25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


வெண்டைக்காய் சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண்டைக்காய் சாகுபடி

குழந்தைகளுக்கு வெண்டைக்காய் சார்ந்த உணவுகளை அதிக அளவில் பெற்றோர் வழங்குகின்றனர்.சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் பலரின் உணவு பட்டியலில் முதலாவதாக இருப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கால்சியம், புரதம், அயன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்துக்கள். தோட்டக்கலை பயிரான வெண்டைக்காய் விவசாயத்தில் பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் சிமிழி கிராமத்தை சேர்ந்த விவசாயி கூறுகையில்,“பல ஆண்டுகளாக தோட்டக்கலை பயிர்களான கத்திரி, வெண்டை சோளம், உள்ளிட்டவைகளை கோடை கால பயிர்களாக பயிரிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் இந்த ஆண்டு கலை வெட்டுதல், உரம் வைத்தல் உள்ளிட்டவையோடு சுமார்20,000 ரூபாய் செலவில் காய்கறிகள் சாகுபடி செய்திருக்கிறேன்.

சுமார்40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.3 மாத காலம் மட்டுமே பயிர் சாகுபடி செய்யப்படும். நேரடியாக நானே சென்று விற்பனை செய்து வருகிறேன்.குறைந்தஅளவுபயிரிடப்பட்டுள்ளதால் பராமரிப்பு பணியை நானே மேற்கொண்டு வருகிறேன். வெண்டைக்காய் அறுவடை காலமானது 30 முதல் 40 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடும்.

நல்ல வளமானதாகவும், பசுமையானதாகவும் இருக்கும். அதேபோல் அதிகளவிலான உரங்கள் பூச்சிக்கொல்லிமருந்துகள்பயன்படுத்துவதில்லை. டிஏபி,யூரியா, பொட்டாஷ் போன்ற அடி உரங்கள் மட்டும் வைக்கப்பட்டு வாரணைக்கப்படுகிறது. பூச்சி தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்ற பஞ்சகாவியம் கால்நடைகளின் கோமியம் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறது.

பூச்சி தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது மட்டும் ஏதேனும் ஒரு மருந்து மட்டும்கடைசிநேரங்களில்பயன்படுத்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.வெண்டைக்காய் சாகுபடி முறையான கவனிப்பு இருந்தால், குறைந்த நாட்களிலேயே பெருமளவில் லாபம் கிடைப்பதாக திருவாரூர் விவசாயி தெரிவிக்கிறார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News