25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


இயற்கை விவசாயம், யூடியூப் சேனல், திருக்குறள் கலக்கும் `குட்டி விவசாயி’ பவண்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை விவசாயம், யூடியூப் சேனல், திருக்குறள் கலக்கும் `குட்டி விவசாயி’ பவண்

தங்கள் குழந்தையை மருத்துவராகவோ, இன்ஜீனியராகவோ,தொழில்நுட்ப வல்லுனராகவோ, இன்ன பிற பணிகளுக்கோ உருவாக்கவேண்டும் என்ற கனவோடுதான் இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தை வளர்ப்பைச் செய்துவருகின்றனர். ஆனால், விவசாயத்தில் ஆர்வம் காட்டும் தங்கள் சின்னஞ்சிறு மகனின் விருப்பங்களுக்குத் துணைநின்று, அவனைச் சிறு உழவனாக்கி அழகு பார்த்து வருகின்றனர் தருமபுரியைச் சேர்ந்த பாலசுப்ரமணி - பிரியா தர்ஷிணி தம்பதி.

படிய வாரிய தலை, பளிச்சென்று வேட்டி, சட்டை தோளில் ஒரு பச்சைத்துண்டு, நெற்றியில் கருப்புப் பொட்டு ஆகியவற்றுடன் க்யூட்டான குட்டி விவசாயியாக உருவெடுத்து நிற்கும் இவர்களின் மகன் பவணை,‘சிறு உழவன் பவண்’ என்றே எல்லோரும் அழைக்கின்றனர். விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள, மூன்றாம் வகுப்புப் படிக்கும் இச்சிறுவன், நம் பாரம்பர்ய விதைகள் குறித்தும், விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் பல்வேறு மேடைகளில் பேசி வருகிறான்.`சிறு உழவன்’ என்ற பெயரில், பெற்றோர் துணையுடன் யூடியூப் சேனல் ஒன்றிலும் பேசி வருகிறது இந்தச் சுட்டி.

`“கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களைச் சந்தித்திருந்தோம். என் அப்பா ராஜாமணி, ஒரு விவசாயி. அதனால் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டு வரும்போதெல்லாம் விதைகளை வாங்கிக்கொண்டுவந்து தன் நிலத்தில் வைத்திருப்பார்.ஒருநாள், என் அப்பாவைப் பார்க்கச் சென்ற எங்கள் மகன், விளையாட்டுக்கு அங்கிருந்த காய்கறி விதைகளை எங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான். நாங்களும் அந்த விதைகளை வீணாக்காமல் சிறுசிறு குரோ பேக்குகளில்(Growbag) வைத்து வளர்க்கத் தொடங்கினோம். நாங்கள் அப்படி வீட்டிலேயே விளைவித்த காய்கறிகள் எங்களது தினசரித் தேவைக்கு மிகவும் உதவியாக இருந்தன.’நம்ம வீட்டுலேயே, நாமளே இவ்ளோ காய் விளைவிச்சிட்டோமா...’ என்று, அது என் மகனுக்கு மிகவும் ஆச்சர்யம் தந்தது. அறுவடை செய்த ஒவ்வொரு காயையை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான்’’ என்கிற இவர், இந்த நிகழ்வுதான், தன் மகனுக்கு விவசாயத்தில் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது என்கிறார்.

"மகனின் ஆர்வத்துக்கு நானும் கணவரும் துணை நின்றோம். சென்ற ஆண்டு, எங்கள் பகுதியில் உள்ள ஹரூர் என்ற ஊரில் விவசாயக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதற்கு நாங்கள் எங்கள் மகனை அழைத்துச் சென்றிருந்தோம். அங்கு விற்கப்பட்ட காய்கறி விதைகளை வாங்கிக்கொண்டுவந்தோம். இதற்கிடையில், என் தந்தையும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மகனிடம் நிறையப் பேசிவந்தார். நானும், வீட்டில் தோட்டம் போடும் முறை குறித்து அவனுக்கு நிறையக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன்.என் மகன்,’நாம யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்... நம்ம வீட்டுல, தாத்தா வயல்ல இருக்கிற செடி பத்தியெல்லாம் அதுல நான் பேசுறேன்...’ என்று ஓர் ஆர்வத்தில் கேட்டான். எங்களுக்கும் அந்த ஆர்வம் தொற்றிக்கொள்ள, ‘சிறு உழவன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினோம்.

ஹரூர்விவசாயக் கண்காட்சியில் நாங்கள்வாங்கிக்கொண்டு வந்த காய்கறிவிதைகளை, எங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாகக் கொடுத்தோம். ஆனால்,பலரும் அதை வீணாக்கியதுதெரிந்தது. எனவே, யாருக்குத்தோட்டம் போட விருப்பம்இருக்கிறதோ அவரது வீட்டிற்கேநேரடியாகச் சென்று இலவசமாகவிதைகளைக் கொடுத்து, தோட்டம்போடுவதற்கு உதவப் போவதாகச்சொல்லி, அதைச் செய்தோம்“என்று சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார் பிரியாதர்ஷிணி.கல்வி, விவசாயம் தமிழ்மொழி ஆகியவை குறித்து நிறைய உரைகள் நிகழ்த்துகிறான் பவண். அவற்றை, அவன் பெற்றோர் யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் இவன் பேசும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போதுமூன்றாம் வகுப்பு படித்துவரும்பவண், பள்ளி நிகழ்ச்சிகள், விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள்மற்றும் இயற்கை உணவுகள்சார்ந்த மேடை நிகழ்ச்சிகளில்கலந்துகொண்டு பல்வேறு உரைகளைவழங்குகிறான். மரபு விதைகளைப்பாதுகாக்கவேண்டியதன் தேவை குறித்தும்,விதை வங்கி அமைத்தல், மற்றும் அடுத்ததலைமுறைக்கு நஞ்சில்லா உணவுவழங்கவேண்டியதன் அவசியம் குறித்துஎல்லாம், தன் பெற்றோர்கொடுக்கும் குறிப்புகளை உயிரோட்டத்துடனும், உற்சாகத்துடனும் பேசிவருகிறான். தமிழகம் முழுவதிலும் உள்ள 215 பாரம்பர்ய நெல் வகைகளை அட்சரம் பிசகாமல் கடகடவெனச் சொல்லி கைதட்டல்களை அள்ளியிருக்கிறான். அதேபோல, விதை நெல்லானது எவ்வாறு பல வளர்ச்சிப் படிகளைக் கடந்து அரிசியாக உருவாகிறது என்பது குறித்து பவண் அளித்த உரை, பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இவனுக்கு,‘சமூக அச்சாணி’,‘வளரும் இமயம்’,‘சமூக சேவகர்’ போன்ற பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News