உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10 ஆயிரம் முகாம்கள் பயனாளிகள் மற்றும் புதிய சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் (04.02.2026) நடைபெற்ற அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 1533 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்படி, வருவாய்த்துறை சார்பில் 500 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 75 இலட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 600 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 169 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும், தாட்கோ மூலம் 46 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலும்,மாவட்ட தொழில்மையம் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.43 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.37 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழிலாளர் நலவாரியம் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.9,600/- மதிப்பிலும்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 11 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.74 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், 8 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், மின்சாரத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டைகளையும்என ஆக மொத்தம் 1533 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்ஃபான்,I A S அவர்கள், சீர்மரபினர் நலவாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன் அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply