பச்சை பயறு சுண்டல்
தேவையான பொருட்கள்
பச்சைபயறு- 2கப்
தேங்காய்துருவல் -அரைகப்
கடுகு -கால்ஸ்பூன்
உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன்
பெரியவெங்காயம்-1
வரமிளகாய்-2
கருவேப்பிலை-1கொத்து
உப்புத்தூள்-தேவைக்கு
சமையல் எண்ணெய் தாளிக்க
செய்முறை-
முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து ,நன்கு எல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும். பச்சை பயறு சுண்டல் ரெடி.
0
Leave a Reply