பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் இரண்டாவது ஆண்டாக, சிறந்த வீராங்கனை ஆனார் பெலாரசின் சபலென்கா.
ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் (டபிள்யு. டி. ஏ.) சார்பில் பல்வேறு பிரிவுகளில், உலகின் பல்வேறு மீடியா இணைந்து தேர்வு செய்துவிருது வழங்கப்படுகிறது..
இதன்படி 80 சதவீத ஓட்டுகள் பெற்ற 2025 சிறந்த வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா 27, தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டில் செரினா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஸ்வியாடெக்கிற்கு (போலந்து) அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இவ்விருது பெற்ற வீராங்கனை ஆனார் சபலென்கா.
2025ல் ஆண்டுமுழுவதும், 75 போட்டியில் , 63 ல் வென்று உலகத் தரவரிசையில் 'நம்பர் -1' வீராங்கனையாக நீடித்தார்.4 தொடரில் கோப்பை வென்ற சபாலென்கா, 9ல் பைனலுக்கு முன்னேறினார். கிராண்ட் லாம் அரங்கில் யு.எஸ்., ஓபன் பட்டம் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனில் பைனலுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply