25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jun 20, 2026

புளிய விதையால் நுண்பிளாஸ்டிக் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இந்திய மாணவர்கள்.

16 வயதான இந்திய மாணவர்கள் அவ்யானா மேத்தா, அரியானா அகர்வால் மற்றும் விவான் சாவ்ச்சாரியா ஆகியோர், கழிவுப் புளிய விதைகளில் இருந்து தயாரித்த ‘பிளாஸ் ஸ்டிக்’ என்ற தூள் மூலம் குடிநீரில் உள்ள நுண்பிளாஸ்டிக் துகள்களை எளிதில் அகற்றும் புதுமையான தீர்வை உருவாக்கியுள்ளனர்.மின்சாரம் அல்லது விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லாத இந்த கண்டுபிடிப்புக்காக, அவர்கள் 2026-ம் ஆண்டு உலகின் முக்கிய சுற்றுச்சூழல் விருதுகளில் ஒன்றான ‘தி எர்த் பிரைஸ்’ விருதை வென்ற முதல் இந்தியக் குழுவாக சாதனை படைத்தனர். மேலும், நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு பயிலரங்குகளையும் நடத்தியுள்ளனர்.

Jun 20, 2026

சென்னை நீர்வழிகள் மேம்பாட்டுக்கு ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல்.

சென்னையின் முக்கிய நீர்வழிகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைத்து மேம்படுத்துவதற்காக ரூ.7,500 கோடி நிதியுதவிக்கு மத்திய அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டத்தின் முதல் கட்ட ஆதரவாக அமைகிறது.'நகர்ப்புற சவால் நிதியம்' (Urban Challenge Fund) மூலம் மொத்தம் ரூ.30,000 கோடி வரை நிதி பெற தமிழ்நாடு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) படிப்படியாக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளன.நீண்டகாலமாக மாசுபாடு மற்றும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மூன்று நீர்வழிகளையும் முழுமையாகப் புதுப்பிக்கும் பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கண்கூடாக நிறைவேற்ற மாநில அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Jun 19, 2026

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் அங்கீகாரமற்ற 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் முடக்கம்.

ரயில் பயணிகளுக்கு உணவு வழங்கும் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. மட்டுமின்றி, அதனால் அங்கீகரிக்கப்பட்ட பிற இ-கேட்டரிங் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.இந்நிலையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) சான்றிதழ் பெறாமல், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் சில அங்கீகாரமற்ற நிறுவனங்கள் இ-கேட்டரிங் சேவையின் பெயரில் உணவு விற்பனை செய்து வருவதாக பயணிகளிடமிருந்து புகார்கள் எழுந்தன.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கீகாரம் பெறாத 14 இ-கேட்டரிங் இணையதளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ ‘புட் ஆன் ட்ராக்’ (Food on Track) மொபைல் செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. அங்கீகரித்த உணவு வழங்குநர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jun 18, 2026

G7 மாநாட்டில் பிரதமர் மோடி.

52-வது G7 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். 'குளோபல் சவுத்' நாடுகளின் குரலாக இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, பொருளாதார வளர்ச்சி, சர்வதேச ஒற்றுமை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விவகாரங்களில் உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும் பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறார்.மேற்காசிய போர் காரணமாக எரிபொருள், உர விநியோக பாதிப்புகள் வளரும் நாடுகளை தொடர்ந்து பாதிக்கும் என மோடி கவலை தெரிவித்தார். இதன் தாக்கத்தை குறைக்க சர்வதேச ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று G7 மாநாட்டில் வலியுறுத்தினார்.

Jun 18, 2026

‘சென்னை ஒன்' செயலி மூலம்,1 ரூபாய் கட்டணத்தில்..!

 ‘சென்னை ஒன்' செயலி மூலம் வெறும் 1 ரூபாய் கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் ஒருமுறை பயணம் செய்யும் சிறப்பு சலுகை அறிவிப்பு!இந்தச் சலுகை ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

Jun 18, 2026

வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது.

 வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது2024-ம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமியின் நாடகத் துறையில் சிறந்த நடிப்பிற்கான விருது,வாகை சந்திரசேகருக்கு விருது!

Jun 17, 2026

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: இனி 5 நாட்களில் சான்றிதழ்கள்!

பொதுமக்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை இனி வெறும் 5 நாட்களுக்குள் வழங்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நடைமுறை என்ன?துரித சேவை: தாலுகா அலுவலகங்களில் உள்ள துணை வட்டாட்சியர்களுக்கு (Deputy Tahsildars) சான்றிதழ்களை உடனடியாக வழங்க கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட உள்ளது.அமலுக்கு வரும் காலம்: இந்த புதிய எளிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாருக்கெல்லாம் பெரும் பயன்?🎓 மாணவர்கள்: கல்லூரி சேர்க்கைக்காக (College Admission) சாதிச் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.💳 பொதுமக்கள்: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு பல மாதங்களாகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இனி வேலை சீக்கிரம் முடியும்.முக்கியத் தகவல்: சான்றிதழ் வாங்கும் நடைமுறையை எளிதாக்கியுள்ள இந்த பயனுள்ள செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உடனே பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்!

Jun 17, 2026

முடங்கிய மெட்டா சேவைகள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் சேவைகள் அண்மையில் உலகளவில் தற்காலிகமாக செயலிழந்தன. இதனால் பல பயனர்கள் தங்களது கணக்குகளில் இருந்து தானாகவே வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் உள்நுழைவதிலும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பதிவுகளைப் பார்க்கவும், செய்திகளை அனுப்பவும் முடியாமல் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாக மெட்டா தெரிவித்ததுடன், சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பின.

Jun 17, 2026

14 வயதில் மருத்துவத் துறையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி இளைஞர் சித்தார்த் நந்த்யாலா.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சித்தார்த் நந்த்யாலா, வெறும் 7 வினாடிகளில் இதய நோய் அபாய அறிகுறிகளை கண்டறிய உதவும் AI தொழில்நுட்பத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்."CircadiaV" எனப்படும் இந்த செயலி, இதயத் துடிப்பு ஒலிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் பகுப்பாய்வு செய்து, இதய நோய் அபாயத்தை விரைவாக அடையாளம் காண உதவுகிறது.இளம் வயதிலேயே மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை இணைத்து புதுமையான தீர்வை உருவாக்கியுள்ள சித்தார்த் நந்த்யாலா, பலருக்கும் உத்வேகமாக திகழ்கிறார்.

Jun 17, 2026

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை.

அசோக சக்ரா விருது பெற்ற வீரத் தமிழன் மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், சென்னை வேளச்சேரி–தாம்பரம் 16 கி.மீ. பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை தாம்பரம் மாநகராட்சி நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1 2 ... 30 31 32 33 34 35 36 ... 136 137

AD's