குழந்தைகள் தினம்
குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேதியில் தான் நம்முடைய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் பிறந்த நாளும் அமைகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஒவ்வொரு குழந்தையையும் அவர் இந்தியாவின் எதிர்காலமாகவே பார்த்தார்.
குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுகளை போன்றவர்கள், அவர்களை மிகவும் கவனமாகவும்,அன்புடனும் நாம் பரமரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், நாளைய குடிமக்கள்” என்று நேரு ஒருமுறை அவருடைய உரையாடலில் கூறியிருந்தார். எனவே இவருடைய பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
0
Leave a Reply