25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


செஸ் உலககோப்பை 11வது சீசன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரனவ் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் உலககோப்பை 11வது சீசன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரனவ் வெற்றி.

செஸ் உலககோப்பை 11வது சீசன் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் உட்பட 10 இந்திய வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

நேற்று மூன்றாவது சுற்றின் முதல் போட்டி நடந்தது. இந்திய வீரர் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். அர்ஜுன், 30வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை 'டிரா' செய்தால், நான்காவது சுற்றுக்கு முன்னேறலாம்.

இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, முதல் போட்டியில் பெல்ஜியத்தின்  டேனியலை 1.0-0 வென்று என முன்னிலை பெற்றார். இந்திய வீரர் பிரனவ், லிதுவேனியாவின் திதாசை 102வது நகர்த்தலில் வென்றார்.

 குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக்கை சந்தித்தார். குகேஷ், 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞா னந்தா, ஆர்மேனியாவின் ராபெர்ட்டை எதிர்கொண் டார்.பிரக்ஞானந்தா, 30 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News