தேனீக்கள் மனித இனத்திற்கு கிடைத்த வரம்.
தேனீக்கள் மென்மையானவை. ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூட்டில் இணைந்து வாழ்கின்றன. ஒவ்வொரு தேனீ கூட்டிலும் சுமார் 80 ஆயிரம் தேனீக்கள் வரை இருக் கும். இவை அனைத்தும் வேலைக்கார தேனீக்கள் ஆகும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 7 வாரங்கள்தான்.
இதேபோல், ஒரு தேன் கூட்டில் ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும். அதன் வேலை தொடர்ந்து தேனீக்களை உருவாக்குவதுதான். இதன் ஆயுட்காலம் சுமார் 5 ஆண்டுகள் வரை இருக்கும். ராணி தேனீ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடும். வாழ்நாள் முழுவதும் கிட்டத் தட்ட 10 லட்சம் முட்டைகள் இடும்.
தேனீ கூட்டில் இருக்கும் ஆண் தேனீக்கள் 'டிரோன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவை வேலைக்கார தேனீக்களை விட சற்று பெரியவை. அவற்றின் ஒரே வேலை ராணி தேனீயுடன் இனச்சேர்க்கை செயல் முறை நடத்துவது மட்டுமே. அது முடிந்தவுடன் ஆண் தேனீக் கள் உடனடியாக இறந்துவிடும்
இந்த சிறிய பூச்சி இனத்தின் வேலைக்கார தேனீக்கள் மணிக்கு 20 மைல் வேகத்தில் பறக்கும். சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து தேனை சேகரித்து வரும். ஒரு தேக்கரண்டி தேனை தயாரிக்க 8 தேனீக்கள் வாழ்நாள் முழுவதும் முழு நேரமாக உழைக்க வேண்டும்.
இன்றைக்கு, உலகம் முழுவதும் தேன் பரவலாக பயன்படுத்தப்படு கிறது. மனிதர்களுக்கும் தேன் ஒரு முக்கிய உணவாகும். ஏனெனில், அதில் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நொதிகள் மற்றும் அத் தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள் ளன. தேனீக்கள் மனித இனத்திற்கு கிடைத்த வரம்.
0
Leave a Reply