25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விளையாட்டு (SPORTS)

Oct 04, 2025

மீராபாய் சானு உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.

நார்வேயின் போர்டேநகரில்உலகபளுதுாக்குதல்சாம்பியன்ஷிப்  நார்வேயின் போர்டேநகரில்,  87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள்  87 பங்கேற்கின்றனர்.இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டியில்வெள்ளி வென்ற மீராபாய் சானு 31,உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.மீராபாய் சானு முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில்  84 கிலோ தூக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ தூக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார்.

Oct 04, 2025

கிரிக்கெட்  முதல் டெஸ்ட்  ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடக்கிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் முடிவில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒரு பக்கம் அனுபவ மில்லா, வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் சிறப்பாக ஆடுவதும்  தொடர்ந்தது.கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்தனர். அடுத்து களம் இறங்கிய ராகுல் 100 ரன்னும், ஜுரல்  125, ரன்னும்,  ஜடேஜா 104 ரன்னும்  எடுத்து மூன்று சதத்தை கொண்டாடினர். 286 ரன் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்தது.விரைவாக ரன் சேர்த்தால்,  இன்று இந்திய பேட்டர்கள் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். 

Oct 04, 2025

உலக பாரா தடகளத்தில் சிம்ரன், நிஷாத் ‘தங்கம்  வென்றனர்.பதக்கப் பட்டியலில் 4வது இடம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் (டி 12, பார்வைக் குறைபாடு) பைனல் நடந்தது. இந்தியாவின் சிம்ரன் சர்மா 11.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப் பற்றினார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சிம்ரன்  வென்ற இரண்டாவது தங்கம் (2024, 2025) இது. இந்தியாவின் நிஷாத் குமார் (டி 47, வலது கை பாதிப்பு ) ஆண்களுக்கான  (2.14 மீ.,) உயரம் தாண்டுலில் தங்கம் வென்றார். இந்தியாவின் பிரீத்தி பெண்களுக்கான (டி 35)  200 மீ., ஓட்டத்தில் (30.03 வினாடி),  இந்தியாவின் பர் தீப் குமார் (46.63 மீ.,), ஆண்க ளுக்கான வட்டு எறிதலில் (எப் 64) வெண்கலப் பதக்கம் வென்றனர். உலக பாரா தடகளத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என 4 பதக்கம் வென்றது. இதுவரை இந்தியா 6 தங்கம்,  5 வெள்ளி, 4  வெண்கலம் என 15 பதக்கம் வென்று, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.

Oct 03, 2025

விளையாட்டு போட்டிகள் 3.10.2025

புனே அணி, சென்னையில் நடந்த புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூருவை 'டை பிரேக்கரில்' வீழ்த்தியது.தேசிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவு டில்லியில் ,அரையிறுதியில் தமிழக வீரர் மணிஷ் 1-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் ரயில்வே அணியின் நிதின் குமார் சின்ஹாவை வீழ்த்தினார்.ஜூனியர் பெண்கள் (21 வயது) ஹாக்கி 5வது போட்டியில் கான்பெராவில்,  இந்திய அணி 4-5 என்ற கோல் கணக்கில் கான்பெரா சில் அணியிடம் தோல்வியடைந்தது.சீனியர் பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  சட்டீஸ்கரில் மோனிஷா 2 கோல் அடித்து கைகொடுக்க தமிழக அணி 2-0 என, சட்டீஸ்கரை வீழ்த்தியது.இரட்டையர் பிரிவு சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 1-3 (6-11, 7-11, 11-9, 9-11) என, சீனாவின் ஜோ கிஹாவோ, சென் ஜுன் சாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Oct 03, 2025

ஆசிய நீச்சல் போட்டியில், 4 வெண்கலம்  வென்ற இந்தியா.

முதன்முறையாக ஆசிய ‘அக்கு வாடிக்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்,  நடக்கிறது. 200 மீ., 'பட்டர் பிளை' பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டி பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 57.90 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெண்கலம் வென்றார்.100 மீ., 'பேக்ஸ்டி ரோக்' பிரிவு ஆண்களுக்கான நீச்சல்,  பைனலில் பந்தய தூரத்தை 55.23 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்  3வது பதக்கம் வெண்கலம். வென்றார்.ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் தாஸ் (56.24 வினாடி)  4வது இடம் பிடித்தார். 13 பதக்கங்கள் வென்ற இந்தியா, இதுவரை 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (38 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.

Oct 03, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில்,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற் றார். இலக்கை 12.13 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று அரையிறுதி நடக்கிறது.இந்தியாவின் ஷர்மிளா பெண்களுக்கான  குண்டு எறிதல் (‘எப்57') பைனலில் பங்கேற்றார். அதிகபட்சமாக 10.03 மீ., குண்டு எறிந்த இவர், 5வது இடம் பிடித்தார். இந்திய வீராங்கனை அமிஷா ரவாத்,குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடி 10.11 மீ., எறிந்து 9வது இடம் பிடித்தார். இந்தியா சார்பில் ஹேனி ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் களமிறங் கினார். அதிகபட்சமாக 51.22 மீ மட்டும் வட்டு எறிந்த இவர், 4வது இடம் பிடித்தார்.

Oct 03, 2025

கிரிக்கெட் முதல் டெஸ்டில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின .

நேற்று துவங்கிய கிரிக்கெட் முதல் டெஸ்டில்  ஆமாதாபாத் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண் டீஸ் கேப்டன் ராஸ்டன் சேஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 38 ஓவரில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் மட்டும் பின்தங்கியிருந்தது. ராகுல் (53), கேப்டன் சுப்மன் கில் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று இந்திய பேட்டர்கள் கைவசம் ,8 விக்கெட் இருக்கும் நிலையில்,  விளையாடி, வலுவான ஸ்கோரை எட்டலாம்.

Oct 02, 2025

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்றுதுவங்குகிறது.

இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில்  இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இன்று துவங்குகிறது.அணியில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்டன. ரோகித், கோலி, சுழல்ஜாம்பவான் அஷ்வின் ஓய்வு பெற்று விட்டனர்.சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியினர் செயல்பட சிறப்பாக காத்திருக்கின்றனர் புதிய கேப்டன் சுப்மன் கில், தலைமையில் இந்திய அணி, வழக்கம் போல ஆதிக்கம்செலுத்துகிறது. இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் (2-2) செய்தது.

Oct 02, 2025

இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 'சாம்பியன்.

இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் லேர்னர் டீன் சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் மோதினர். இதில் சின்னர் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

Oct 02, 2025

இந்தியாவின் ரோகித் பெனடிக்சன்ஆசிய 'அக்குவாட்டிக்' சாம்பியன்ஷிப்பில், வெள்ளி வென்றார்.

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் (11வது சீசன்) இந்தியாவின்ஆமதாபாத்தில் முதன் முறையாக நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் எனநான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன. ஆண்களுக்கான 50 மீ., பட்டர்பிளைபிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர் ரோகித் பெனடிக்சன், 23.89 வினாடிநேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ரோகித், புதிய தேசிய சாதனை படைத்தார். தமிழகத்தை சேர்ந்த இவர், முன்னதாக உலக பல்கலை., விளையாட்டில் 23.96 வினாடி நேரத்தில் வந்து இருந்தார்.ஆண்களுக்கான 100 மீ., பிரீஸ்டைல் பிரிவில் பைனல் பைனலில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,, 49.96 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் ஐந்தாவது பதக்கத்தை ஸ்ரீஹரி வென்றார்

1 2 ... 110 111 112 113 114 115 116 ... 182 183

AD's



More News