ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகருக்கும் வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கும் இடையேஉலகின் மிக நீளமான ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் பெயர் டிரான்ஸ்சைபீரியன் ரயில். ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து வட கொரியாவில் உள்ள பியாங்யாங் வரை ஓடும் இந்த ரயில்10,214 கி.மீ. ஆகும். மிக நீளமான பாதையில் ஓடும் இந்த ரயில்16 முக்கிய ஆறுகளை கடந்து87 நகரங்கள் வழியாக செல்கிறது. அதன் வழியில் காடும் வருகிறது. இந்த ஒரு வார காலப் பயணம் பயணிகளின் பொறுமையைச் சோதித்து பார்ப்பது மட்டுமின்றி அழகிய நிலப்பரப்புகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது. 1916-ல் தொடங்கப்பட்டது: டிரான்ஸ்-சைபீரியன் ரயில்வே 1916ல் தொடங்கப்பட்டது. டிரான்ஸ்சைபீரியன் ரயில்வே மாஸ்கோவிலிருந்து ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்த பாதை உலகின் இரண்டாவது நீளமான ரயில் பாதையாகும். இந்த வழித்தடத்தில் ஓடும் ரயில் மலைகள் மற்றும் காடுகளை கடந்துச் செல்கிறது. இந்த ரயில்பியோங்யாங்கில் இருந்து தொடங்கும் பயணம், வட கொரியாவில் இருந்து மாஸ்கோ, ரஷ்யா மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ஆகிய இடங்களுக்கு பயணிகளை கொண்டு வருகிறது. இங்கே இந்த ரயில் விளாடிவோஸ்டாக்கில் இருந்து மாஸ்கோ செல்லும் ரயிலுடன் இணைகிறது. பியோங்யாங்கில் இருந்து ரயிலில் ஏறிய பயணிகள் பெட்டியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பது சிறப்பு. இந்த ரயில் வட கொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு மாதம் இருமுறை இயக்கப்படுகிறது. இதேபோல், ரஷ்யாவிலிருந்து பியாங்யாங்கிற்கு மாதத்திற்கு நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாஸ்கோவிலிருந்து பியாங்யாங்கிற்கு ரயில் இல்லை.
எறும்பு இறையை தேடி செல்லும் போது வரிசையாகவே செல்லும். இதற்கு அவை வெளிப்படுத்தும்'பிரமோன்' வேதிப்பொருளே காரணம். இதன் வாசனையை வைத்தே இவை ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. இச்சமயத்தில் சில நேரம் முன்னால் செல்லும் எறும்பு வெளியேற்றும்'பிரமோன்' வேதிப்பொருள் வாசனை பின்னால் வரும் எறும்பை ஒழுங்காக சென்றடையவில்லை எனில், அவை தடம் மாறி ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருக்கும். இதைத்தொடர்ந்து வரும் எறும்புகளும் அந்த இடத்தை சுற்ற ஆரம்பித்து இறுதியில் அவை அனைத்தும் இறந்துவிடும். இந்நிகழ்விற்கு 'ஆன்ட் மில்' என பெயர்.
1 இரத்த அழுத்தம்: 120/802. துடிப்பு: 70 - 1003. வெப்பநிலை: 36.8 - 374. சுவாசம்: 12-165.ஹீமோகுளோபின் : ஆண்கள் (13.50-18),பெண்கள் (11.50-16)6. கொலஸ்ட்ரால் : 130-2007. பொட்டாசியம்: 3.50-58. சோடியம்:135 - 1459.ட்ரைகிளிசரைடுகள்: 22010. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்11 சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130),பெரியவர்கள்: 70 - 11512 இரும்பு: 8-15 மி.கி.13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 1100014, பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000
தொழில்நுட்ப (டெக்னிக்கல்) குருஜி- கௌரவ் சவுத்ரிதொழில்நுட்ப குருஜியின் மூளையாகவிளங்கும் கௌரவ் சௌத்ரியின்நிகர மதிப்பு சுமார்ரூ. 356 கோடி ஆகும்.
பல்வேறு சிறப்புகள் கொண்ட ராஜபாளையத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் பல்வேறு வகையான மூலிகைகள் உள்ளன. சஞ்சீவி மலை ராமாயண இதிகாசத் தில் அம்பு காயம் பட்டு உயிருக்கு போராடிய லட்சுமணனின் உயிரை காக்கும் பொருட்டு பர்வத மலையை அனுமன் தூக்கி வரும்போது வழியில் ஒரு சிறு துண்டு விழுந்த பகுதியே சஞ்சீவி மலை என்று அழைக்கப்படுவதாக கூறப்ப டுகிறது.கார்த்திகை தீப திருநாளில் இம்மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. அதோடு கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகள் மலையடிவாரத்தில் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. மழை இல்லாத வறட்சிக் காலகட்டங்களில் மழை வேண்டி இம்மலையின் உயரத்தில் இருக்கக்கூடிய உருண்டை பாறைக் கற்களை, கீழே உருட்டி விடுவதன் மூலமாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்றது. இதன் வாயிலாக, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக பதவியேற்றார். நரேந்திர மோடி மீதான அபிமானம். நம் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். முதலில் பிரதமர் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து. 30 கேபினட் அமைச்சர்கள். ஐந்து தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள், பதவியேற்றனர். நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், நிர்மலா சீதாராமன், அன்னபூர்னா தேவி ஆகியோர் கேபினட் அந்தஸ்து உடைய அமைச்சர்களாக பதவியேற்றனர். அனுப்ரியா படேல், ஷோபா கரந்தலாஜே. ரக்ஸா நிகில் கட்சே, சாவித்ரி தாக்குர், நிமுபென் பாமனியா ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஸ்வீடனில் விண்வெளியில் இருந்து விழுந்த அரிய விண்கல் தொடர்பான சட்டப் போராட்டத்தில், நில உரிமையாளருக்கு ஆதரவான முடிவு குழப்பத்தை அதிகரிக்கிறது.ஸ்வீடனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு,2020 நவம்பரில் விண்வெளியில் இருந்து விழுந்த விண்கல் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த இரும்பு விண்கல் தனியார் நிலத்தில் மீது விழுந்தது. அங்கு தான் ஒரு சிக்கல் உண்டானது.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விழுந்த இந்த விண்கல்லின் உரிமையாளர் யார் என்பது குறித்து நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்துள்ளது.விண்கற்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் பகுதியில் உள்ள பல கமெராக்கள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நீண்ட நீதிமன்றப் போராட்டம் தொடங்கியது.இந்நிலையில், வியாழன் அன்று இந்த வழக்கு மற்றொரு திருப்பத்தை எடுத்தது.விஞ்ஞானிகளுக்கு ஆதரவான முந்தைய தீர்ப்பை ரத்து செய்த, நீதிமன்றம் நில உரிமையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.இதனால், இப்போது புவியியலாளர்கள் இந்த வழக்கை ஸ்வீடனின் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.விண்கல் விழுந்த சில நாட்களுக்குப் பிறகு, புவியியலாளர் ஆண்டர்ஸ் ஜெட்டர்கிவிஸ்ட் அது முதல் முறையாக விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.நீண்ட தேடுதலுக்குப் பிறகு, இந்த 30 பவுன் துண்டு பாசியில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் மக்கள் அதிக சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். வெயிலில் இளைப்பாற ஃபேன், ஏசி, பிரிட்ஜ் போன்ற அதிகம் பயன்படுத்துவதால் மின்கட்டணம் உயரும். குறிப்பாக ஏசிபயன்பாடு மின் கட்டண உயர்வு முக்கியக் காரணமாக இருக்கும். : கோடைக்காலத்தில் எவ்வளவு நேரம் ஏசி ஓடினாலும் குறைவான ஈ.பி. பில்வருவதற்கு சில வழிகள் உள்ளன..தேவையற்ற நேரங்களில் கண்டிப்பாக ஏசியை ஆஃப் செய்ய வேண்டும். மெயின் சுவிட்சை அணைக்காமல், ரிமோட் மூலம் மட்டும் ஆஃப் செய்யக்கூடாது. பயன்படுத்தாத நேரத்தில் ஏசியின் மெயின் சுவிட்சை அணைத்து வைக்க வேண்டும்.ஏசியை சரியான வெப்பநிலை வைத்து பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக 24 டிகிரி வெப்பநிலையில் இருப்பது சரியாக இருக்கும். இதன் மூலம் 6 சதவீதம் வரை மின்சார பயன்பாடு குறையும்.ஏசியைநீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்துவிட்டு வெயில் காலம் வந்ததும் ஏசியை பயன்படுத்தும்போது, சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் மின்சாரச் செலவும் குறையும். ஏசியும் பழுது ஏற்படாமல் இயங்கும்.ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கக் கூடாது. இதனால், ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறி, அறை குளிர்ச்சி அடைய தாமதம் ஆகும். இதனால் மின் நுகர்வு அதிகரித்து மின்சாரக் கட்டணமும் கூடும்.ஏசியுடன் மின் விசிறியையும் பயன்படுத்தினால் அறை விரைவாகக் குளிர்ந்து விடும். ஏசியால் வரும் குளிர்ந்த காற்றை ஃபேன் அறை முழுவதும் பரப்பி வேகமாகக் குளிர்விக்கும். இதனால் ஏசி இயங்கும் நேரத்தைக் குறைக்கலாம்.இப்போது மின்சாரத்தைச் சேமிக்கும் இன்வெர்ட்டர் ஏசி விற்னைக்கு வந்துவிட்டது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதிக பராமரிப்புச் செலவு இல்லாத ஏசியை வாங்குவது நல்லது. ஏசியில் உள்ள வெவ்வேறு மோட்களை சரியாக பயன்படுத்தினாலும் ஓரளவு மின்கட்டணம் குறையும்.
மிக நீளமான பாதையில் ஓடும் ரயில்,16 முக்கிய ஆறுகளை கடந்து87 நகரங்கள் வழியாக செல்கிறது.இந்தியரயில்வேநமதுநாட்டின் லைஃப் லைன் என்று அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் அதிக நேரம் ஓடும் ரயில்கள் பட்டியலில் முதலிடத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்தான் .திப்ருகர்,கன்னியாகுமரி இடையே இயங்கும் இந்த ரயில்,4,234 கி.மீ. தூரத்தை75 மணி நேரத்திற்கும் மேலாக கடக்கிறது. இந்த நேரத்தில் இது9 மாநிலங்கள் வழியாக செல்கிறது.59 ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகிறது.ஆனால், உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க 7 நாட்கள் 20 மணி 25 நிமிடங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக நீண்ட காலமாகவே மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதனால் அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது3 ஆண்டுகளில் மேலும் புதிதாக20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை எங்கே வரும் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.இது தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல கட்சிகள் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறது. சுங்கச்சாவடிகள்:இந்த லோக்சபா தேர்தலில் கூட ஆளும் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து வருகின்றன. ஆனால்,இப்போது அதற்கு நேர்மாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 12 சுங்கச்சாவடிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறக்கப்பட்டன,தமிழ்நாட்டில் கடைசியாகத் திறக்கப்பட்ட சுங்கச்சாவடி என்றால் அது அவினாசி திருப்பூர் அவினாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை 381இல் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி. இது கடந்த மார்ச் 1ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள்:அதற்கு முன்பு மதுரை செட்டிகுளம் நத்தம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை785இல் உள்ள பரளி புதூர் சுங்கச்சாவடி கடந்த பிப்ரவரி8ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.அங்கே கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனம் ஒரு முறை செல்ல ரூ.180 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.மாநிலத்தில் வேறு எந்த சுங்கச்சாவடியிலும் இந்தளவுக்கு அதிக கட்டணம் இல்லை.உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச்6ஆம் தேதி இந்த சுங்கச்சாவடியை ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சூறையாடினர்.இப்படிப் பல இடங்களில் ஏற்கனவே சுங்கச்சாவடிகளுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும் போதிலும் புதிய சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் 6 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவுச்சாலை, விக்கிரவாண்டி- சோழபுரம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை36இல் தலா மூன்று சுங்கச்சாவடிகள் எனப் புதிதாக20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ளது.அடுத்த2 அல்லது3 ஆண்டுகளில் அந்த சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.2008இல் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் விதிகள் படியே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,"இதில் நீங்கள் நெடுஞ்சாலைகள் ஆணையத்தை மட்டும் குறை சொல்லக் கூடாது. நகரைச் சுற்றியுள்ள ஐந்து சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். ஆனால்,மாநில அரசு வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் வெளிவட்டச் சாலையில் நான்கு புதிய சுங்கச்சாவடிகளைத் திறந்தது.133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு பணி முடிந்ததும் இவை செயல்படத் தொடங்கும்" என்றார்.இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில்,"லாரி ஓட்டுநர்களிடம் மாதம் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு இதுவரை ஏற்கவில்லை.தேர்தல் காலங்களில் இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது.ஏனென்றால் நிதின் கட்கரி சாலை அமைக்கச் செலவான தொகையைத் திரும்பப் பெற்ற சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும்60 கிமீ சுற்றளவில் இரு சுங்கச்சாவடிகள் இருந்தால் அதையும் நீக்குவோம் என்றார்.ஆனால், இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கட்காரி இப்போது ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என்கிறார். இதனால் நெடுஞ்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது அனைவருக்கும் பெரும் சுமையாக இருக்கும். குறிப்பாக லாரி ஓட்டுநர்களுக்கு இது கூடுதல் சுமையைத் தான் தரும்" என்று அவர் தெரிவித்தார்.