மிளகு ரசம்
தேவையான பொருட்கள்:
1டீஸ்பூன் மிளகு
1டீஸ்பூன் சீரகம்
1டீஸ்பூன் துவரம் பருப்பு
2தக்காளி
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி
1/4 கப் சாம்பார் வெங்காயம்
5 பல் பூண்டு
2 மிளகாய் வற்றல்
ஒரு சிறிய துண்டு வெல்லம்
.உப்பு
பெருங்காயத்தூள்
தாளிக்க :
1டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
2/4டீஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை,மல்லி இலை
செய்முறை
மிளகு ரசம் வைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
.தாளிக்க வெங்காயம் பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தக்காளி, சாம்பார் வெங்காயம், பூண்டு,வற்றல், கருவேப்பிலை எல்லாம் சேர்த்து அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வற்றல், தட்டி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த மிளகு மசாலா விழுதை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து, வெல்லம், பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதி வந்து பச்சை வாசம் போனதும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கினால் ரசம் தயார்.தயாரான ரசத்தை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான மிளகு ரசம் சுவைக்கத் தயார்.
இந்த மிளகு ரசம் சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சூப் போல் பருக மிக மிக சுவையாக இருக்கும்.
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும்
சுவையாக இருக்கும்.
0
Leave a Reply