விவசாயிகள் மற்றும் ' நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வளர்க்கும் ஒரு காய் ஏலக்காய்
பொங்கல் முதல் பிரியாணி வரை அவற்றின் கமகம மணத்திற்கு காரணம் ஏலக்காய். இது மசாலாக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏலக்காய் மற்ற அனைத்து மசாலா பொருட்களையும் விட விவசாயிகளுக்கு ஏற்றுமதி வருமானத்தை அள்ளி தருக
ஏலக்காய் பற்றிய தகவல்கள் வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியநாடு உலகின் மிகப்பெரிய ஏலக்காய் ஏற்றுமதி நாடாக உள்ளது. பொதுவாக, இரண்டு வகையான ஏலக்காய் இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களில் பயிரிடப்படும். இந்தியாவில் ஏலக்காய் அறுவடை காலம் என்பது ஆகஸ்டு - பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் ஆகும்.
ஏலக்காயின் முக்கிய சந்தைகள் கேரளாவில் குமுளி, வந்தன் மேடு, தேக்கடி, புலியர்மாலா ஆகிய பகுதிகளும், தமிழ்நாட்டில் போடி நாயக்கனூர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளும் ஆகும். கர்நாட காவில் சகலேஷ்பூர், சிர்சி ஆகிய இடங்களில் ஏலக்காய் ஏலம் நடைபெறுகிறது. கர்நாடகா மொத்த உற்பத்தியில் சுமார் 25 சதவீதம் ஏலக்காயை உற்பத்தி செய்கிறது. தமிழ்நாட்டில் ஏலக்காய் மொத்தம் 15 சதவீத உற்பத்தி என்ற அளவில் உள்ளது என்று கூறப்படுகிறது.
பொதுவாக, தென்மாநிலங்களில் உற்பத்தி ஆகும் இந்த ஏலக்காய்களுக்கு வெளிநாட்டில் அதிக வரவேற்பு இருப்பதால் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர். ஏலக்காய் கமகமக்கும் நறுமண மசாலா பொருள் என்பதையும் கடந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். புற்றுநோய் செல்களை தடுக்கும். செரிமான சிக்கல்களுக்கு உதவுகின்றது. சுவாசம் மற்றும் ஆக்சிஜன் பயன்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
0
Leave a Reply