நாம் உண்ணும் உணவுக்கும் நம் தூக்கத்திற்கும் உள்ள தொடர் பைப் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., என்ற சர்வதேச அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், தூக்க முறை யும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நம்முடைய உணவில் மாவுச்சத்து, பல வகை யான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.மெக்னீசியம், பொட்டாசியம். சோடியம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் உள்ளன. ஒவ்வொரு சத்தும் தூக்கத்தை எப்படி பாதிக்கின்றன என்று கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கம்.ஆய்வின் முடிவில் புரதம்,நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் தூக்கத்தைத் தரும் என்றும், அதிகமான சோடியம் உள்ள உணவுகள் துாக்கத்தைப் பாதிக்கிறது என்றும் தெரியவந் துள்ளது.கொழுப்பு நிறைந்த உணவு கள் சாப்பிடும் போது அடிக்கடி இரவில் தூக்கத்தின் இடையே எழுகின்ற சூழல் வருகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம் பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான நட் சத்திரங்கள் உள்ளன. அவற் றின் ஆயுள் முடியும்போது அவை வெடித்துச் சிதறும். இந்தப் பெரு வெடிப்பை 'சூப்பர் நோவா' என்று அழைப்பார்கள். நம்முடைய சூரிய மண்டலத் துக்கு அருகே இந்த சூப் பர் நோவா நடக்கும்போது அதன் தாக்கம் பூமியிலும் இருக்கும். பூமியில் பல - மாற்றங்கள் நிகழ்ந்ததற்கு இந்த சூப்பர் நோவாவும் காரணம் என்று விஞ்ஞா னிகள் கருதுகின்றனர்.நட்சத்திரங்கள் வெடிப்பின் போது, பலவிதமான கதிரியக்கங்கள் பிரபஞ்சம் முழுதும் பரவும். அவை பூமியையும் தாக்கும்.எப்படிச் சூரியனிலி ருந்து வருகின்ற சூரியப் புயல் பூமியில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அது போலவே இந்தக் கதிர் இயக்கங்களும் பூமியில் உள்ள உயிரினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 65 லட்சம்ஆண்டுகளுக்கு முன் பாக இப்படி நடந்த ஒரு நட்சத்திரவெடிப்பின் போது கதிரியக்க இரும்பு பூமியை வந்து அடைந்தது.ஒரு லட்சம் ஆண்டுக ளுக்கு முன்பாக நடந்த ஒரு நட்சத்திர வெடிப்பால்ஏராளமான காஸ்மிக் கதிர் கள் பூமியை வந்தடைந் துள்ளன.இந்த கதிரியக்கம் மிகவும் ஆபத்தானது. உயிரினங்களுடைய மரப ணுவில் மாற்றத்தை உரு வாக்கும் என்று பல ஆய் வுகள் தெரிவிக்கின்றன.25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் இருந்து 457 ஒளி ஆண்டுகள் தொலைவில் சில நட்சத் திரங்கள் வெடித்துள்ளன.இதே காலகட்டத்தில் ஆப்ரிக்காவில் சில ஏரிகளில் வாழ்ந்த வைரஸ்களில் வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் கதிரியக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே வைரஸ்கள் இவ்வாறு தங்களை மாற்றிக் கொண்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நுண்நெகிழிகளால் ஏற்படும் கேடுகள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். தற்போது மக்களால் பரவலாக உண்ணப்படும் கடல் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் இருப்பதை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ட்லாந்து மாநிலப் பல்கலை கண்டறிந்துள்ளது. இவற்றை உட்கொண்டால் நம் உடல் நலமும் பாதிக்கப்படும் என்கின்றனர்.
மைசெனா கிரோ கடா என்பது ஐரோப்பாவி லும், ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான்வகைகளுள் ஒன்று. இதற்கு ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று, தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இதைக் குறைப்பதற்கான நடவடிக் கைகள் உலகளாவிய அள வில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இது உரிய வேகத்தில் மேற் கொள்ளப்படவில்லை என் பதுதான் உண்மை.உலக வெப்பமயமாதலால் கடல் வெப்ப நிலையும் அதிகரிக் கிறது.இதனால் கடல் வாழ் உயிரினங்கள் கடு மையாக பாடுக்கப்ப பாதிக்கப்படு கின்றன. அவற்றில் சில விலங்குகள் மாறுகின்ற வெப்ப நிலைக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் துவங்கியுள்ளன.அவற்றுள்ஒன்று 'பச்சைஆமை', சைப்ரஸ்நாட்டில்மேற்கொள்ளப்பட்டஆய்வில், இதுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.வழக்கமாக இந்த ஆமைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் கரைக்கு வந்து முட்டை யிடும். ஆனால், கடலின்வெப்பநிலை அதிகரித்து வருவதால், வழக்கத்தை விட சீக்கிரமாக வந்து தங்களுடைய முட்டைகளை இட்டுச் செல்கின்றன.அதாவது கடலின் வெப்ப நிலை ஒவ் வொரு டிகிரி அதிகரிக்கும் போதும், 6.4 நாட்கள் முன் கூட்டியே இவை கரைக்கு வருகின்றன. ஏனென்றால் வெப்பநிலை அதிகரிக்கும் போது முட்டைக்குள்ளே இருக்கின்ற குஞ்சு அழிந்து போக வாய்ப்புள்ளது. வெப்பநிலை மாறுவதற்கு ஏற்ப தன் இனத்தைக் தற்காத்துக் கொள்வதற்காக இவ்வாறு ஆமைகள் இப் படிச் செய்கின்றன.ஆனால், இந்த யுக்தி நீண்ட நாள்களுக்குப் பயன் தராது. ஒரு கட்டத்தில் வெப்பநிலை கட்டுக் கடங்காமல் அதிகரிக்கும் போது, இந்த ஆமை இனமே அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்று என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். எனவே, வெப்பநிலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும்.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் 3G, 4G வசதியே கிடைக்காத நிலையில் சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் இன்னும் 5G நெட்வொர்க் முழுமையாக விரிவடையவில்லை என்று பேசிக்கொண்டிருக்கிறோம்.சீனாவின் ஹெபே மாகாணம், சுனான் மாவட்டத்தில் ஹுவாய் மற்றும் சீனா யூனிகோம் நிறுவனங்கள் இணைந்து, 50G PON தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 10G பிராட்பேண்டை செயல்படுத்தியுள்ளன. இதில் 9,800 Mbpsக்கும் அதிகமான டவுன்லோட் வேகம், 1,000 Mbps அப்லோட் வேகம் எனக் கூறப்படுகிறது. வெறும் 2 நொடிகளில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இத்தகைய நவீன இணையம், 8K வீடியோக்கள், கிளவுட் கேமிங், ஏஐ உள்நிறைந்த ஸ்மார்ட் ஹோம்கள், தொலை மருத்துவம் போன்ற உயர்நுட்ப சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவும் பின்னோக்கி இல்லை. பிரதமர் மோடி அறிவித்த 6G திட்டத்தின்படி, 2030ற்குள் இந்தியாவை 6G முன்நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக Bharat6GAlliance எனும்அமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது.,6G யுகத்தை நோக்கி எடுக்கப்படும் திட்டமிடல், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை உறுதி செய்கிறது.
நட்சத்திர மண்டலத்தில் ஏராளமான கோள்கள், கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் பூமியில் மட்டுமே தற்போது வரை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பூமி தவிர இதே போன்று வேறு சில கிரகங்களிலும் நிச்சயமாக உயிரினங்கள் வாழும் என்ற நம்பிக்கையோடு விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகின்றன. அவ்வாறாக இதுவரை உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உயிரினங்கள் நிஜமாகவே வாழும் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், K2-18b என்ற கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டை சல்பைடு உள்ளிட்ட வாயுக்களை கண்டறிந்துள்ளனர். இவை கடல்பாசிக்களால் வெளியிடப்படும் வாயுக்கள்.அந்த கிரகத்தில் இந்த வாயுக்கள் வெளிப்படுவதன் மூலம் கடல்பாசி உள்ளிட்டவை இருப்பதும், மேலும் சில உயிரினங்கள் அங்கு வசிக்கலாம் என்பதும் 98% உறுதியாகியுள்ளது. மேலும் அந்த கிரகமானது பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், அதிகமான நீர் பரப்பை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த இங்கிலாந்து ஆய்வுக்குழுவை வழிநடத்தியவர் இந்திய வம்சாவளியான விஞ்ஞானி நிக்கு மதுசூதன் ஆவார். வேறு உலகில் உயிர்கள் உள்ளதை இந்திய வம்சாவளி ஒருவர் கண்டறிந்துள்ளதை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ChatGPTயில் உரையாடுபவர்கள் Thanks மற்றும் Please போன்ற வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ள சாம் ஆல்ட்மேன் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இவ்விரு வார்த்தைகள் பயன்படுத்துவதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.ஏஐ டெக்னாலஜியின் முக்கிய அம்சமான ChatGPT உலகின் முன்னணி சாட்போட் ஆக இருந்து வருகிறது என்பதும், உலகில் பெரும்பாலானோர் இதை பயன்படுத்துகின்றனர் எனவும், எத்தனை சாட் போட்கள் போட்டிக்கு வந்தாலும், ChatGPTயை' அசைக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் Thanks, Please வார்த்தைகள் பயன்படுத்துவதால் பல டேட்டாக்கள் மற்றும் மின்சாரம் செலவாகும். எனவே, இந்த வார்த்தைகள் எந்தவித பயனையும் தராது என்றும், இந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் இல்லாமல் கேள்வி கேட்டால் மின்சார செலவுகளை மிச்சம் செய்ய உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ChatGPT என்பது ஒரு இயந்திர சாட்போட் என்பதால், Thanks, Please போன்ற வார்த்தைகளை எதிர்பார்க்காமல் செயல்படும் என சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியில் இரண்டாவது முறையாக செயற்கைக்கோள்களை,'ஸ்பேஸ் டாக்கிங்' பரிசோதனை திட்டத்தின் கீழ், 'இஸ்ரோ' வெற்றிகரமாக இணைத்துள்ளது.வரும் 2035க்குள், விண்வெளியில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது. 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தில், விண்வெளியில் செயற் கைக்கோள்களை ஒருங்கிணைத்து விடுவிக்கும் பரிசோதனையை மேற் கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.பி.எஸ்.எல். வி.,சி -60 ராக்கெட்வாயிலாக, இதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இரண்டு செயற்கைக் கோள்கள்ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, 2024 டிச., 30ல் விண்ணில் செலுத்தப்பட்டன. கடந்த ஜன., 16ல் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பட்ட செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. 'ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை , இதன் வாயிலாக, வெற்றிகரமாக மேற் கொண்ட நான்காவது நாடு, என்ற பெருமையை நம் நாடு அடைந்தது.ஒருங்கிணைப்பு நடந்த இரு மாதங்களுக்கு பின், இரண்டு செயற்கைக் கோள்களும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், 'ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தின் கீழ், விண் வெளியில் இஸ்ரோ வெற்றிகரமாக இரண்டாவது முறையாக செயற்கைக் கோள்களை இணைத்து உள்ளது.
அம்பர் என்பது கட்டியாக மாறிய மரப்பிசின். வரலாற்றில் முதல் முறையாக அன்டார்டிகாவில் இது கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இந்தப் பனி கண்டத்திலும் கூட மரங்கள் இருந்துள்ளன ,என்பதை இந்தக் கண்டு பிடிப்பு உறுதி செய்கிறது.