25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Oct 07, 2025

வேலவன் செந்தில்குமார் ஸ்குவாஷ் கிளாசிக் தொடரில் வெற்றி !

ஓபன் ஸ்குவாஷ் கிளாசிக் தொடர்நியூயார்க்கில்,  முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ரானி, அபய் சிங் மோதினர். வீர் சோட்ரானி 3-1 (6-11, 11-6, 11-5, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 'நடப்பு தேசிய சாம்பியன்' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்று போட்டியில் 3-0 (11-2, 11-8, 14-12) என வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தார்.இந்திய வீரர் ரமித் டான்டனுக்கு, முதல் சுற்றில் 'பை' சிறப்பு அனுமதிவழங்கப்பட்டதால், நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடுவார்.

Oct 06, 2025

இந்திய வீராங்கனை ஷ்ரியான்ஷி அல் ஐன் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் சாம்பியன்  பட்டம் வென்றார்.

 அல் ஜன் மாஸ்டர்ஸ் பாட் மின்டன் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,),  பெண்கள் ஒற்றையர்பிரிவு பைனலில் இந்தியாவின் தஸ்னிம் மிர் 20, ஷ்ரியான்ஷி வாலி ஷெட்டி 18, மோதினர். முதல் செட்டை தஸ்னிம் மிர் 21-15 எனக் கைப்பற்றினார். பின் ஷ்ரியான்ஷி, 2வது செட்டை 22-20 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்துஇவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-7 என மிகச் சுலபமாக வென்றார்.ஷ்ரியான்ஷி மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் 15-21, 22-20, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'சூப்பர் 100' பட்டத்தை கைப்பற்றினார். 

Oct 06, 2025

இந்திய பெண்கள்  அணி உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் 88 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

நேற்று நடந்த பெண்கள் உலக கோப்பைஇலங்கை தலைநகர் கொழும்புவில் (50 ஓவர்) லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. பாத்திமா சனா பாகிஸ்தான் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணி 50 ஓவரில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பாகிஸ்தான் அணி  159 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. 

Oct 06, 2025

உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது.

மாற்றுத்திறனாளி களுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் டில்லியில்,  பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12') பைனலில், பந்தய துாரத்தை 24.46 வினாடியில்கடந்த இந்தியாவின் சிம்ரன் சம்ரா, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். இவர், 100 மீ., ஓட்டத்தில் ('டி12') தங்கம் வென்றிருந்தார். இந்தியாவின் பிரீத்தி பால்  பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி35') பைனலில் இலக்கை 14.33 வினாடியில் கடந்தவெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இம்முறை 200 மீ., ஓட்டத்தில் ('டி35') வெண்கலம் வென்ற இவர், உலக தடகளத்தில் தனது 4வது பதக்கத்தை பெற்றார் இந்தியாவின் நவ்தீப் சிங், ஆண்களுக்கானஈட்டி எறிதல் ('எப்41') பைனலில், அதிகபட்சமாக 45.46 மீ., எறிந்து வெள்ளி வென்றார். இது, உலக தடகளத்தில் இவரது 2வது பதக்கம் ஆனது.. இந்தியாவின் சந்தீப் ஆண்களுக்கான 400 மீ.,  ஓட்டத்தின் ('டி44') பைனலில், இலக்கை 23.60 வினாடியில் கடந்து வெண்கலம் வென்றார்.உலக பாரா தடகளம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தியாவுக்கு இம்முறை 6 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என, மொத்தம் 22 பதக்கம் கிடைத்தது. உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது. 

Oct 04, 2025

 இந்தியாவின் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்து முதலிடம்..

இந்தியாவின் அபிஷேக் சர்மா ICC, T-20 தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பையில் 7 இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்து, T-20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 919 புள்ளிகள் எடுத்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை அபிஷேக் முறியடித்தார். 

Oct 04, 2025

மீராபாய் சானு உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.

நார்வேயின் போர்டேநகரில்உலகபளுதுாக்குதல்சாம்பியன்ஷிப்  நார்வேயின் போர்டேநகரில்,  87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள்  87 பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டியில்வெள்ளி வென்ற மீராபாய் சானு 31,உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.மீராபாய் சானு முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில்  84 கிலோ தூக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ தூக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார்.

Oct 04, 2025

கிரிக்கெட்  முதல் டெஸ்ட்  ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒரு பக்கம் அனுபவ மில்லா, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதும்  தொடர்ந்தது.கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். அடுத்து களம் இறங்கிய ராகுல் 100 ரன்னும், ஜுரல்  125, ரன்னும்,  ஜடேஜா 104 ரன்னும்  எடுத்து மூன்று சதத்தை கொண்டாடினர். 286 ரன் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்தது.விரைவாக ரன் சேர்த்தால்,  இன்று இந்திய பேட்டர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். 

Oct 04, 2025

உலக பாரா தடகளத்தில் சிம்ரன், நிஷாத் ‘தங்கம்  வென்றனர்.பதக்கப் பட்டியலில் 4வது இடம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) பைனல் நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன்  வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது. இந்தியாவின் நிஷாத் குமார் (டி 47, வலது கை பாதிப்பு ) ஆண்களுக்கான  (2.14 மீ.,) உயரம் தாண்டுலில் தங்கம் வென்றார். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான (டி 35)  200 மீ., ஓட்டத்தில் (30.03 வினாடி),  இந்தியாவின் பர் தீப் குமார் (46.63 மீ.,), ஆண்க ளுக்கான வட்டு எறிதலில் (எப் 64) வெண்கலப் பதக்கம் வென்றனர். உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது. இதுவரை இந்தியா 6 தங்கம்,  5 வெள்ளி, 4  வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

Oct 03, 2025

விளையாட்டு போட்டிகள் 3.10.2025

புனே அணி, சென்னையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூருவை 'டை பிரேக்கரில்' வீழ்த்தியது.தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு டில்லியில் ,அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் கான்பெராவில்,  இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  சட்டீஸ்கரில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.இரட்டையர் பிரிவு சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன் சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Oct 03, 2025

ஆசிய நீச்சல் போட்டியில், 4 வெண்கலம்  வென்ற இந்தியா.

முதன்முறையாக ஆசிய ‘அக்கு வாடிக்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்,  நடக்கிறது. 200 மீ., 'பட்டர் பிளை' பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டி பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 57.90 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெண்கலம் வென்றார்.100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு ஆண்களுக்கான நீச்சல்,  பைனலில் பந்தய தூரத்தை 55.23 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்  3வது பதக்கம் வெண்கலம். வென்றார்.ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் தாஸ் (56.24 வினாடி)  4வது இடம் பிடித்தார். 13 பதக்கங்கள் வென்ற இந்தியா, இதுவரை 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (38 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.

1 2 ... 109 110 111 112 113 114 115 ... 181 182

AD's



More News