ரோஸ்மேரி வேர் நாற்றுகளை ஜூன். ஜூலை மற்றும் செப்.. அக்டோபரில் மானாவாரி பயிராக கடல் மட்டத்தி லிருந்து 900 மீட்டருக்கு மேல் உள்ள மலைப் பிரதேசங்களில் நடவு செய்யலாம். ஒருமுறை நடவு செய்தால்12 ஆண்டுகள் வரை பலன் தரும் என்பதால் வணிகப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.நிலத்தை இரண்டு முறை உழ வேண்டும்.2வது உழவின் போது எக் டேருக்கு50 டன் மட்கிய தொழுஉரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு ஆகி யவற்றை மண்ணுடன் கலக்க வேண் டும். 30 செ.மீ உயரம், 1.5 மீட்டர் அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து ஒரு ஏக்கருக்கு 20ஆயிரம் நாற்றுகள் நடலாம். நாற்று நடும்போது ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை மண்ணில் இட வேண்டும்.ரோஸ்மேரி செடிகள் பூப்பதற்கு முன்10 முதல்15 செ.மீ நீளம்' கொண்ட தண்டுகளை வெட்டியெ டுத்து நுனி இலைகளைத் தவிர மற்ற இலைகளை அகற்ற வேண்டும்.அவற்றை உயிர் உரத்தால் நாற்று நேர்த்தி செய்த பின் சிறு பாலித்தீன் பைகளில் நடவு செய்து நிழலான பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும். இரு மாதங்களில் நாற்றுகள் வேர் விட்டு நடவுக்கு தயாராகிவிடும்.இவற்றை வரிசைக்கு வரிசை45 செ.மீ, செடிக்குச் செடி45 செ.மீ இடைவெளியில் நடவேண்டும். இது வறட்சியை தாங்கும் என்றாலும் வறண்ட நேரத்தில் நீர் பாய்ச்சினால் பச்சை இலை மகசூல் அதிகமாக கிடைக்கும்.நட்டு ஒரு மாதம் கழித்து மண்ணை கொத்தி களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை களை எடுக்க வேண்டும்.நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியா, அசோஸ் பைரில்லம் உயிர் உரங்களை ஏக்கருக்கு 2 கிலோ எடுத்து தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 2 மாதங் களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா 3 சதவீத கரைசலை தெளித்தால் மகசூல் அதிகரிக்கும். பஞ்சகாவ்யா3 சத கரைசலை இலைவழி தெளிப்பு வருடத்திற்கு5 முறை10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். தசகாவ்யா 3 சத கரைசலை வருடத் திற்கு 3 முறை தெளிக்க வேண்டும். மண்புழு மட்கு வடிநீர் 10 சத கரை சல் வருடத்திற்கு 3 முறை இலைவழி தெளிப்பு மூலம் ஒரு மாத இடைவெளி யில் தெளிக்க வேண்டும்.ரோஸ்மேரி செடி பூக்கும் சமயத்தில்30 முதல்35 செ.மீ நீளம் கொண்ட பூக்கும் தருணத்தில் உள்ள இலையுடன் கூடிய மேல் தண்டுகளை அறுவடை செய்ய வேண்டும். தண்டுப்பகுதியில் இருந்து ரோஸ்மேரி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. நாற்றுகள் நட்ட 215 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின் நான்கு மாத கால இடைவெளியில் ஆண்டுக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம்.
சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும்.இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.இந்தியாவில் ரஜினிகாந்தா வருடத்திற்கு20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினம் பூக்கும் தாவரமாகும்.ப்ரஜ்வல், மெக்ஸிகன் சிங்கிள்,பியர்ல்டபுள்,வைபவ்,சுவாளினி,ஸ்ரீகார் போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன்,ஜூலை மாதங்கள் ஆகும்.நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது.மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.தேர்வு செய்த நிலத்தில்2 டன் தொழுவுரத்தை இட்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும்.பிறகு,150 கிலோ வேப்பம் பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவி,உழவு செய்ய வேண்டும்.அதன் பின்3 அடி அகலம்,முக்கால் அடி உயரத்தில் தேவைக்கேற்ற நீளம் கொண்டதாக ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.எக்டருக்கு1,12,000 கரணைகள் தேவைப்படும்.கரணைகளை அறுவடை செய்து30 நாட்கள் வைத்திருத்த பின்பே நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.நடவிற்கு முன்பு 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம்/ லிட்டர்)மூழ்கச்செய்து பின்பு கரணைகளை நடவு செய்ய வேண்டும்.தயார் செய்துள்ள பார்களில்25 முதல்30 கிராம் எடையுள்ள கரணைகளை45x20 செ.மீ இடைவெளியில்25 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர்விட வேண்டும்.பிறகு,நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம்.ஆனால் சம்பங்கி வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது.அதனால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து,தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு பாசனத்தின் போதும் 150 லிட்டர் இயற்கை உரமான அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு செடியின் அருகிலும் மண்வெட்டியால் பறித்து, செடிக்கு ஒரு கிலோ என்கிற கணக்கில் ஆட்டு எருவை வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும். மாதம் ஒரு முறை25 கிலோ வேப்பம்பிண்ணாக்கு,50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கி.கி தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட்,80 கி.கி சாம்பல் சத்து தரவல்ல135 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.சிறிய செடியாக இருக்கும்பொழுது10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். பெரிய செடியாக வளர்ந்த பின் களை அதிகமானால் எடுக்க வேண்டும்.இதில் அதிகமாக நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை. இதில் காணப்படும் ஒரே பிரச்சனை நூற்புழுதாக்குதல் தான்.நூற்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும் அல்லது கார்போஃப்யூரான் குருணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.கரணைகள் முளைத்த பின்பு80 முதல்95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்களை நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும். தினசரி சந்தையில் விற்பனை செய்யலாம். பூக்களின் விலை குறையும் போது சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு கொடுக்கலாம்.ஒரு எக்டருக்கு 14 முதல் 15 டன் மலர்கள் வரை கிடைக்கும்.
நமதுவீட்டு மாடியில் நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளைபயிர் செய்யலாம். இவ்வாறுபயிர் செய்வதினால் நமக்கு உடல்நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்தகாய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவேநம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.GrowBags அல்லதுThotti, அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.நாற்றுகளை உருவாக்குவதற்கான குழித்தட்டுகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.தேர்வு செய்யும் பை அல்லது தொட்டியானது10 கிலோ கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும். அதில்8 கிலோ வரை மண், மணல், தென்னை நார் கழிவு, மட்கிய குப்பை ஆகியவற்றை நிரப்பி தொட்டியை ஆற விட வேண்டும்.நாற்றுகளை உண்டாக்க குழி தட்டில் தென்னை நார்க் கழிவுகளை நிரப்ப வேண்டும். அதன் அடியில் ஒரு துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.தரமான விதைகளை தேர்வு செய்து குழி தட்டுகளில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.தயார் செய்துள்ள தொட்டிகளில் 20 நாள் வயதான நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.நாற்று நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான, வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்கும்போது பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இதனை வலை கட்டி வளர்க்கலாம். இவ்வாறு வலை கட்டுவதால் சூரிய ஒளியானது குறைந்த அளவே படும். முழுவதும் நிழல்,பாங்கான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பஞ்சக்காவ்யா உரத்தை தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாம்.இயற்கை பூச்சி விரட்டிகளான கற்றாழை சாறு, பூண்டு கரைசல் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு30 மி.லி தெளித்து வர நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.120 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும்ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தர்பூசணி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.GrowBags அல்லதுThotti. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்,பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பு செய்ய வேண்டும்.இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு 3 விதைகள் வரை ஊன்றலாம்.விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும்.அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். இந்த பந்தல் மற்ற காய்கறி செடிகளுக்கு நிழலாகவும் பயன்படும்.மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இதன் காய்கள் அதிக எடை அளவு கொண்டதால் பந்தல் உறுதியானதாக இருக்க வேண்டும். இலையெனில் சுவற்றின் மீதும், தரையிலும் கூட படர விடலாம்.வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.பஞ்சகாவ்யா50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.காய்களை சரியான பருவம் பார்த்து அறுவடை செய்ய வேண்டும்.
நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம்.இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும்.எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வெள்ளரிக்காய் பயிரிடும் முறை.தேவையான பொருட்கள் - GrowBags அல்லதுThotti, அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்ப எண்ணெய், பஞ்சகாவ்யா.விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்,பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.வெள்ளரி விதைகளை விதைப்பதற்கு தொட்டியில் அல்லது பைகளில் தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும்10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.இது படரும் கொடி வகை என்பதால்3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.நல்ல தரமான, ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும்.2 முதல்3 விதைகள் வரை ஊன்றலாம்.விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும், நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை2 மில்லி என்ற அளவில்1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக பக்கக்கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். வாரம் ஒருமுறை மண்ணை கிளறி விட வேண்டும்.பஞ்சகாவ்யா50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதில்60 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்களை இளம்பிஞ்சு பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
சூரிய ஒளி நேரடியாகப் படும் இடம் (கிழக்கு/வடக்கு), தினமும் நீர் ஊற்றுதல் மற்றும் செழிப்பாக வளர பால் காய்ச்சிய பின் மீந்த தண்ணீர் அல்லது இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் அவசியம். செடியின் நுனிகளை அவ்வப்போது கிள்ளி விடுவது அடர்த்தியாக வளர உதவும்; மண்ணில் ஈரப்பதம் அவசியம். துளசிச் செடி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்:இடம்: சூரிய ஒளி நன்றாகப் படும் இடத்தில் (வடகிழக்கு, வடக்கு அல்லது கிழக்கு திசை) துளசிச் செடியை வைப்பது சிறந்தது.மண் மற்றும் தொட்டி: வடிகால் வசதியுள்ள தொட்டியில், செம்மண் கலந்த மண்ணில் நட வேண்டும்.நீர்: தினமும் நீர் ஊற்ற வேண்டும், ஆனால் தொட்டியில் நீர் தேங்கக் கூடாது.உரம்: பால் காய்ச்சிய பின் மீந்த நீரைக் குளிர்வித்து வாரத்திற்கு ஒருமுறை ஊற்றினால் துளசி செழிப்பாக வளரும்.பராமரிப்பு: துளசிச் செடியின் நுனிகளைக் கிள்ளி விடுவதன் மூலம் (Pinching) அது அடர்த்தியாகவும், செழிப்பாகவும் வளரும்.காய்ந்த செடியை புதுப்பித்தல்: செடி காய்ந்து போனால், காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு, முறையாக நீர் மற்றும் உரம் கொடுத்து வந்தால் 30 நாட்களில் மீண்டும் துளிர்க்க வைக்கலாம். ஆன்மீக/வாஸ்து குறிப்பு:துளசிச் செடியை வீட்டில் வைப்பது நேர்மறை ஆற்றலை உண்டாக்கும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வீட்டின் தொட்டி அல்லது நிலத்தில் எளிதாக வளர்க்கக்கூடிய மருத்துவக் குணம் கொண்ட மூலிகைக் கொடியாகும். விதைகள் அல்லது தண்டுப் பகுதி மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, நல்ல சூரிய ஒளி மற்றும் ஈரப்பதமான மண்ணில், படர்வதற்கு ஆதரவு (பந்தல்) கொடுத்து வளர்க்க வேண்டும். சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்து. தூதுவளை வளர்ப்பு முறைகள்:இது அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடியது, குறிப்பாக வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது கலப்பு மண் ஏற்றது.. இதற்கு நல்ல வெயில் தேவை.நன்கு காய்ந்த பழங்களில் உள்ள விதைகளை சேகரித்து, தொட்டியில் மண் நிரப்பி தூவி, சிறிதளவு மண்ணால் மூடி தண்ணீர் தெளித்து வளர்க்கலாம். முதிர்ந்த தண்டுப் பகுதியை வெட்டி, மண்ணில் நட்டு வைப்பதன் மூலமும் எளிதாக வேர் பிடித்து வளரும்.தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது.இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது என்பதால், நன்கு படர்வதற்கு கம்பிகள் அல்லது குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து வளர்ப்பது நல்லது. இயற்கை உரங்களான மண்புழு உரம் அல்லது தொழு உரம் மாதத்திற்கு ஒருமுறை இடுவது இலைகளின் வளர்ச்சிக்கு உதவும். தூதுவளையின் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது, இது கால்சியம் சத்து நிறைந்தது.
சூரிய ஒளி (தினமும் 5-6 மணிநேரம்), நன்கு வடிகால் வசதியுள்ள மண் மற்றும் சீரான நீர் பாய்ச்சுதல் அவசியம் பதியன் மூலம் (cuttings) எளிதாக வளர்க்கலாம், வெள்ளைப்பூச்சி தாக்கினால் இயற்கை உரம் கொடுத்து பராமரிக்கலாம். செம்பருத்திச் செடி வளர்ப்பு முறைகள்:மண் தேர்வு: செம்பருத்தி செடிக்கு மண்வளம் முக்கியம். செம்மண் அல்லது தொட்டி மண் கலவையில், மண்புழு உரம் கலந்து நடலாம்.சூரிய ஒளி: செடிக்கு நல்ல சூரிய ஒளி தேவை, குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரம் வரை வெயில் படும் இடத்தில் வைக்க வேண்டும். நிழலில் இருந்தால் பூக்கள் பூக்காது.நீர் பாய்ச்சுதல்: மண்ணின் மேல் பகுதி காய்ந்ததும் நீர் ஊற்ற வேண்டும். அதிகப்படியான நீர் வேர் அழுகலை உண்டாக்கும்.பதியம் போடுதல்: செம்பருத்தியை கிளையை வெட்டி, பதியன் (Cutting) மூலம் எளிதாக வளர்க்கலாம்.பூச்சி கட்டுப்பாடு: வெள்ளைப்பூச்சி (Whitefly) மற்றும் மாவுப்பூச்சி (Mealybug) தொல்லை இருந்தால், வேப்ப எண்ணெய் அல்லது சோப்பு நீர் தெளிக்கலாம்.உரமிடுதல்: பூக்கள் அதிகமாக பூக்க, மாதம் ஒருமுறை தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம்.கத்தரித்தல் (Pruning): செடியை அடிக்கடி கத்தரித்து விடுவதன் மூலம், நிறைய கிளைகள் தோன்றி, அதிக பூக்களைப் பெறலாம். இந்த எளிய முறைகளைப் பின்பற்றி ஆரோக்கியமான செம்பருத்திச் செடியை வளர்க்கலாம்.
கற்பூரவல்லி செடியை தண்டு குச்சிகள் (cuttings)மூலம் எளிதாக வீட்டில் வளர்க்கலாம். இது நடுத்தர சூரிய ஒளி மற்றும் மிதமான நீர்ப்பாசனத்தை விரும்பும் ஒரு புதர்ச் செடியாகும். தொட்டியில் வளர்க்கும்போது, வளம்மிக்க மண் மற்றும் நல்ல வடிகால் வசதி அவசியம். இது இருமல், சளி மற்றும் செரிமானத்திற்கு உதவும் ஒரு சிறந்த மூலிகைச் செடியாகும். கற்பூரவல்லி செடி வளர்ப்பு முறைகள்: சூரிய ஒளி நன்றாகக் கிடைக்கும் இடம் (நேரடி சூரிய ஒளி அல்லது அரை நிழல்) சிறந்தது. மண் வளம் மிக்கதாகவும், தண்ணீர் தேங்காதவாறும், வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும்.ஒரு சிறிய தண்டு பகுதியை வெட்டி, மண்ணில் நட்டு வைத்தால், அதுவே நன்கு புதர்போல வளரும் . மண் காய்ந்ததும் தண்ணீர் ஊற்றவும். அதிகப்படியான தண்ணீர் வேர் அழுகலை உண்டாக்கும். அவ்வப்போது கிளைகளை வெட்டி விடுவதன் (Pruning) மூலம் செடி புதர்போல அடர்த்தியாக வளரும். இயற்கை உரங்களை (மண்புழு உரம், தொழு உரம்) அவ்வப்போது மண்ணில் சேர்த்து வரலாம். இந்த மருத்துவக் குணமிக்க செடி, ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய ஒன்றாகும்.
(Green Chilli Farming in Tamil) வீட்டில் தொட்டியிலோ அல்லது நிலத்திலோ எளிதாகச் செய்யலாம். நன்கு காய்ந்த மிளகாய் விதைகளைத் தேர்ந்தெடுத்து, மணல் மற்றும் தொழு உரம் கலந்த மண்ணில் நாற்று வளர்த்து, 30-35 நாட்களில் நடவு செய்ய வேண்டும். தினசரி நீர், நல்ல சூரிய ஒளி மற்றும் 2-3 மாதங்களில் அறுவடை செய்யலாம். பச்சை மிளகாய் வளர்ப்பு முறை ):மண் மற்றும் தொட்டி தேர்வு: வடிகால் வசதியுடன் கூடிய தொட்டி அல்லது நிலத்தைத் தேர்வு செய்யவும். மிளகாய்க்கு வளமான, காற்றோட்டமான மண் தேவை.விதைகள் நடவு: காய்ந்த மிளகாயிலிருந்து விதைகளை எடுத்து, நேரடியாகவோ அல்லது நாற்றங்காலிலோ விதைக்கலாம். மணல் மற்றும் மக்கிய தொழு உரம் கலந்த மண்ணில் விதைகளை விதைத்து, லேசாக நீர் தெளிக்க வேண்டும்.நாற்று வளர்ப்பு: 5-7 நாட்களில் விதைகள் முளைக்கும். 30-35 நாட்களில் செடிகள் நடவு செய்யத் தயாராகும்.நடவு மற்றும் பராமரிப்பு: நாற்றுகளை நடவு செய்து, வேர் பகுதியில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு முறை நீர் ஊற்றினால் போதும்.சூரிய ஒளி: மிளகாய் செடிக்கு தினமும் குறைந்தது 4-5 மணிநேரம் நல்ல சூரிய ஒளி தேவைப்படுகிறது.உரம்: தொழு உரம், பஞ்சகவ்யம் அல்லது மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்.அறுவடை: நடவு செய்த 60-70 நாட்களில் (சுமார் 2-3 மாதங்களில்) செடி காய்க்கத் தொடங்கி, பச்சை மிளகாயை அறுவடை செய்யலாம். பச்சை மிளகாய் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், தினசரி சமையலுக்குத் தேவையான புத்துணர்ச்சியான மிளகாயைப் பெறலாம்.