25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


தெரிந்து கொள்ளுங்கள்

Dec 06, 2025

ஒரு CLEANING டிப்ஸ்!

சில நேரம் வெள்ளை துணியில் அழுக்கு அதிகமாக இருக்கும் எவ்வளவு சோப்பு போட்டாலும் போகாது இது ஈஸியாக அழுக்கு போக நன்றாக சுடு தண்ணீரை ஊற்றி அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கொஞ்சம் வினிகரையும் ஊற்றி ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து சோப்பு போட்டு துவைத்தால் ஈஸியாக அழுக்கு போய் துணி வெள்ளையாக பளிச்சென மின்னும் பழுப்பு நிறமும் போய்விடும் இதை வெள்ளை துணிக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.கிட்சன், பாத்ரூம் பளபளக்க...வீட்டில் உள்ள சிங்க் குழாய்கள், பாத்ரூம் குழாய்களில் எலுமிச்சை சாற்றை தடவி ஊற வைத்து தேய்த்தால் எளிதில் அழுக்குகள் நீங்கி குழாய்கள் பளபளக்கும்.1 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யில், அரை மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின் அதை பருத்தி துணி கொண்டு பர்னிச்சர்களை துடையுங்கள். இது படிந்திருக்கும் கறைகளை நீக்கி கரையான் தொல்லைகள் இல்லாமல் பராமரிக்கும்.

Dec 06, 2025

இந்தியர் ஆப்பிள் ஏ.ஐ. துணை தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள்,. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத்துறையில் கோலோச்சி வரும்நிலையில் போட்டியை சமாளிக்க ஏ.ஐ. துறையை மேம்படுத்தும் கட்டாயத்தில் ஆப்பிள் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஏ.ஐ. பிரிவுக்கான துணை தலைவராக இருந்த ஜான் ஜியேந்திரா வெளியேறியதை தொடர்ந்து புதிய துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ,பெங்களூருவை சேர்ந்த இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்த அமர் சுப்ரமண்யா நியமிக்கப்பட்டுள்ளார்..

Dec 05, 2025

பகலில் குட்டித்தூக்கம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும்.

உருகுவே நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  பகலில் குட்டி தூக்கம் என்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருவதாக தெரியவந்து உள்ளது. பகலில் தூங்குவது. உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்து உள்ளது இந்த ஆய்வுக்காக 40 முதல் 69 வயதுடைய 35 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களிடம் பகல் நேர தூக்கம் மூளை ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளை கண்டறிய 'மெண்டலியன் ரேண்டமை சேஷன்' எனப்படும் ஒரு நுட்பம் பயன்படுத்தப்பட்டது.வயதாகும்போது மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க பகல் நேர குட்டி தூக்கம்,  உதவுகிறது என்று தெரியவந்தது. இதே போல 'டெர்சிமோனியன் லைர்ட்' என்ற நுட்பத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 291 விளையாட்டு வீரர்களிடம் ஆய்வு நடந்தது. இரவு தூக்கத்திற்கு பிறகு, பகலில் அரை மணி நேரம் குட்டித்தூக்கம்போடுவது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, உடல், மனதில்ஏற்படும் சோர்வு உணர்வை குறைத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாககண்டறியப்பட்டது. இந்த 2 ஆய்வு முடிவுகளின்படி  ஆராய்ச்சியாளர்கள் ,பகலில் 30 நிமிடங்கள் குட்டித்தூக்கம் தூங்குவது என்பது வயதாகும் காலத்தில் மூளை சுருக்கத்தை தடுத்து, நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று தெரிவித்து உள்ளனர். 

Dec 05, 2025

புற்றுநோய்க்கான இரண்டு முக்கிய மருந்துகள்.

புற்றுநோய்க்கான இரண்டு முக்கிய மருந்துகள் ட்ரா மெடனிப், ராபாமை சின். இரண்டையும் கலந்து உருவாக்கப் பட்ட புதிய மருந்தை எலிகள் மீது விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்த னர். எலிகளின் ஆயுள் 30 சதவீதம் அதிகரித்தது. மனிதர்களுக்கு இது உதவுமா என்ற கோணத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Dec 04, 2025

“ Button “பொத்தான்கள்  .

நமது ஆடைகளில் பொத்தான்கள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ,சிறப்பிடம் பிடிக்கின்றன. அந்த வகையில் பொத்தான்கள் கடந்து வந்த வரலாறு பொத்தான்களின் பயன்பாடு கி.மு. 300-ம் ஆண்டுகளில் இருந்து தொடங்கிவிட்டது. 13-ம் நூற்றாண்டுவரை துளை இல்லாத பொத்தான்களே பயன் படுத்தப்பட்டு வந்தன.பொத்தான்கள் பணக்கார மக்கள் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மக்களுடைய பயன் பாட்டுக்கும் வந்தது.பிரான்சிஸ் என்ற மன்னன் தனது சட்டையில் 13 ஆயிரத்து 600 தங்க பொத்தான்கள்அடங்கிய ஆடை உடுத்தியதாக குறிப்பு உள்ளது.படைவீரர்களின் சீருடையில் அரசன், அரசியின் உருவம் இடம் பெற்ற பொத்தான்கள் இருந்தன.தொழிற்புரட்சிக்கு பின்னர் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் பொத்தான்கள் தயாரிக்கப்பட்டன. முதன் முதலில் பொத்தான்களை  இங்கிலாந்தைசேர்ந்த மேத்யூ பவுல்டன் என்பவர் தான் இயந்திரத்தில் தயாரித்தார்.

Dec 02, 2025

மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக, மனிதனுக்கு உதவிய கழுதைகள்.

 "காடுகளில் வேட்டையாடி உணவு தேடிய மனித இனம் தனது வேலைகளை எளிதாக்க வசதியாக மனிதனுக்கு உதவியாக சில விலங்குகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். அதில், மனிதனையும், மனிதனின் உடைமைகளையும் ஊர் ஊராக தூக்கி சுமந்த கழுதைகளின் வரலாறு மிகப்பழமையானது. கழுதைகள் மதிப்பு மிக்க ஒரு விலங்காக இருந்தன .பண்டைய காலத்து நாகரிகங்களில் குதிரைகளை பழக்கும் முன்பு, நாட்டின்ஆட்சியாளர்கள் கழுதைகள் மீது அமர்ந்து நகர் வலம் வந்தனர் .கழுதைகள் பூட்டிய வண்டிகளில் பயணித்தனர். கழுதைகள்இந்த உலகத்தில் எப்படி வந்தன என்று அதன் மரபணுவை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிசெய்தனர். கி.மு.3000-ம் ஆண்டில் இருந்தே கழுதைகள் மனிதனுடன் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படுகின்றன. இன்றைய கழுதைகள் ஆப்பிரிக்க கழுதையின் இரண்டு கிளை இனங்களில் ஒன்றான ஈக்வஸ் ஆப்ரிகானஸ்' என்ற குடும்பத்தை சேர்ந்த நுபியன் கழுதை வகை ஆகும் என கண்ட றிந்தனர்.. பண்டைய எகிப்திய மன்னருடன் புதைக்கப்பட்ட கழுதைகளின் எலும்புக்கூடு புதை படிமத்தில் இருந்து இது தெரியவந்தது. கழுதையின் உழைப்பு இன்றும் தொடர்வதற்கு ஆதாரமாக சகாரா பாலைவனம் வழியாக பயணிக்கும் நாடோடி மக்கள் இன்றும் கழுதைகளை பயன்படுத்தி வருகின்றனர். கி.மு. 200-ம் ஆண்டு முதலே ரோமானியராணுவத்தால் ,ராணுவத்திற்கு மிக முக்கியமான வேலை செய்யும் விலங்குகளாக ,கனரக பீரங்கி வண்டிகளைஇழுக்க கழுதைகள்  பயன்படுத்தப்பட்டன. பேரரசர் அகஸ்டஸ் காலத்தில் ரோமானிய ராணுவத்தில் அரை மில்லியன் கழுதைகள் பணியாற்றின என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மலைப்பகுதி கிராமங்களில் சுமை இழுக்க கழுதைகள்  இன்றும் கூட அனைத்து நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது.

Dec 01, 2025

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீதா அம்பானி ஆடம்பர பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

நீதா அம்பானியின் ரூ.12 கோடி மதிப்புள்ள பேண்டம் ஆடம்பரத்தை மறுவரையறை செய்கிறது. நீதா அம்பானி, மீண்டும் ஒருமுறை ஆடம்பரத்தில் புதிய தரங்களை அமைத்துள்ளார்சமீபத்தில் தனது உயரடுக்கு கார் சேகரிப்பில்₹12 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஒரு அற்புதமான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்VIII நீட்டிக்கப்பட்ட வீல்பேஸைச் சேர்த்துள்ளார்.2023 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி பரிசளித்த கல்லினன் பிளாக் பேட்ஜுக்குப் பிறகு அவரது இரண்டாவது ரோல்ஸ் ராய்ஸ் - இந்த தனிப் பயனாக்கப்பட்ட பாண்டம்  அதன் தனித்துவமான இரண்டுதொனி இளஞ்சிவப்பு பூச்சுடன் கவனத்தை ஈர்க்கிறது.பாதி வெல்வெட் ஆர்க்கிட்டில் ஜொலிக்கிறது, அதே நேரத்தில் கீழ் உடல் ரோஸ் குவார்ட்ஸில் ஜொலிக்கிறது, தங்க முலாம் பூசப்பட்ட ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி சின்னத்துடன் மேலே உள்ளது.உள்ளே, நிதா அம்பானியின் முதலெழுத்துக்களான“NMA” ஹெட்ரெஸ்ட்களில் நுட்பமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளன, மேலும் வாகனம் உண்மையிலேயே தனிப்பட்ட தொடுதலுக்காக தனிப்பயன் டின்னர் பிளேட் சக்கரங்களைக் கொண்டுள்ளது.571bhp ஆற்றலை வழங்கும்6.75 லிட்டர் ட்வின்டர்போV12 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது,PhantomVIII ரோல்ஸ் ராய்ஸின் கையொப்ப சக்தி மற்றும் ஒப்பிடமுடியாத ஆறுதலின் கலவையை வழங்குகிறது.இந்த காரின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் அரிய நிறம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது, 2025 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்படும் சொகுசு கார்களில் ஒன்றாக அதன் நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.திகைப்பூட்டும் புதிய சேர்க்கையின் மூலம்,முழுவதும் நேர்த்தி, பிரத்யேகத்தன்மை மற்றும் சுய வெளிப்பாடு நீதா அம்பானியின் தனது ஆடம்பர பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

Dec 01, 2025

'ஹைனானியா மின்ஜெங்கி என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ள மீன்கள் .

 தென் கிழக்கு சீனாவில் ஆற்றில் வாழும் ஒரு புதிய மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.4 அங்குல நீளமுடைய இந்த மீன்கள் பெரிய கண்களும், மூன்று வரிசை பற்களும், பளபளப்பான வெள்ளி நிறச் செதில்களும் கொண்டுள்ளன. இதற்கு 'ஹைனானியா மின்ஜெங்கி என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Dec 01, 2025

OJ 287 கேலக்ஸி.

பூமியிலிருந்து 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில், கடக ராசி மண்டலத்தில்உள்ளது OJ 287 கேலக்ஸி. இதன் நடுப்பகுதியில் மிகப் பெரிய கருத்துளைகள் இருப்பதை ரேடியோ தொலைநோக்கியான ரேடியோ ஆஸ்ட்ரான் உதவியுடன் விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர்.

Nov 29, 2025

ஆண்டு வருமானம் ரூ.1,550 கோடி.. ஆனாலும் ஊபர் ஓட்டும் 86 வயது முதியவர். பிஜி நாட்டின் இந்திய வம்சாவளி தொழிலதிபரை பாராட்டி வருகின்றனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த 86 வயது தொழிலதிபர் ஒருவர் பிஜி நாட்டில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறார். 13 நகைக்கடைகள்,6 ரெஸ்டாரண்ட்,4 சூப்பர் மார்க்கெட் உள்பட பல தொழில்களை நடத்தி வரும் அவர் எந்த ஆடம்பரமும் இன்றி வாடகை கார்‛ஊபர்' ஓட்டி வருகிறார். கார் ஓட்டுவதன் பின்னணி குறித்து இந்திய தொழில் முனைவோர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் 1,100 கடல் மைல் தொலைவில் பிஜி (Fiji) என்ற தீவு நாடு அமைந்துள்ளது. சமீபத்தில் நம் நாட்டை சேர்ந்த தொழில் முனைவோர் நவ் ஷா பிஜி நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் ‛ஊபர்' வாடகை காரில் பயணித்தார். அப்போது அவரது காரை முதியவர் ஒருவர் ஓட்டினார்.இதையடுத்து நவ் ஷா அவரிடம் பேச தொடங்கினார்.‛‛கார் ஓட்டி கிடைக்கும் வருமானத்தை தினசரி செலவுக்காக பயன்படுத்துகிறீர்களா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு முதியவர் சொன்ன பதிலை கேட்டு அவர் வியப்படைந்தார். அதாவது அந்த முதியவர் நான் ஒரு தொழிலதிபர். ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வருமானம் ஈட்டுகிறேன் என்று சொல்ல நவ்ஷாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதுபற்றி அந்த தொழிலதிபர்,‛‛நான் ஒரு தொழிலதிபர். எனது கம்பெனி175 மில்லியன் டாலர் வருமானம்(இந்திய மதிப்பில் ரூ.1,500 கோடி) ஈட்டுகிறது. நான் கடந்த 10 ஆண்டுகளாக 24 பெண் குழந்தைகளுக்கான படிப்புக்கு உதவி செய்து வருகிறேன். ‛ஊபர்' ஓட்டி கிடைக்கும் பணத்தை வைத்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்கிறேன். எனக்கு3 மகள்கள். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்கினேன். தற்போது அவர்கள் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பிற பெண்கள் தங்களின் கனவுகளை நிறைவேற்ற உதவ வேண்டும் என்ற முடிவில் இதனை செய்து வருகிறேன்.எனக்கு சொந்தமாக13 நகைக்கடைகளை நடத்தி வருகிறோம்.6 ரெஸ்டாரண்ட், ஒரு பிஜி டைம்ஸ் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறோம்.4 சூப்பர் மார்க்கெட் உள்ளது. ஹோல்சேல் மற்றும் ரீடெயில் பெர்பியூம், மதுபானம் விற்பனையை நடத்தி வருகிறோம். இந்த தொழிலை நான் தொடங்கவில்லை. எனது தந்தை1929ல் தொடங்கினார்.அவர் இந்தியாவில் இருந்து வந்து5 பவுண்ட் வைத்து தொழில் தொடங்கினார். அதற்கு முன்பாக அவர் ஒரு கம்பெனியில் பணியாற்றினார். ஆண்டுக்கு15 பவுண்ட் சம்பளம் பெற்றார். அதில்5 பவுண்ட்டை சேமித்து தொழில் தொடங்கினார். அவர் தான் இந்த தொழில்களை தொடங்கினார்'' என்று கூறி நெகிழ வைத்தார்.இதையடுத்து நவ் ஷா, இப்போது20,30 வயதில் உள்ள இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு அந்த தொழிலதிபர்,‛‛முதலில் நீங்கள் உங்களுக்கு நேர்மையாக இருங்கள். அதன்பிறகு மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்க முடியும்'' என்று கூறினார். கார் ஓட்டியபடி அந்த தொழிலதிபர் சொன்னதை நவ் ஷா தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்க்கும் பலரும் பிஜி நாட்டின் இந்திய வம்சாவளி தொழிலதிபரை பாராட்டி வருகின்றனர்.

1 2 ... 27 28 29 30 31 32 33 ... 84 85

AD's