25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


எத்தனையோ பறவைகள் இருக்க, மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும்?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எத்தனையோ பறவைகள் இருக்க, மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும்?

மகாளயபட்ச அமாவாசை அன்று காகத்திற்கு மட்டும் ஏன் உணவளிக்க வேண்டும் என மஹாபெரியவரிடம் கேட்டார் ஒருவர்.

"தன் குரலையே பெயராகக் கொண்டது காகம். 'மியாவ்' என கத்தும் பூனையையும், 'கிக்கி' எனக் கத்தும் கிளியையும் நாம் அப்படி அழைப்பதில்லை. 

ஆனால் 'கா' எனக் கத்தும் இதை மட்டும் 'காகம்' என்றே அழைப்பது ஏன் தெரியுமா.? கா' என்றால் 'காப்பாற்று'. அதற்கு உணவிடும் போது, 'கா... கா...' என சத்தமிடுகிறோம். அதாவது முன்னோரை அழைத்து எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். எங்கும் இருக்கும் பறவையான காகத்தை தேட வேண்டியதில்லை. அறிவும், அழகும் கொண்ட அப்பறவை அதிகாலையில் விழிப்பதோடு, நம்மையும் எழுப்புகிறது. 

அது ஒருபோதும் தனியாக உண்ணாது. உணவு கிடைத்தவுடன் மற்ற  காகத்துடன் பகிர்ந்துண்ணும். சூரியன் மறைந்ததும் இருப்பிடத்திற்கு சென்று  ஓய்வெடுக்கும். இரவில் (இரவு 7:00 மணிக்குப் பின்) உண்ணக் கூடாது என வேதம் அறிவுறுத்துகிறது. இதை நாம் கடைபிடிக்கிறோமா... இல்லையே... முன்னோரின் அறிவுரையை நமக்கு எடுத்துச் சொல்கிறது காகம்.

நாம் உணவிடும் போது காகம் மகிழ்கிறது. அது உண்பதைக் கண்டு நாமும் மகிழ்கிறோம். இந்நிலையில் 'இருவருமே கடவுள்' என்கிறது அத்வைதம். இப்படி தத்துவத்தையும் காகம் நமக்கு உணர்த்துகிறது. அதற்கு உணவிடச் சொன்ன நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News