்திற்குப் பின் மீண்டு வந்த சந்தோஷ் ஜின்கன், இந்திய அணி கேப்டனாக களமிறங்குகிறார். இந்தியாவின் சாங்டே அடித்த பந்து மேலேசிய கோல் போஸ்டுக்கு மேலாக சென்றது. முடிவில் போட்டி 1–1 என டிரா ஆனது.
பீஹாரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்தபோதும், லீக் சுற்றில் இந்திய அணி 100 சதவீத வெற்றி பெற்றது. 5 வெற்றியுடன் மொத்தம் 15 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இன்று, பட்டியலில் 4வது இடம் பிடித்த நம்பர் 11 அணியான ஐப்பானை சந்திக்கிறது. நடப்பு சாம்பியன் இந்தியாவை பொறுத்த வரையில் தீபிகா அதிகபட்சம் 10 கோல் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். இது மீண்டும் தொடரலாம்.