25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்407 பதக்கங்களை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்407 பதக்கங்களை வென்றது.

தமிழக மாஸ் டர்ஸ் தடகள சங்கம், இந்திய தடகள கூட் டமைப்பு,  சார்பில், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் 20க்கும்அதிகமான ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 35 வயது முதல் 100 வயது வரை உள்ள, 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 14 பிரிவுகளில்போட்டி நடக்கின்றன.

நேற்று இரண்டாவது நாளில் பல்வேறு பிரிவுகளில் 100 மீ., ஓட்டம் நடந்தன. இந்தியாவின் ஜஸ்பிந்தர் சிங் பாஜ்வா 55 வயதுக்கு மேற்பட்டோர் 100 மீ., தடை ஓட்டத்தில் (15.69  வினாடி) தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் தம்பல் ஷர்மா (13.26, + 65 வயது), விஜயன் (14.37, + 70), மணச்சந்த் சிங் (15.73, +75), தங்கம் வென்றனர்.

இரண்டாம் நாள் முடிவில், இந்திய ஆண்கள் (69 தங்கம், 70 வெள்ளி, 69 வெண்கலம்), பெண்கள்அணி(59+68+72) மொத்தம் 128 தங்கம் உட்பட 407 பதக்கங்களை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News