25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 07, 2024

முகேஷ் அம்பானி, நீதா அம்பானியின் இளைய வாரிசான ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இந்த ஆண்டு ஜூலையில் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண முன் வைபோக நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மூன்று நாட்களுக்கு மிகப் பிரமாண்டமான முறையில் நடந்தேறியது.இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். பிரபல பாப் இசை பாடகி ரிஹானா 6 மில்லியன் டாலர் கட்டணம் பெற்று இரண்டு மணிநேர நிகழ்ச்சியை நடத்தினார். திருமணத்திற்கு முந்தைய களியாட்டங்களுக்கு, மொத்தமாக ரூ. 1260 கோடி செலவானது,. திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகளின் ஆடம்பரம் விண்ணை முட்டிய நிலையில், திருமணத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ரூ 1200-1500 கோடி இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண விழாக்கள் லண்டனில் முக்கிய விழாவாகவும், அபுதாபியில் ஒரு இசை/காக்டெய்ல் நிகழ்ச்சிகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன.புகழ்பெற்ற மலர் கலைஞரான ஜெஃப் லீதம், கர்தாஷியன் குடும்பத்துடன் இணைந்து அலங்கரித்தார். திருமணத்துக்கு முந்தைய அலங்காரத்துக்கு தனது நிபுணத்துவத்தை சிறப்பாகக் காட்டினார். வரவிருக்கும் திருமணத்துக்கும் இதேபோன்ற ஆடம்பரமான அலங்காரத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இது இந்த ஆண்டின் மிகவும் ஆடம்பரமான திருமணங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் இந்த ஆண்டு ஜூலையில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. திருமணம் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்களுக்கு தேதி சொல்லப்பட்டு லண்டன் செல்வதற்கான விமான டிக்கெட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

May 07, 2024

சொந்த வீடா? வாடகை வீடா?..

பொதுவாகவே சொந்தவீடு வாங்குவதா? அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழுவது உண்டு. இந்த சந்தேகத்துக்கு தீர்வு அளிக்கும் வகையில் தி பாம்பே ஷேவின் கம்பெனியின் (The Bombay Shaving Company) தலைமை செயல் அதிகாரியான சாந்தனு தேஷ்பாண்டே தன்னுடைய பாட்கேஸ்ட்டில் விளக்கம் தந்துள்ளார். சாந்தனு தேஷ்பாண்டே, தற்போது குருகிராம் பகுதியில் பிரதான இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதற்காக இவர் செலுத்தும் மாதாந்திர வாடகை மட்டும் 1.50 லட்சம் ரூபாய் ஆகும்.பெரிய நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய நபர் ஏன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கிறார் அதுவும் 1.50 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துகிறாரே என்ற சந்தேகம் எழலாம். அதற்கு அவரே விரிவான பதிலையும் அளித்துள்ளார். ஹைதராபாத் அடிப்படையாகக் கொண்ட ஏஎஸ்பிஎல்(asbl) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அஜித்தேஷ் கொருபலு வாடகை வீட்டில் குடியிருந்து மாதந்தோறும் வாடகை செலுத்துவதை விட, அந்த தொகையை ஈஎம்ஐ-ஆக செலுத்தினால் உங்கள் பெயரில் ஒரு சொத்து உருவாகும், எனவே சொந்த வீடு வாங்குங்கள் எனக் கூறியிருந்தார். குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு ரியல் எஸ்டேட் என்பது சொத்துக்களை உருவாக்க கூடிய ஒரு வழிமுறை என அவர் கூறியிருந்தார். மாதத்திற்கு ரூ.1 லட்சம் வாடகை செலுத்துகிறீர்கள், நீங்கள் பத்தாண்டு காலத்திற்கு இந்த வாடகை செலுத்தினாலும் உங்களுக்கு அதனால் எந்த ஒரு சொத்தும் உருவாக போவதில்லை, ஆனால் இதுவே நீங்கள் ஒரு வீட்டை வாங்கி அதற்கான ஈஎம்ஐ செலுத்தினால் 10 -15 ஆண்டு காலத்தில் உங்கள் பெயரில் ஒரு சொத்து உருவாகி இருக்கும் எனக் கூறியிருந்தார்.இதற்கு பதில் அளித்துள்ள தேஷ்பாண்டே "ஒருவேளை ஹைதராபாத் வித்தியாசமாக இருக்கலாம், நான் வசிக்கும் குருகிராமை கணக்கில் கொள்வோம், பராமரிப்பு உட்பட ஒரு மாதத்திற்கு 1.6 லட்சம் ரூபாயை நான் வாடகையாக செலுத்துகிறேன். நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பானது தோராயமாக 8 கோடி ரூபாயாக இருக்கும். நான் இந்த அப்பார்ட்மெண்ட்டை வாங்க வேண்டும் என்றால் நான் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு வீட்டு கடன் வாங்க வேண்டியது இருக்கும். இதற்காக நான் மாதாந்திர தவணையாக 6 முதல் 7 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். என்னுடைய வாடகை தொகையை விட இது நான்கு மடங்கு அதிகம். ஆனால் நான் இப்போது ஈஎம்ஐ நான்கில் ஒரு பங்கை தான் வாடகையாக செலுத்துகிறேன். எனவே கடன் வாங்கி சொந்த வீட்டை வாங்குவதைவிட வாடகை வீட்டில் குடியிருப்பது தான் சிறந்தது" என அவர் கூறியுள்ளார்."அலுவலகத்திற்கு அருகிலேலேயே வசிப்பதை தான் நான் விரும்புகிறேன். இதுவே சொந்த வீடாக இருந்தால் என்னால் அடிக்கடி வீட்டை மாற்ற முடியாது. குழந்தைகளின் தேவைக்கேற்ப நான் இரண்டு படுக்கையறை அல்லது மூன்று படுக்கை அறை என தேவைக்கேற்ப பெரிய அளவிலான வீட்டிற்கு என்னால் மாற இயலும் ஆனால் சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் என்னால் அதனை மாற்ற முடியாது" என தெரிவித்துள்ளார்.

May 06, 2024

அடுத்த 5 ஆண்டுகளில் டிக்கெட் புக் செய்யும் அனைத்து பயணிளுக்கும் எளிதாக கன்பார்ம் டிக்கெட் கிடைக்கும் சூழல் உருவாக்கப்படும் 5ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்

 நமது நாட்டில் மிக முக்கியமான பொது போக்குவரத்து என்றால் அது ரயில்வே துறை தான்.. நமது நாட்டில் குறைந்த செலவில் எங்கு வேண்டுமானாலும் ரயில்கள் மூலம் செல்ல முடியும். இருப்பினும், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது இன்னுமே குதிரை கொம்பாகவே இருக்கும். முக்கிய ரூட்களில் எப்போதும் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்களிலேயே இருக்கும். இதற்கிடையே இந்த சிக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயில்வே அமைச்சர் தகவல்: அதாவது அடுத்த 5 ஆண்டுகளில், பயணம் செய்ய விரும்பும் எந்தவொரு பயணியாலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை எளிதாகப் பெற முடியும் என்றும் இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதம் என்றும் என்று மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே துறையில் எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதை விளக்கி  முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை பிரதமர் மோடி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்., "அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்வேயின் திறன் அதிகரிக்கப்படும் என்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம்.. யார், எப்போது, எங்கு பயணிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட் எளிதாக கிடைக்கும் சூழல் உருவாக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அஸ்வினி வைஷ்னவ், கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே எப்படி மாற்றமடைந்துள்ளது என்பதை விளக்கினார். முந்தைய ஆட்சிகளை காட்டிலும் மோடி ஆட்சியில் அதிக தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.ஒப்பீடு: இது தொடர்பாக அவர் பேசுகையில், "முந்தைய ஆட்சியில், அதாவது 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், ரயில் பாதைகள் அமைக்கும் பணி மிகவும் மெதுவாக இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் அவர்கள் 17,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில்வே பாதைகளை அமைத்தனர். அதேநேரம் மோடி பிரதமரான பிறகு 2014 முதல் 2024 வரை, 31,000 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் பாதைகளை அமைத்துள்ளோம். 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் 5,000 கிமீ தொலைவிற்கு மட்டுமே ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. அதேநேரம் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில், 44,000 கிமீ ரயில்பாதையை முழுமையாக மின்மயமாக்கிவிட்டோம். 2004-2014 வரையிலான காலத்தில் 32,000 ரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் 54,000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் தாண்டி 2014 வரை நமது நாட்டில் பிரத்யேக சரக்கு வழித்தடம் என்று ஒரு கிமீ கூட இல்லை. ஆனால், இப்போது இரண்டு ரூட்களில் சுமார் 2,734 கி.மீ. தொலைவிற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் உள்ளன. இது தவிர ரயில்வே துறையை மேம்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம்.. அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே நிச்சயம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். என்று அவர் தெரிவித்தார்.

May 06, 2024

சூரிய ஒளியால் ‘காற்று’

மரம் ஆடுவதால் காற்று வீசுகிறதா, காற்று வீசுவதால் மரம் ஆடுகிறதா என கேட்டால் காற்று வீசுவதால் தான் மரங்கள் ஆடுகின்றன. சூரிய வெப்பம் நிலத்தையும் கடல் நீரையும் சூடுபடுத்தும், இது அனைத்து இடத்திலும் ஒரே அளவு இருக்காது. எனவே ஒப்பீட்டளவில் கூடுதல் சூடு அடைந்த பகுதியிலிருந்து வெப்பமுறும் காற்று, திணிவு குறைந்து மேலே எழும்பும். இந்த குறை காற்றழுத்தப் பகுதியை நோக்கி, உலகின் பிற பகுதியிலிருந்து காற்று செல்லும். இதுவே காற்று வீசுவது என கூறுகிறோம். எனவே அடிப்படையில் காற்று வீசுவது சூரிய ஒளியின் வினையால்தான்.

May 04, 2024

கொசு விரட்டியாக மாறும் எலுமிச்சை தோல்

நாம் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி விட்டு அதன் தோலை கீழே வீசி விடுவது வழக்கம். ஆனால் நாம் கீழே வீணாக்கக்கூடிய அந்தத் தோலை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கு பல்வேறு ஹேக்குகள் உள்ளன. எலுமிச்சை அவற்றில் உள்ள அமிலத்தன்மை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக அற்புதமான சுத்தப்படுத்தியாக செயல்படுகின்றன. எலுமிச்சை சாற்றில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக அது கிரீஸ் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு கறைகளை அகற்றுவதற்கு உதவுகிறது. மேலும் எலுமிச்சை பழத்தில் காணப்படும் சிட்ரிக் அமிலம் இயற்கை ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்பட்டு, காய்கறி நறுக்கக்கூடிய போர்டுகள் அல்லது கவுண்டர் டாப் போன்ற மேற்பரப்புகளை பளபளக்க செய்து, அவற்றில் உள்ள கறைகளை நீக்குகிறது..எலுமிச்சை தோலை ஒரு கிரேட்டர் பயன்படுத்தி சீவி அதனை பல்வேறு உணவுகள், இனிப்பு வகைகள், சாலட் மற்றும் பானங்களில் சேர்ப்பது அதன் சுவையை அதிகப்படுத்துவதற்கு உதவும். எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா அல்லது வினிகர் போன்ற இயற்கை சுத்தப்படுத்தும் ஏஜெண்டுகளுடன் கலந்து பயன்படுத்தும் பொழுது அது மேற்பரப்புகளில் உள்ள கிருமிகளை அகற்றுவதற்கு உதவுகிறது. மேலும் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் மேற்பரப்புகள் வாசனையாக இருப்பதற்கும் எலுமிச்சை உதவுகிறது.பிழிந்த எலுமிச்சை தோலை குடுவை போல மாற்றி அதில் கிராம்பு, எண்ணெய் மற்றும் சிறிதளவு கற்பூரம் போன்றவற்றை சேர்த்து திரி வைத்து விளக்கு ஏற்றி வைக்கும் பொழுது, இது கொசு விரட்டியாக செயல்படுகிறது. இதிலிருந்து வரக்கூடிய வாசனை பூச்சிகளை அகற்றுவதற்கும் உதவுகிறது. மேலும் இது இயற்கை ரூம் ஃபிரஷ்னராகவும் செயல்படுகிறது. கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்டுவதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளையும் பெஸ்டிசைடுகளையும் நாம் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அவை கொசுக்களையும் பூச்சிகளையும் விரட்டுவதோடு மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. எனவே இது போன்ற இயற்கை ஹேக்குகளை பின்பற்றுவது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா மற்றும் உப்புடன் கலக்கும் பொழுது அது ஒரு இயற்கை சுத்தப்படுத்தும் பேஸ்டாக மாறுகிறது. சமையலறை மேற்பரப்புகள் சிங்குகள், காய்கறி நறுக்கும் போர்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கும் அவற்றை ஃபிரஷ்ஷாக வைப்பதற்கும் இது உதவுகிறது. எனவே இனி எலுமிச்சை தோலை கீழே எறிந்து விடாமல் அதனை மீண்டும் பயன்படுத்துவ து , பணத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இயற்கையான முறையில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாமல் செயல்படுவதற்கு ஏற்றது.

May 04, 2024

உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையில் வசிக்கும் இந்தியப் பெண்!

குஜராத் மாநிலம்,வதோராவின் மையப் பகுதியில்கம்பீரமாக அமைந்துள்ள லட்சுமி விலாஸ்அரண்மனைதான் உலகின் மிகப்பெரியதனிக் குடியிருப்பு என்ற பெருமையைகொண்டுள்ள ஒரு கட்டிடக்கலைஅதிசயம் ஆகும். இது1880களில் மகாராஜா சாயாஜிராவ்கெய்க்வாடால் கட்டப்பட்ட இல்லம் மட்டுமல்ல,பரோடாவை ஆண்ட கெயிக்வாட்வம்சத்தின் கம்பீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் இது சான்றாகத்திகழ்கிறது.இந்தோ - சாரசெனிக் மறுமலர்ச்சி கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட லட்சுமி விலாஸ் அரண்மனைஇந்திய மற்றும் ஐரோப்பியகலைபாணிகளின்அதிசயகலவையைகொண்டுள்ளது.சிக்கலானசெதுக்கல்களாலும்பலவண்ணமர்மத்தாலும்அலங்கரிக்கப்பட்ட அதன் கம்பீரமான கட்டமைப்புஅனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய காட்சிஆகும்.இந்த அரண்மனையில்170க்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு அறையும் அற்புதமான கலைப் பொக்கிஷங்களாலும், தளவாடங்களாலும் நிறைந்துள்ளன. கெயிக்வாட் வம்சத்தினர் இன்றும் இந்த அரண்மனையின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும், அவர்கள் தங்களின் முன்னோர்களின் பாரம்பரியத்தையும் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர்.ஐநூறு ஏக்கர் பரப்பளவில் கவனமாகப் பராமரிக்கப்படும் தோட்டங்கள், மலர்ச் சோலைகள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்தையும் இந்த அரண்மனை கொண்டுள்ளது. ‘ஹவுசிங் டாட் காம்’ன் அறிக்கைபடி லட்சுமி விலாஸ் அரண்மனை மூன்று கோடியே நான்கு லட்சத்து 92 ஆயிரம் சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.15,000 கோடிக்கு உலகின் விலையுயர்ந்த குடியிருப்பைக் கொண்டுள்ள முகேஷ் அம்பானியின்48 ஆயிரத்து780 அடி சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்ட குடியிருப்பை விட இது நான்கு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது.கெய்க்வாட் வம்சத்தின் அரச தலைமுறையாக தற்போது ரதிகராஜே கெய்க்வாட் இந்த அரண்மனையில் வசித்து வருகிறார். ஜூலை 19,1978ல் பிறந்த இவர், வாசிப்பதிலும் எழுதுவதிலும் விருப்பமுள்ளவர். அத்துடன் இவர், டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்று, செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

May 04, 2024

இனி 7 நாடுகளில் நாம் ( UPI ) யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புரட்சிக்கு வித்திட்ட ஒரு அமைப்பு தான் யுபிஐ எனப்படும் யுனிஃபைடு பேமெண்ட் இண்டர்ஃபேஸ். சிறு வியாபாரத்தில் தொடங்கி, தனிநபர்களுக்கு இடையிலான பண பரிமாற்றம், பெரிய பெரிய கடைகளில் பொருட்களுக்கு பணம் செலுத்துவது என அனைத்தையும் எளிதாக்கிவிட்டது யுபிஐ.இந்தியாவில் யுபிஐ சேவையானது பீம் செயலி மற்றும் கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யுபிஐ சேவையை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இந்தியாவின் யுபிஐ சேவைகள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் யுபிஐ சேவையை உலகமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலும் இந்தியர்கள் எளிமையாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்து கொள்ள பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் யுபிஐ சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு தான் யுபிஐ சேவைகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அங்கேயும் யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.முதன்முறையாக இந்தியாவின் யு பி ஐ சேவைகளை பயன்படுத்த அனுமதித்த நாடு பூடான் ஆகும். கடந்த 2021ஆம் ஆண்டு முதல், பூட்டானில் யுபிஐ சேவை பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பூடான், சிங்கப்பூர் , நேபாளம், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ,இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் எல்லாம் நாம் இந்தியாவில் பயன்படுத்துவதைப் போலவே யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம்.

May 04, 2024

, ‘சீனாவின் குகை கிராமம்’

,சீன நாட்டில் அமைந்துள்ள ஒரு பெரிய மலையின் குகையில் ஒரு கிராமமேGuizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் பகுதியில் அமைந்துள்ளஉள்ளது. கடல் மட்டத்திலிருந்து1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகையின் உள்ளே18 குடும்பங்கள் வசிக்கின்றன.நூறு பேர்கள் கொண்ட இந்த கிராமத்தை,‘சீனாவின் குகை கிராமம்’ என்று அழைக்கிறார்கள். சீனாவின் கடைசி குகை கிராமம் இது. வெளி உலகத்துடன் அதிக தொடர்பில்லாமல் இருக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது.இந்தக் குகைக்குள் வாழும் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்தது. ஆனால், சீன அரசு2008முதல் மக்கள் அந்தக் குகைக்குள் வாழ தடை விதித்ததுடன் அங்கு இயங்கிக் கொண்டிருந்த பள்ளியையும் மூடிவிட்டது. அது மட்டுமின்றி, அங்கிருந்து மக்களையும் வெளியேற அறிவுறுத்தியது. ஆனால், இங்குள்ள மக்கள் இந்தக் குகையை விட்டு வெளியேற விரும்பவில்லை. இங்கேயே வீடுகள் அமைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ்கின்றனர்.கடுமையான வெப்பம் மற்றும் குளிரிலிருந்து இந்தக் குகை அவர்களை பாதுகாப்பதாகக் கூறும் இவர்கள், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி பயில அனுப்புகின்றனர். இவர்கள் இரண்டரை மணி நேரம் கடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் படிக்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத இந்த கிராமத்தில்2000 ஆண்டிற்கு பின்னர்தான் மின்சார வசதி வழங்கப்பட்டது.1949ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தக் குகையில் அடைக்கலம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேயே தங்கி தங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே விவசாயம் செய்து வாழ்ந்து‌‌‌‌வருகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் மேற்படிப்புக்காக வெளியூர்களுக்குச் சென்றும் படித்து வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து இங்குள்ள குகை கிராமத்தைக் கண்டு வியந்து செல்கின்றனர்

May 04, 2024

இமெயில் சேவையான ஜிமெயிலுக்கு கூகுள் (Google) நிறுவனம் கொண்டுவரும் இந்த முக்கிய மாற்றம்

ஆயிரக்கணக்கான இமெயில்களால் குவிந்து கிடக்கும் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டில், எந்தெந்த இமெயில்கள் மிகவும் முக்கியமான இமெயில்கள் (Important Emails) மற்றும் எதெல்லாம் தேவை இல்லாத இமெயில்கள் (Unwanted Emails) என்பதை கண்டறிவதும், அவைகளை ஒழுங்கமைப்பதும் எப்போதுமே ஒரு கடினமான காரியமாகவே இருக்கும். 2000 அல்லது 3000-க்கும் மேற்பட்ட இமெயில்களால், உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் (Gmail Account) நிரம்பி வழிகிறதா?ஏனென்றால் 100-க்கு 80 பேருடைய ஜிமெயில் அக்கவுண்ட்கள் ஆனது ஸ்பேம் அல்லது நியூஸ்லெட்டர்களால் (Spam and Newsletters) நிரம்பியுள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக டெலிட் செய்வது அன்சப்ஸ்க்ரைப் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இதை செய்ய பல மணிநேரங்களை ஒதுக்க வேண்டியதாக இருக்கும். இந்த சிக்கலை சரிசெய்யும் நோக்கத்தின்கீழ் கூகுள் நிறுவனம் ஒரு புதிய ஜிமெயில் அம்சத்தை உருவாக்கி வருகிறது. சப்ஸ்கிரிப்ஷன் மேனேஜ்மென்ட் (Subscription Management) என்று அழைக்கப்படும் இந்த புதிய அம்சமானது, ஜிமெயில் பயனர்கள் தங்கள் இன்பாக்ஸில் எதை பார்க்க விரும்புகிறாரோ அதற்கான முழுக்கட்டுப்பாட்டை வழங்கும்.இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால்.. இந்த அம்சம் ஸ்பேம் மற்றும் விளம்பர இமெயில்களை தானாகவே கண்டறிந்து, அவைகளை வகைப்படுத்தி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மற்ற முக்கியமான இமெயில்களுக்கான இடத்தை ஒழுங்கமைக்கும். இதன் மூலம் எந்த இமெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எதற்கு அவசர கவனம் தேவை என்பதை எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இந்த அம்சம் ஜிமெயில் சைட்பாரில் (Gmail Sidebar) ஒரு புதிய டேப் (New Tab) ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கூடுதலாக, இந்த அம்சம் அனுப்புநரின் பெயர் மற்றும் லோகோவுடன் "அன்சப்ஸ்க்ரைப்" பட்டனையும் (Unsubscribe Button) வழங்கலாம், இது தேவையற்ற இமெயில்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும்.பல்க் செண்டர்கள் (Bulk Senders) அனைவரும் ஒரே கிளிக்கில் அன்சப்ஸ்க்ரைப் செய்யும் விருப்பத்தை (One-click unsubscribe option) சேர்க்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் உத்தரவிட்டு இருந்ததும், இந்த புதிய விதி வருகிற ஜூன் 2024 முதல் அமலுக்கு வரவுள்ளது என்பதும் இங்க குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து ஏப்ரல் 1 முதல் பல புதிய ஜிமெயில் விதிகள் (New Gmail Rules) அமலுக்கு வந்தன. அவைகள் அனைத்துமே.. ஜிமெயில் பயனர்களின் இன்பாக்ஸிற்கு வரும் ஸ்பேம் இமெயில்களின் அளவை குறைப்பதோடு சேர்த்து, ஜிமெயில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. முதலாவதாக, புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் அனுப்பப்படும் இமெயில்களானது கூகுளால் நிராகரிக்கப்படும். அடுத்ததாக ஒருமுறை பல்க் செண்டர் என்கிற ஸ்டேட்டஸை பெற்றுவிட்டால், அதற்கு எந்த விதமான காலாவதி தேதியும் இருக்காது. அவர்கள் நிரந்தரமாக பல்க் செண்டர் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.கடைசியாக, கூகுள் கொண்டுவந்துலால் சில கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன. மேலும் பல்க் செண்டர்கள் அனைவரும் டொமைன் அடிப்படையிலானமெசேஜ்அங்கீகாரம்,ரிப்போர்டிங்மற்றும்கன்ஃபார்ம்மென்ஸ்,டொமைன்கீஸால்அடையாளம்காணப்பட்டமெயில்மற்றும்செண்டர்பாலிசிஃப்ரேம்வொர்க்போன்றசிறந்தநடைமுறைகளையும்பயன்படுத்தவேண்டுமென்றுகேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனமானது அதன் ஜிமெயில் சேவையில் ஜெமினி ஏஐ-யின் திறன்களை (Gemini AI Capabilities) சேர்த்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜிமெயில் ஆப்பில் உள்ள ஹெல்ப் மீ ரைட் (Help me write) அம்சமானது, இனிமேல் வாய்ஸ் ப்ராம்ட்டிங் மற்றும் இன்புட்டை (Voice prompting and input) ஆதரிக்கும். அதாவது ஜிமெயில் ஆப்பில் உள்ள ஏஐ அசிஸ்டென்ட்டால் இனிமேல் உங்களுடைய குரலை கேட்க முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் ஜிமெயில் ஆப்பில் இருந்து தங்கள் குரலை பயன்படுத்தி இமெயில்களை அனுப்ப முடியும். மேலும் ஜிமெயிலில் உள்ள ஜெமினி ஏஐ-க்கு இன்ஸ்டன்ட் பாலிஷ் (Instant Polish) என்கிற புதிய அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் கீழ் ஒரே ஒரு கிளிக்கில் தோராயமான சில குறிப்புகளை (Rough Notes) மெருகூட்டப்பட்ட ஒரு மின்னஞ்சலாக (Polished Email) மாற்ற முடியும்.

May 04, 2024

சர்க்கரை இல்லாத இயற்கை சுவையுடன் வீகன் ஐஸ்க்ரீம்

 தாவரம் மற்றும் அதை சார்ந்த உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் வீகன் என்று அழைக்கப்படுகிறார்கள். பால் சார்ந்த பொருள்களையும் வீகன் டயட்டை பின்பற்றுபவர்கள் சாப்பிடுவதில்லை. அந்த வகையில் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பால் சேர்க்காமல் வெறும் காய்கறிகளை வைத்து ஐஸ்க்ரீம் தயார் செய்து சாப்பிடலாம்.கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்தும், வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும் பழரசம், உடலை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகள் என பலவற்றை நாம் எடுத்துக்கொள்வதுண்டு. அந்த வகையில் ஐஸ்க்ரீம்களும் கோடையின் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குளிர்விக்கும் டெஸ்ஸர்ட் வகை உணவாக இருந்து வருகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாக ஐஸ்க்ரீம் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக அதில் பால் சேர்க்கப்படுவதும், அதிக அளவில் சர்க்கரை இருப்பதாலும்தான். இவற்றுடன் அதன் குளிர்ச்சியான தன்மை சாப்பிட்டதுடன் உடலுக்கும், மனதுக்கு இதமான உணர்வை தருகிறது.கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாகவும், வீகன் பிரியர்கள் சாப்பிடும் விதமாகவும் இருந்து வரும் சில வீகன் ஐஸ்க்ரீம் வகைகளை பார்க்கலாம்.உடலுக்கும், மனதுக்கு குளிர்ச்சி தரும் வீகன் ஐஸ்க்ரீம் வகைகள் சிலவற்றை  பார்க்கலாம்.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 47 48

AD's



More News