25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 01, 2026

எரிபொருள் சேமிப்பிற்காக விமான நிறுவனங்கள் செயற்கைநுண்ணறிவை நாடுகின்றன.

விமான எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இண்டிகோ நிறுவனம் தனது ஏர்பஸ் விமானங்களில் 'ஆப்டிகிளைம்ப்' (OptiClimb) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைச் சோதனை அடிப்படையில் இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.முக்கியப் புள்ளிகள்:செயல்பாடு: விமானம் புறப்பட்டு மேலேறும் போது (Climb phase) வழக்கமான சீரான வேகத்திற்குப் பதிலாக, AI பரிந்துரைக்கும் மாறுபட்ட வேகங்களைப் பயன்படுத்தி எரிபொருள் சேமிக்கப்படும்.இலக்கு: இதன் மூலம் ஒவ்வொரு முறை புறப்படும்போதும் 60-65 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும்.கூட்டணி: உலகின் முன்னணி விமான இயக்கத் தீர்வு நிறுவனமான 'சீட்டா' (SITA) உடன் இணைந்து இண்டிகோ இதனைச் செயல்படுத்துகிறது.பாதுகாப்பு: வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) விதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே இந்த AI தொழில்நுட்பம் இயக்கப்படும்.இந்தச் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து, தனது அனைத்து ஏர்பஸ் விமானங்களிலும் இதனை நிரந்தர அம்சமாக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது.

Jul 01, 2026

பாஸ்போர்ட்டுக்கு தடையில்லை- அருமையான தீர்ப்பு .

FIR-ஐ மட்டுமே காரணமாகக் கொண்டு ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது; குற்ற வழக்கில் FIR பதிவு செய்யப்பட்டதால்  அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை என மதுரை உச்ச நீதிமன்ற கிளை உத்தரவு.ஒரு நபரின் அடிப்படை உரிமையான வெளிநாடு செல்தும் உரிமையை, வெறும் FIR பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மறுப்பது நியாயமல்ல என நீதிமன்றம் கருத்து.இது மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு.

Jul 01, 2026

நம்பவே முடியாத உண்மை.

வாஸ்லைனை (Vaseline) கண்டுபிடித்த ராபர்ட் செஸ்ப்ரோ, அதன் மருத்துவக் குணங்கள் மீதுஎவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன்வாஸ்லைனைச் சாப்பிடுவதையும், உடல்நலக் குறைவின் போது உடல் முழுவதும் அதைத்தடவிக்கொள்வதையும் தனது வாழ்நாள் வழக்கமாகவே வைத்திருந்தார். பலதசாப்தங்களாக இந்த விசித்திரமான பழக்கத்தைப் பின்பற்றிய அவர், உடல்நல பாதிப்புகள் இன்றி தனது 96-வது வயது வரை வாழ்ந்து காட்டியது மருத்துவ வரலாற்றில் இன்றும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. ஒரு தயாரிப்பின் மீது ஒருவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். வாஸ்லைன் (பெட்ரோலியம் ஜெல்லி) ஆரோக்கியமானது என்று நம்பி ராபர்ட் செஸ்ப்ரோ சாப்பிட்டாலும், தற்கால மருத்துவ உலகம் இதை உணவாக உட்கொள்வதற்குப் பரிந்துரைப்பதில்லை.

Jun 30, 2026

மும்பை மெட்ரோவை பாராட்டிய அமெரிக்க இளம்பெண்!

மும்பை மெட்ரோவில் முதல்முறையாக பயணம் செய்த அமெரிக்க இளம்பெண் ஒருவர், அதன் தூய்மை, ஒழுங்கு மற்றும் குறைந்த கட்டணத்தைப் பார்த்து வியந்துள்ளார்.நியூயார்க் சப்வேயுடன் ஒப்பிடுகையில், மும்பை மெட்ரோ மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், பெண்களுக்கான தனிப் பெட்டி வசதி அமெரிக்காவில் கூட இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். "பொதுப் போக்குவரத்தை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்ற அவரது வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Jun 30, 2026

பாஸ்போர்ட் கட்டணம்  , புதிய கட்டண விவரங்கள்.

வரும் ஜூலை 1 முதல் உயரும் பாஸ்போர்ட் கட்டணம். 36 பக்க பாஸ்போர்ட் ( சாதாரண ) - (பழைய )1500 ரூபாயிலிருந்து ( புதிய )2500ரூபாயாகவும். 36 பக்க பாஸ்போர்ட் தட்கல் - 3500 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாகவும். 60 பக்கம் பாஸ்போர்ட் ( சாதாரண ) - 2000 ரூபாயிலிருந்து 3500 ரூபாயாகவும். 60 பக்க பாஸ்போர்ட் தட்கல் - 4000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும். காவல் துறை சான்றிதழ்  ( PCC )- 500 ரூபாயிலிருந்து 750 ரூபாய்.

Jun 30, 2026

ஜூலை 1 முதல் அமலாகும் 6 முக்கிய மாற்றங்கள்.

 எல்பிஜி விலை: வணிக மற்றும் வீட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் புதிய திருத்தம் அறிவிக்கப்படலாம்.ஆதார் புதுப்பிப்பு: ஜூலை முதல் டிசம்பர் 2026 வரை ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம்.ரயில் அபராதம்: டிக்கெட் இல்லாமல் அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்தால் குறைந்தபட்ச அபராதம் ₹250-ல் இருந்து ₹500 ஆக உயர்கிறது.எரிபொருள் விலை: CNG, PNG மற்றும் விமான எரிபொருள் (ATF) விலைகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.HDFC கிரெடிட் கார்டு: Regalia Gold கார்டில் இலவச விமான நிலைய லாஞ்ச் வசதிக்கு காலாண்டுக்கு ₹60,000 செலவு கட்டாயம்.வங்கி விடுமுறை: ஜூலை மாதத்தில் வார இறுதி மற்றும் பண்டிகைகள் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.மாநிலங்களுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.

Jun 29, 2026

மனித மூளைக்கு ஈடு இல்லை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வந்தாலும், ஆற்றல் பயன்பாட்டில் மனித மூளையின் திறனை இன்னும் எட்ட முடியவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சிக்கலான கணக்கீடுகள் மற்றும் தகவல் செயலாக்கங்களை மேற்கொள்ள மனித மூளை வெறும் 12 முதல் 20 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. ஆனால் அதே அளவிலான பணிகளைச் செய்ய உயர்தர ஏஐ கணினி அமைப்புகளுக்கு சுமார் 2.7 பில்லியன் வாட்ஸ் மின்சாரம் தேவைப்படுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.மிகக் குறைந்த மின்சாரத்தில் அதிக செயல்திறனுடன் இயங்கும் மனித மூளை, இயற்கையின் அதிசயமான படைப்பாகவே தொடர்ந்து திகழ்கிறது. ஆற்றல் சிக்கனத்தில் மனித மூளைக்கு நிகராக ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர வேண்டிய நிலை இருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

Jun 29, 2026

சத்தீஸ்கரில் வைரம் கண்டுபிடிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசமுந்து மாவட்டத்தில் உள்ள பலோடா–பெல்முண்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மொத்தம் 1.22 காரட் எடை கொண்ட 5 வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவற்றில் 2 வைரங்கள் உயர்தரத் தரத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அப்பகுதியில் வைர வளம் இருக்கக்கூடும் என்பதற்கான முக்கிய ஆரம்ப ஆதாரமாக கருதப்படுகிறது.இருப்பினும், அங்கு வணிக ரீதியில் வைரச் சுரங்கம் அமைத்து தோண்டுவது குறித்து விரிவான புவியியல் மற்றும் கனிமவள ஆய்வுகள் முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jun 29, 2026

அரிசி உற்பத்தியில் இந்தியா உலக சாதனை.

உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர் நாடாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா சுமார் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்துள்ளது. அதே நேரத்தில் சீனாவின் உற்பத்தி 145 மில்லியன் டன்னாக உள்ளது. இந்திய விவசாயிகளின் உழைப்பு, மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித் திறன் உயர்வு ஆகியவற்றின் விளைவாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது.

Jun 29, 2026

3 நாளில் ரூ.620 பில்லியன் டாலர் மதிப்பு சரிவு!!. ( SPACE X )

ஐபிஓ மூலம் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சுமார் 23% வரை சரிந்துள்ளன.இதன் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 620 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இழப்பின் மதிப்பு, இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பை விட சுமார் மூன்று மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.இருப்பினும், 2 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்புடன், ஸ்பேஸ்எக்ஸ் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 136 137

AD's



More News