பரணி தீபத்தை நம் வீட்டில் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பஞ்ச பூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் 2025 பரணி தீபம் ஏற்ற உகந்த நேரம்.
இந்த வருடம் பரணி நட்சத்திரம் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை ஆறு இருபத்து நான்கு மணிக்கு தொடங்கி ,மறுநாள் நான்கு நாற்பத்தி ஏழு மணிக்கு முடிகிறது. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை அன்று தொடங்குகிறது இந்த தெய்வீக நாள்.
இந்த நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும் வீட்டில்.பாவத்தை போக்கும் பரணி தீபத்தை வீட்டில் ஏற்றும் முறை, அன்று வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும். அதோடு தனியாக ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் ,என்பதால் திசை கணக்கு கிடையாது.
நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று (டிசம்பர் 2. 2025) ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம்.
எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.
0
Leave a Reply