செஸ்:உலக கோப்பை பைனலில் திவ்யா-ஹம்பி .
புதிய வரலாறு படைத்த உலக கோப்பை பைனலில் முதன் முறையாக முன்னேறிய இந்தியாவின் திவ்யா, ஹம்பி. , உலக சாம்பியன் ஷிப் தகுதிப் போட்டி யில்('கேண்டிடேட்ஸ்' செஸ்,2026) பங்கேற்கும் வாய்ப்பு பெற்றனர். உலக கோப்பை வெல்பவருக்கு ரூ. 43.23 லட்சம் பரிசு கிடைக்கும். இரண்டாவது இடம் பெற்றால் ரூ.30.26 லட்சம் தரப்படும்.
திவ்யா 19, ஹம்பி 38, மோதும் பைனல் இன்று துவங்குகிறது. இதில் இன்று, நாளை என இரு போட்டிகள் நடக்கும். இதில் முதலில் 1.5 புள்ளி பெறுபவர் உலக கோப்பை கைப்பற்றலாம். மாறாக இரு போட்டியும் 'டிரா' (1.0-1.0) ஆகும் பட்சத் தில், ஜூலை 28ல் 'டை பிரேக்கர்' நடக்கும்.
0
Leave a Reply