சுக்கு - துளசி காபி!
தேவையானவை:
தனியா- ஒரு கப்,
சுக்குத்துாள்- அரை கப்,
மிளகு-கால் கப்,
ஏலக்காய் - 10,
துளசி இலைகள் - ½ கப்.
செய்முறை:
வெறும் வாணலியில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள்
ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம்.
0
Leave a Reply