வெஜிடபிள் சூப்.
தேவையான பொருட்கள்:
1கப் துருவிய கேரட்,
1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்,
1 கப்முட்டைக்கோஸ்,
1 கப்வெங்காயம்,
1ஸ்பூன் வெண்ணை,
2ஸ்பூன்கான்பிளவர் மாவு,
2ஸ்பூன் மிளகு சீரகம்,
5 பல் பூண்டு,
தேவைக்கு உப்பு,
தேவைக்கு தண்ணீர்.
செய்முறை:
முதலில் காய்கறிகளை தோல் சீவி நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின்பு மிளகுத்தூள் உப்பு பூண்டு கான் மாவுஎடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முதலில் நான் ஸ்டிக் பேன் சூடானவுடன் வெண்ணை சேர்க்கவும் பின்பு பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின் வெங்காயத்தை வதக்கவும்.
பின்பு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின்பு சிறிது நீர் சேர்க்கவும்.கான்பிளவர் மாவு கலக்கிஎடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கார்ன் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி இரண்டு நிமிடம் மூடி வைத்து இறக்கவும்.பின்பு மிளகுத் தூளும் உப்பும் சேர்த்து இறக்கி வைத்து பரிமாறவும். இதமான மழைக்கு சுவையான வெஜிடேபிள் சூப் ரெடி
0
Leave a Reply